ஆரண்யாகா என்பதன் மூலத்தை நோக்குவோம்.
இதனுடன் தொடர்பு உடைய சொல் அரண் என்பது.
அரண் என்ற சொல் பாதுகாப்பு என்று தமிழிற் பொருள்படுவதாகும். இதனைப் பிரித்தால் இதில் இரண்டு பகவுகள் உள்ளன. அரு என்பதொன்று. அண் என்பது இன்னொன்று. இவ்விரு பகவுகளும் இணைய, அரு என்பதில் உள்ள இறுதி ருகரம் ( ரு) நீங்கும். ( சந்தி இலக்கணத்தில் "கெடும்" என்பது).
அரு என்றால் அரிதாய்க் காணப்படுவது. அதாவது எங்காவது ஒரு முதன்மையான இடத்தில் அமைந்திருப்பது. இதன் முதன்மை யாதென்றால், இது போர்ப்படை நகர்வுகளுக்கு இன்றியமையாமை உடைய இடத்திலிருப்பது. அரண்கள் இருவகை. இயற்கையாக அமைந்த இடங்கள். காடு, மலை, ஆறு முதலியவைகளும் தாமே அமைந்த பாதுகாவலிடங்கள். செயற்கையாக அரசன் அமைத்து வைத்திருக்கும் அரண் என்பது கோட்டை மதில் அகழிகள் முதலியவை. இவை அனைத்தும் படைநடத்துவதற்கு இயல்பாகவே உதவும் இடங்களில் அமைந்திருக்கவேண்டும். எதிரி அணுகும் வழிகளை எதிர்நோக்கி இவை இருக்கவேண்டும். அரு என்ற சொற்பகவில் இப்பொருளெல்லாம் அமைந்திருக்கிறது.
அண் என்பது அண்மை அல்லது எளிதில் எட்டும் தொலைவில் இருப்பது என்று பொருள்.
இவ்விரு பகவுகளும் தமிழ் மூலங்களே.
கா என்பது காவல் அல்லது காப்பது என்று பொருள்படும். இது அரு என்ற சொல்லினைத் தெளிவுபடுத்தி 9 பொருளுக்கு ஒளியூட்டுகிறது என்று முடிக்கவேண்டும்.
எனவே ஆரண்யகா என்றால் அரணுக்குரிய காப்பு என்பதாம்,
ஆனால் வேதத்தில் இருந்து நோக்கினால் காட்டிலிருந்து கொண்டு உலக வாழ்விலிருந்து விலகித் தன்னைத் தான் ஆன்மீக நெறியில் காத்துக்கொள்வதுதான்.
வேய்தல் என்ற சொல்லும் வேய்+ து + அம் என்றாகி வேய்தம்> வேதம் என்று முடியும் சொல்லமைப்பு. அறிதற்கு ஆக்கம் செய்யப்பட்டது என்று பொருள். வேய்தல் என்பதும் தமிழ்ச்சொல்தான். இதில் அறிதலுக்கு என்பது வருவிக்கப்பட்டமையினால் இது காரண இடுகுறிப்பெயர் ஆகும்.
இதைப் பாடியோர் அல்லது சேர்த்துக் கட்டியோர் தமிழர்கள். அதனால் அவர்கள் தமிழ்ப்பெயரையே வைத்துள்ளனர்.
சமஸ்கிருதம் என்ற பூசைமொழி சமம் கதம் என்ற சொற்களால் ஆன சொல். சமம் என்றால் தமிழுக்குச் சமம், கதம் என்றால் ஒலி, கத்து> கது ( இடைக்குறை)>கது + அம் > கதம். கதமே பின் கிருதம் என்று மாறியுள்ளது. இது பூசைமொழித் திரிபு. மதங்கம் என்ற சொல் மிரு தங்கம் என்றானது காண்க. மத > மிருத, அதுபோல் கத> கிருத. சம் > சம என்றால் சமமான, அதாவது தமிழுக்குச் சமமான ஒலி. சமமான கிருதம். சமஸ்கிருதம். சமமான கதம். மதுரையை மஜ்ரா என்றதுபோல வெள்ளைக்காரன் சான்ஸ் கிர்ட் என்று மாற்றிக்கொண்டான். வித் என்ற சொல்லிலிருந்து வேத் என்றாகி வேதம் என்றானது என்று வெள்ளைக்காரன் சொன்னது அவனுக்கு வேண்டியபடியான திரிபு, மியன்மார் என்றதை பர்மா என்றதுபோல. பெய்ஜிங்க் என்றதை பீக்கிங்க் என்றான். இவை எல்லாம் ஆனந்தம்தான். பரமானந்தம். நாக்குத் திரும்பாவிட்டால்தான் ஆனந்தமெல்லாம் ஆரம்பம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.