திங்கள், 5 மே, 2025

பள்ளத்தாக்கு

 இன்று பள்ளத்தாக்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

பள்ளம் என்பதில் எந்தக் கவனத்திற்குரிய திரிபும்  இல்லை. இதன் பொருள் நிலத்தின் உள்ளிறங்கிய பகுதி என்பதே. இது இயல்பான பொருள்.

தாக்கு என்பதில் கருதற்குரிய திரிபு உள்ளது. தாக்கு என்பது தாழ் > தாழ்க்கு > தாக்கு என்று அமைகிறது.

 இதில் வரும் தாக்கு,  வலி வருமாறு மோதுதல் என்று பொருள் படும் சொல் அன்று. மேற்காட்டியவாறு திரிந்த இன்னொரு சொல் ஆகும். இதில் வரும் திரிபும் தனிததன்மை உடை யது என்று கருதலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து  பயில்க.



வெள்ளி, 2 மே, 2025

விருத்தி, விருத்தியுரை

விருத்தி என்னும் சொல்லின் பொருளும் தோற்றமும் காண்போம்.

இதன் அடிச்சொல் விர் என்பது. விரிதல் , விரித்தல், விறைத்தல், விருத்தம் என்ற பல பத ங்கட்கு  விர் என்பது அடிச்சொல் ஆகும். வேகம், விரிவு, க ட்டியாகி நீட்சியும் பெறு தல்  எனப் பல நுட்ப வேறுபாடுகளைக் காட்டவல்லது இவ்வடியாகும்.இசையுடன் பாடுகையில் சற்று நீட்டிப் பாடும் வகையினது எனக் குறிக்க இப்பெயர் எழுந்தது என்க. விறைத்தலில் இடவிரிவும் கொள்வதும் கூடும் ஆதலின் விரி என்பதனுடன் இஃது ஒற்றுமைகொள்ளுதலும் உளதாகும்.

விருத்தப் பாக்கள் தமிழிற் பல வுள கோ . ஆதலின் இச்சொல் தமிழா சமஸ்கிருதமா வெனில் thamizhenREe தமிழே  என்று கோடலும் சரியாகும்.

விருத்தி என்பது விரித்தி என்பதன் திரிபு எனலும் ஒக்கும் 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க தமிழ் பரப்புக.


ப்





வியாழன், 1 மே, 2025

வருஷம் வருடம் என்பதற்கு இன்னொரு முடிவு

 வருடம் என்ற சொல்லுக்கு பல்வேறு சொல்லமைப்புக்களைக் கூறலாம், வருஷ என்பதை மழைவருங்காலத்தை முன்னிட்டு எழுந்த சொல் என்றும் கூறுவதுண்டு.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குவதால் தமிழ் மூலங்களைக் கொண்டு இதற்குச் சொல்லமைப்பைக் கூறுதலும் பொருத்தமே.

தமிழ் எண்ணிக்கையின் படி 12  மாதங்கள் கொண்டது ஒரு வருடம் ஆகும். ஒரு வருடத்தில் வரும் மாதங்களை அவை வரவர அவற்றைச்  மேல்சட்டை போடுவதுபோல் உடுத்துக்கொண்டு மாதம் முடிந்தது கழட்டி விடும் மாதமுறை உள்ளது.

வரு + உடு + அம் >  வருடம் ஆகிறது,   உடுப்பதைக் கழட்டி விடுவதும் இயல்பானதே. மாதங்கள் அப்படியே நகர்ந்து மறைந்து இன்னொரு வருடத்தில் மீண்டும் வரும்..  ஆகவே உடு ( உடுத்தல்) இங்கு நன்கு பயன்பெற்றது என்று கூறலாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.