சனி, 27 ஜனவரி, 2024

வராதவர்

 அழைத்து வந்தவர் அருகில் இருக்கவும்

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ



அழைத்த பத்துப் பேரில் ஒன்பதின்மர் வந்துவிட்டனர். ஒருவர் வரவில்லை. வராதாவருக்குப் பல காரணஙகள் இருக்கலாம் . அவர்   வராமையை ப்   பொ து முறையில் பேசி ஆய்வு செய்யக் கூடாது.  அது ஒன்பது பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். பின்னர் தனிப்பட்ட முறையில் அறிந்து மகிழ்க


அழைத்து - அழைப்பிதழ் கொடுத்துக் கூப்பிட்டு, 

வந்தவர் அருகில் இருக்கவும் - அதை ஏற்றுக்கொண்டு    வந்து   அவர்கள் அமர்ந்திருக்கையில்,

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை - பிசகு ஏறியதன் காரணியினால். அழைப்புக்கு வராதவர் எவரையும்,

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ--- மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையில் இந்த வராமை நிகழ்வினைப் புகுத்திப் புகுத்தி  உரையாடத் தொடங்குவதானது,

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ----  வராதவர் மன இணக்கம் முறிந்ததால் வரவில்லை என்றால் இப்படிக் கேட்பதால்  மீண்டும் உறவு தழைத்து எழுந்துவிடுமோ  என்றவாறு. அது காரணம் என்றாலும் அதுவன்று காரணம் என்றாலும் இப்படிக் கேட்பதனால் நிலைமை சீர்பட்டுவிடாது என்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 25 ஜனவரி, 2024

டம்பம் என்பது.

டம்பம் என்னும்  சொல்  ஒரு தலைக்குறைச் சொல்.

தலைக்குறை என்பது சொல்லின் முன்பகுதி மறைந்த சொல்.

ஆடம்பரம் > டம்பரம் > டம்பம்.

இதில் இடைவரும் ரகரமும் மறைந்துள்ளது

இவ்வாறு இயலும் சொல்லை இருமடித் திரிபுச்  சொல் என்பர்.

தலைக்குறைக்கு உதாரணம்,

கமலம் > மலம். ஆனால் மலம் என்று இன்னொரு சொல் இருப்பதால் முதற் குறைக் கமலம் என்பர்.   பொருள் மாறுபாடு இல்லாமல் இருக்கவேண்டும்.

அரங்கன் > ரங்கன். தலைக்குறை.

இது விதிக்கு மாறுபட்டது, தமிழ் மரபு இக்குறையை ஏலாமையின். இகரமிணைப்பர்.

தலைக்குறை - முதற்குறை.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





.

புதன், 24 ஜனவரி, 2024

ஆடம்பரம்- சொல்

 ஆடம்பரம்:  எவ்வாறு அமைகிறது?

  இதில் "பரம் "   என்னும் இறுதியை முதலில்  எடுத்துக் கொள்க.

இது ஒரு பரந்த  வெளியைக் குறிக்கிறது.

பர+அம் > பரம்.

அடுத்து நிற்பது "அம்". 

அம் என்றால் அழகு.

" அம்பரம்" என்ற இணைப்பு "வானம்" என்ற பொருளது.

ஆடம்பரம் எனில்   ஆடு அம்பரம்,  வானத்தில்  ஆடு , அம்பரத்தில் ஆடு.

ஆடம்பரமாய் நடக்கிறான். (வாக்கியம்)

ஆடம்பரமாய் என்பது உண்மையில் ஓர் உவமைத் தொடர். "போல்" என்று உவமைச் சொல் இன்மையால், பொருண்மை  வழுவினதாய்த் தெரியலாம். "வானத்தில் ஆடினவனாய் இருக்கிறான்" என்றால் பொருந்துவதாகும். உருவகமாகக் கொள்ளலாம்.

இது இல்பொருள் உவமையைச் சேரந்தது.

இன்னொரு வகையில் :

அம்பரம் என்பது அம்பம் ஆகிறது.

இடுதல் என்பதை முன்னொட்டி;

இடு+ அம்பம் > இடம்பம் > டம்பம்

ஆகவே டம்பமாய்ப் பேசுவதென்றால், " வானிலிட்டதுபோல் பேசுவது என்று பொருள்.

இது இடு+ அப்பி>. இடப்பி>டப்பி >டப்பா> dabba.

போன்ற அமைபு.

 அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்