சனி, 2 நவம்பர், 2024

தந்திர வாழ்த்துக் கவிதைகள்

 தினமும் வணக்கம் அனுப்பும் அன்பர்பலர்.  இரண்டுநாட்கள் காய்ச்சலாகப் போய்விட்டது.  ஆகவே விடுபட்ட எல்லா நாட்களுக்கும் சேர்த்து:

எம் வாழ்த்து இவ்வாறு அமைந்தது:

நேற்று இன்று நாளை

காலை மாலை

கனிந்த வணக்கம் இவ்வேளை


என்று பாடி அனுப்பினோம்.


கனிந்த மலர்களால்

காலை மகிழ்ச்சி

துணிந்த வாழ்வினில்

துணையாம் எழுச்சி.


என்றும் எழுதினோம்.


திங்கட் கிழமை

தீந்தமிழ் உரிமை

எங்கும் இனிமை

எதிலும் அருமை.


என்றும் வந்தது.


நாள்தொறும் வளரும் காலை வணக்கம்

பாலொடு தேனாய் இனிப்பது இணக்கம்.

நாளை இன்று நண்ணும் ,  மணக்கும்!

நன்மை உண்மை,  எண்ணில் இனிக்கும்.


இருநாளும் திருநாளாய்

இருக்கையில் திருக்கைகள்.

இணைக்கும் வணக்கம்.





உங்கள் சிந்தனைக்கு:-


எல்லாரையும் அணைத்துச் செல் என்னும்போது அண் என்பதன் பொருளை அணை என்பதில் தெரிந்துகொள்ளுங்கள்அண் என்பது அங்கிருப்பதனை உட்படுத்திக்கொள்வது என்பதாகப் பொருள்தரும்அனைத்தும்அனைவரும் என்ற பதங்களில் இச்சொற்கள் எல்லோரையும் உட்படுத்தியே செல்கிறதுஇது பொருளின்படி பார்த்தால் அணைவரும்அணைத்தும் என்றுகூட அமைந்திருக்கலாம்பொருளில் அழிவில்லை என்றாலும் சொல் அனைத்துஅனைவரும் என்றிருப்பதால் மரபின்படி அனை என்றுதான் நாம் சொற்றொடக்கம் செய்கின்றோம் என்பதறிகஆகவே அண் அன்.


வணக்கம்.


என்ன தந்திரம்,  சொற்சுவைதான்

வெள்ளி, 1 நவம்பர், 2024

அவதரித்தல் அவதாரம் அவிதருதல். மீள்தரவு விளக்கம்.

 அவதரித்தல் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம். இதை சொல்லியல் மூலமே திறத்தோடு அறியக்கூடும்.

அவம் என்பது அழிதல். இது தோன்றிய விதம்:

அவி - இச்சொல்லின் மூலவடிவம் அவ் என்பதாகும்.  அவு எனலும் ஆகும். என்றால் சேய்மையிலும் முன்னிலையிலும் என்று சுட்டடி வழியாக உணராலாம்.

சேய்மையிற் சென்றது இல்லாமல் ஆதல்.. நீரானது ஆவி ஆனபின் அது (உங்கள்) முன்னே இல்லாமல் போய்விடுகிறது.

ஆவி என்ற சொல்:

அவி > ஆவி, இது சுடு> சூடு என்பதிற்போல, முதல் நீண்டு தொழிற்பெயர் ஆகிறது. இது வடசொல் குடசொல் ஒன்றுமில்லை.  வடசொல் என்பவன் தமிழை ஆய்ந்து படிக்காதவன்.

நீரில் உள்ள உள்வளி  (gas) அவிழ்பட்டது  அது உருமாறி விட்டது. நீர் என்பது H20,  இரண்டு நீரகவளிப் பகவும் ஒரு உயிர்வளிப் பகவும் உள்ள அது அவிழ்பட்டுவிட்டது என்பது அறிவியல்.

அவி என்பதில் அகரம், இகரம் இரண்டையும் வகர உடம்படு மெய் கட்டிவைத்துள்ளது.

தரு -  தரி.  இது தரு+ இ.    தரவுபட்டு இங்கே வந்துவிட்டது என்று பொருள். ஆகவே அழிந்தது இங்கு மீண்டும் காட்சி தந்துவிட்டது என்று பொருள்.

இப்போது அவதரித்தல்:

ஆவியாய் ஒழிந்தது மீண்டு  வந்துவிட்டது என்பது பொருள்.

அறிவியற்படி எதுவும் அழிவது இல்லை எனலாம்.  எல்லாம் மீள்தோற்றம் கொள்கின்றன என்பதே உண்மை. வேற்றுரு. ஆவி எங்கே?

அவதரித்தல் என்ற சொல் இந்தக் கதையைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

அவதரித்தல் என்பதைத் தோற்றரவு என்று மீளமைப்புச் செய்தனர்.

தோன்று + அரு+ [வு  ( விகுதி)]

தோன்று என்பதற்குத் தொலைவுமூலமானது தொல் என்ற பழஞ்சொல்லே,

தொல்> தொன்று > தோன்று.

தொன்று தொட்டு உள்ளதே தோன்றுகிறது.

தமிழும் அறிவியலுடன் ஒட்டியே செல்கிறது.

தொல் என்பதற்கும் தோன்று என்பதற்கு உள்ள உறவு புரிகிறதா. இதுதான் தமிழ்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


புதன், 30 அக்டோபர், 2024

ஆப்தம் ஆப்த நண்பன் என்பது.

 இது அகப்பதம் என்பதன் திரிபு.

அக - ஆ.

இத்திரிபு அகப்படு என்பது ஆப்பிடு என்று மாறியதுபோலாம்.

அகத்துக்காரி > ஆத்துக்காரி.

பதம் -  பதிக்கப்பட்டது என்பது,  பதி அம்> பதம்.                                                                                                                                                                                        

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகம்நக நட்பது நட்பு. ( குறள் 786) 

இதன்மூலம் அகப்பதிவு உடையதே நட்பு என்று கூறப்பட்டது,

இவ்வளவு தெளிவாக தமிழ்மொழி இக்குறளில் இருப்பதனாலே சில வேற்றுநாட்டினர் குறள் பிற்காலத்தது என்று கூறுவாராயினர். பெரும்பாலும் திரிபுச்சொற்களைக் கூட இயற்றமிழில் குறைந்த அளவே வரவிட்ட காரணியினால் தமிழ் இன்னும் யாவர்க்கும் புரியும் வண்ணம் உள்ளது.
இது நிற்க:

நகுதல் என்பதற்கு ஒளிவீசுதல் என்ற பொருளும் உளது. முகம் நக - முகம் ஒளிவீசும்படியாக;  அகநக -  அகமொளி செய்யும்படியாக என்றும் பொருள்கூறுதல் கூடும்,

இதனினும் மேலான பொருளை இவ்வாறு கூறலாம்:  முகம் நக - முகத்தால் சிரிப்பு தோன்றும்படியாக.  அகம் நக -  அகத்தின் ஒளி வீசும்படியாக என்று உரைத்தல்.

நக்கத்திரம் என்பது நகுதல் திறமுள்ள வான்மீன் - ஆகும். ஒளிவீசுவது: இச்சொல்லும் தமிழே ஆகும்.  இது தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் கூட்டிய மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது,  புறநானூற்றுச் சொற்பொழிவுகள். இதை ஓர் இடுகையிலும் சொல்லியுள்ளோம். ( சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு).

ஆகவே தேவர் இங்கு அகமும் ஒளிவீச வேண்டுமென்று கூறுகிறார்.

பதி அம் > பதம் ஆகும்.  பதிவாவது,   பதம், பாதம் என்று காலுக்குப் பெயர் வந்ததும் நிலத்திற் பதிவாதலால்தான்.  பதம் என்பது அம் விகுதிபெற்ற தொழிற்பெயர்.    பாதம் என்பது விகுதி பெற்று முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  எடுத்துக்காட்டு:  சுடு அம்> சூடம்.  சுடு என்பது சூடு என்று நீண்டபின் அம் விகுதி ஏற்றது.

அகப் பதம் > ஆப்தம் என்றாகும். 

இருபகவொட்டு. portmenteau.  அகப்பதம் என்பதன் திரிபுத் தலையும் பதம் என்பதன் வாலும் கூடிப் பிறந்த சொல்.

அகத்திற் பதிந்த நட்பு என்று ஆப்த நட்புக்கு விளக்கம்.

ஆப்த என்பது ஒரு தமிழ்த் திரிசொல்.பூசைமொழியிலும் வழங்கும்,

பூசைமொழியாகிய சமஸ்கிருதம் பாணர் என்னும் மக்களால் பாட்டுடைத்தான மொழி.  இதிலிருந்து ஐரோப்பிய மொழிகள் கடன்பெற்றன.

இது உள்நாட்டு மொழியே  ஆகும். இதன் முதற்கவி வால்மிகியார் என்று  சொல்லப்படுபவர். ( வால்மீகி முனிவர். ) இனி மகாபாரதம் பாடியவர் ஒரு மீனவப்புலவர்.  பாணினி என்பவர் ஒரு பாணர்.  இது பாணர்மொழிதான்.

For a  different opinion on Sanskrit, you may read:


Why Sanskrit has strong links to European languages and what it learnt in India.  

Newer scholarship has shown that even though Sanskrit did indeed share a common ancestral homeland with European and Iranian languages, it had also borrowed quite a bit from pre-existing

https://indianexpress.com/article/research/why-sanskrit-has-strong-links-to-europea,  ,languages-and-what-it-learnt-in-india-6536674/

Sanskrit is a Panar language. At that time Panars were rulers in several regions in India.  Panars were Bards.

Romilla Thapar says that Sanskrit may have some foreign words. But is an Indian language.

Kuloththunga Chozhan defeated a Pana regime in Pungganoor.  Read history. Chozha Empire.

Follow us.  We give you citations and you can form your own opinion .




அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.