வியாழன், 18 ஜூலை, 2024

பழைய நூல்கள் பகுத்தறிவீர்

வாழ்வெல்லாம் சொற்பனமே என்னும் போது 

சார்திகளும் பிரிவுகளும் கனவு தானே?

வாழ்விலிதே உண்மைஎன்ப திந்துப் போக்கு

சார்திஎன்ப தொன்றுமட்டும் உண்மை அன்று

சூழ்வதுவும் சுற்றியுள்ள எல்லாம் காணின்

சொந்தமாகும் வீட்டுக்கு  என்னும் சிந்தை

வாழ்சமயம்  ஒன்றனுக்குப் பொருத்த மில்லை

வளம்சாரும் இந்துவிலே  சார்தி இல்லை.


பண்டைநாளில் நூல்கள்துறை  பிரித்துப்  போட்டுக்

கொண்ட இதில் இதுவடங்கும்  என்பார் இல்லை.

ஒன்றுதுறை அதிற்கலவாப்  பொருளும் இல்லை;

சென்றதிலே கலந்திருக்கும் குறைகள் இல்லை;

வென்றபோர்க்  கதைகளிலெ குடும்பம் உண்டு;

வீழ்வு சாவு  மேற் செலவென்  றெல்லாம்  உண்டு!

இன்றையநூல் போலாமை பழமை நூல்கள்

இனிதவற்றைக் குழப்பாமல் உணர்ந்து காண்பீர்.


பொருள்:

சொற்பனம்:  சொப்பனம், ஸ்வப்பனம்

சார்தி  =  சாதி,  ஜாதி,  சார்பு என்ற சொல்லுடன் தொடர்புடையது

சாதி.

போக்கு - கொள்கை

வாழ்சமயம் -  புதிய நிலைகள் தோன்றிக்கொண்டிருக்கும் வளரும் சமயம்.

பண்டை நூல்கள் ஒரு துறைக்குள் அடங்குவன அல்ல.  ஆகவே  சமயத்தில் வாழ்க்கையில் உள்ளவையும் கலந்திருக்கும்.  எனினும் அவை சமயத்தின் பகுதி அல்ல.


ஐசுக்குத் தமிழில் மூலம்

 Eis என்ற ஐரோப்பிய மூலம், தமிழ் ஐ என்ற சொல்லின் திரிபுதான். படுக்கை வாட்டில் கிடக்கும் நீர்,  கட்டியாகி உயர்கிறது. உயர்ந்து அடைந்த வடிவத்தில் கரையும் வரை நிற்கிறது.   ஐ என்பது தரையினின்று எழுந்த நிலைதான். கட்டியாகிவிட்டால் தண்ணீர் படுக்கைப்பரவலாகி எழும்பாது காய்ந்துவிடும் அல்லது வழிந்துவிடும்.

அங்கு இயைந்து இருக்கும் நீர்க்கட்டியே ஐஸ்.  சுட்டுச்சொற்களில் ஐ  ஆக்கம் பெறும். (அதாவது ஆக்கப் பொருளதாகி வரும்.)  ஐ என்பது அ-ய் என்ற சுட்டும் ஒற்றும் உற்ற கலவையாகும்.

ஐ+ இயை + சு > ஐயியைசு> ஐஇசு>  ஐசு ஆகும்.  ஐஸ் என்ற சொல் தமிழில் அமைந்திராவிட்டாலும் மூலங்கள் உள்ளன. கட்டியாகி உயர்ந்து இயைதல் என்ற கருத்து ஐசுடன் ஒப்ப முடிகிறது.

இந்த மூலங்கள் எவ்வாறு அங்கு போயின எனற்பாலதை முன் இடுகைகள் சிலவற்றில் விளக்கியுள்ளோம். வாசித்து மகிழவும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


புதன், 17 ஜூலை, 2024

அங்குசம் என்பது

 அங்குலம் என்பதை அறிந்துகொண்டீ  ராதலின் அங்குசம் என்பதை எளிதில் அறியலாம்.

அண் -  அடுத்து சென்று

கு  -  (யானையின் உடலைச்) சேர்ந்து.

உசு(ப்பு)  -   குத்தி (  விழிப்பூட்டி)   

அம்  அமைதல்.

அண்கு+ உசு+ அம் >  அண்குசம் > அங்குசம்.

உசுப்பு என்பதில் உள்ள பு விகுதி களையப்பெற்றுச் சொல் அமைந்தது.

அங்குலம் என்பது தொடர்புள்ள இடுகையாதலின் புரிதலுக்காக அதையும் படித்தறியவும். அது இதற்கு முன் உள்ளது

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.