மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும். இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல், கு - சேர்க்கை, அ - சேய்மை விரிவு, இவற்றைக் குறுக்க, மக என்பது கிட்டுகிறது. கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.
மக என்ற மகவு, மகன், மகள், மக்கள் எனற் றொடக்கத்து பல சொற்களிலும் மகரமே முன்னிற்க, ஏன் அம் என்பது முதலில் நிற்கிறது என்று சொல்லுகிறோம் என்றால், அம் + அ என்பது ம + அ எனில் மக என்ற சொல்லாகும். அம் அ கு என்பது ம அ கு என்றாகி மக என்று சொல்கிறோம்! அமைப்பில் அங்கு சேர்ந்தது என்பது பொருள். இதுவே பிறப்பு ஆகும். இது ஒரு Reverse Formation through which certain words were formed. இதைப் பல ஆண்டுகட்கு முன்னே எழுதியிருக்கிறோம். ஆனால் இடைக்குறை முதலியவற்றுக்கு விரிவு கொடுத்ததுபோல் இந்தச் சொல்லமைப்பு முறைக்கு அவ்வளவு விரிவு கொடுக்கவில்லை. காரணம் ஒன்றுமில்லை, இடைக்குறைகள் அதிகம் இருந்தன என்பது தவிர. தொகுப்பும் இங்கு இடைக்குறையில் அடக்கியே
சொல்லப்படுகிறது. அமக என்று அமைத்து அது சொல்லுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது கண்டு, அமக என்பதை மக என்று நாளடைவில் வழங்கினர் என்க. இவ்வாறு செய்வது முதற்குறை என்பதால், இதில் இலக்கணத்தில்கூட இடமிருக்கிறது. நீங்கள் ஒரு கணக்கு எடுங்கள். மூன்று குறில்கள், உயிராயினும் மெயயாயினும் தொடர்ந்து வரும்படியாக எத்தனை சொற்கள் உள்ளன என்று பாருங்களேன். இரண்டு உயிர், உயிர்மெய் வர அடுத்து ஒற்று வந்த சொற்கள் மிகுதியாக இருக்கவேண்டும். யாம் கணக்கெடுக்கவில்லை. ஓர் உய்த்துணர்வாகச் சொல்கிறேன்.
மகன் என்ற சொல்லைப் படைக்கும் முனைப்பு, அமைவு குறிக்கும் அம் என்ற தொடக்கத்திலிருந்து தமிழன் அமைத்தான் என்றாலும், வீண் நீட்டத்தை விரும்பாமல் ஒரு முறையைக் கையாண்டு சொல்லைக் குறுக்கினான். அதனால் அதனால் சொல் அமகன் என்று அமையாமல் மகன் என்றே சுருங்கி அமைந்தது. அமைகன் என்றும் அவன் அமைக்கவில்லை.
ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஒலிமுறை அமைப்பைப் புரிந்துகொள்ளூங்கள்.
சமஸ்கிருதத்தில் இன்னும் முன்னேற்றமாக, ம, இர், உ, கு அம் என்று அமைத்து மகம் என்பதை ம்ரு கம் > ம்ருகம் என்று அமைத்துக்கொண்டனர்.
நனகு சிந்த்தித்து எனக்கு எழுதுங்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
You may share this post with your friends. though any social media.
Copyright is waived.