உருக்குவேதத்தில் 21 பகுதிகள் இருந்தன என்பர், இன்னும் பல பாடல்கள் அழிந்தன என்கின்றனர், இப்போது சிலவே கிடைத்துள்ளன. தமிழிலும் பல நூல்கள் அழிந்தன, அவை பெரும்பாலும் (பண்டைத் தமிழ்) இலக்கியங்கள். இவற்றை மீட்டுருவாக்குதல் இயலாத வேலை. இந்திய மொழிகளில் பாடியவர்கள் மிகுதி, கேட்டுப் பாதுகாத்தவர்கள் குறைவு. எஞ்சி இருப்பவற்றில் இன்றும் படிக்கப்படாமல் போய்க்கொண்டிருப்பவை பலவாம். இந்தியருள்ளும் குறிப்பாகத் தமிழருள்ளும் எங்களிடம் எல்லாம் உண்டு என்று சொல்வர் தவிர அவற்றை ஆழ்ந்து கற்போர் சிலரே ஒருநாளில் ஒருவர்கூட இருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.
இந்த நூல்களும் அதன் பாட்டுக்களும் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவை என்று வெள்ளைக்காரன் எழுதுதற்குக் காரணம், இவற்றை எல்லாம் மக்கள் தொடர்பு அற்றவையாக ஆக்கிலன்றி, துணைக்கண்டத்தில் இறைநலக் கோட்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டை அரசாள்வதில் வெற்றி எதையும் காணவியலாது என்பதனால்தான். நாம் கூறும் வெள்ளையர்கள் என்போர் கிழக்கியந்தக் குழும்பினர் காலத்து இந்தியாவை தம் ஆட்சிக் குட்படுத்தியோர். இப்போது உள்ளவர்கள் எந்நிறத்தவர் ஆயினும் இதில் தொடர்பில்லாதவர்கள்.
மெக்காலே பிரபு கூறுவதை மேற்கண்ட மேற்கோளில் கண்டுகொள்வீர். இந்திய மொழிகளை ஆரிய மொழிகள் என்றும் அல்லாதன என்றும் பிரித்ததும் இதனால்தான். இதன்மூலம் ஆரியர், அல்லாதார் என்ற பகுப்புப் போராட்டம் சூடுபிடித்தது. ஆரியர் படையெடுப்பு நிகழ்ந்தமைக்கு எந்தச் சான்றுமில்லை.
தமிழும் சமஸ்கிருதமும் ஓர் அடிப்படையினவாகும். எடுத்துக்காட்டு: அன்னம் என்பதும் அரிசி என்பதும் ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த சொற்கள்.
ஆய்வு நெறிப்படுகை என்று பொருள்படுவதே ஷாகல ஷாக என்று வேதத்தில் மாற்றிச் சொல்லப்படுகிறது. இதை "ஆகும் கலவை ஆக்கம்" அல்லது கலவைப் பட்டியல் அல்லது பொருட்கலவைப் பட்டியல் என்று சொல்லலாம். ஒரே சொல் வேண்டுமானல் " அடைவு" அல்லது பொருளடக்கம் என்னலாம்., இங்கு "ஆகும்" என்பது பயன் தருவது ஆகும் என்று பொருள். இதை "ஆ" ( ஆகும்) என்று சுருக்கிவிடலாம். கல என்பது பொருளடக்கக் கலவை, இறுதி ஷாக என்பது ஆக, அல்லது ஆக்கம்..
ஒலிப்பொருத்தம் உடைய சொற்களால் இதைப் பெயர்த்து எழுதினால்: ஆகக்கூடிய கலப்புப் (பொருள்)ஆக்கம் என்றுதான் வரும். ஆ கல ஆக > ஷாகல ஷாக.
ஆக என்பதை ஷாக என்றது தொல்காப்பியர் ஏற்றுக்கொள்ளாத திரிபு வகை. வேறுமொழி அன்று.
இதை censio என்ற இலத்தீன் சொல்லால் மொழிபெயர்த்துள்ளனர்.
திரிபுகள் ஓர் எல்லைக்குள் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பிய முனிவரின் கொள்கை. செய்யுளீட்டச் சொற்களில் திரிபுச் சொற்களையும் அடக்கினாரேனும், எல்லை மீறிய திரிதல்களை அவர் ஒதுக்கியே இலக்கணம் செய்தார்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.