இங்கு தலைப்பில் காட்டியதுபோல். இவ்வடிவங்கள் இருவகையில் தமிழ் நூல்களில் காணப்பட்டுள்ளன.
~நிலல்-தல் என்பது :- ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியுடன் ஓர் "எதிர்நில்-தல்", மற்றும் "எதிர்நிலல்-தல்" : இடைநிலையாக "அல்" என்பது வருதலும் ஆகும். இது உண்மையில் இருவிகுதிகள் புணர்ப்புற்ற சொல்லாக்கம். இடையில் வரும் "அல்" விகுதி தேவையற்றது என்று அறிவாளிகள் கருதி மறுக்கலாம். இருவடிவங்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றபடியால் இவற்றைத் தவறு என்பது வழுவாகும். இது ஓர் அல் இடைநிலையுடன் நீண்டுள்ளமைக்கு காரணம், "தேவை எழுந்ததே" ஆகும். Necessity is the mother of invention எனற்பாலதை மனத்தில் இருத்திக் கொள்க. பொருள் விரிவாக்கத்திற்கு கூடுதல் விகுதி அல்லது இடைச்சொற்கள் கொண்டு சொல்லை நீட்டுதல் இயல்பானதாகும்.
இதுபோல் ஒரு 'விகுதி" வந்து இடைநிலையாய் நிற்க இன்னொன்று கொண்டு முடிதல், சொல்லாக்கத்தில் எதிர்நோக்கவேண்டியதொன்றே.
முயற்சித்தல் என்ற சொல் முயற்சி என்பதிலிருந்து எழுகின்றது. சி விகுதி வந்து முயற்சி என்பது தொழிற்பெயர் ஆகிவிட்டபடியால், இன்னொரு விகுதி தேவையில்லை என்று கருதக்கூடும்.
தமிழ் என்பது கவிதையில் எழுந்த மொழி என்பதை மறக்கலாகாது. கவிதைக்கு நீண்ட சொல்லொன்று தேவைப்படும் இடத்தில் எப்படியும் இசை முறியாமல் இருக்கச் சொல்லை நீட்டவேண்டியுள்ளது. இசைபிசகாமல் இருத்தல் என்பது மிகவும் முக்கியம் ஆகும். முக்கியம் எனில் முகப்பில் இருந்த நிலையில் இன்றியமையாமை யாகும். மனிதற்கு முகம் போல் பாட்டுக்கு இசையிணக்கம். பண்டை மக்கள் இப்போது படிப்பதுபோல் "வாசிப்பது" இல்லை. உரைநடையையும் பாடியே முடிப்பர். இப்படிச் செய்து அவர்கள் மிக்க இன்பம் அடைந்தனர் என்பது தெரிகிறது. சமஸ்கிருதமொழி பெரும்பாலும் பாடப்படுவதற்கும் மந்திரங்களாக இருப்பதற்கும் ஆன காரணி அதுவே.
"கேள்வி" முயல் என்னும் போது, முயல் என்ற சிறு விலங்கின் தோற்றம் மனத்திரையில் எழுந்து, கருத்துத்தடை ஏற்படுவதால் இப்போதெல்லாம் " கேள்வி முயற்சிக்கவேண்டும்" என்றே சொல்லவேண்டியுள்ளது.
சொல்லாய்வில் சொற்கள் பலவாறு நீண்டு வளர்ந்திருத்தலைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகள் புணர்க்கப்பட்ட சொற்கள் பலவாகும். ஒருவிகுதி பெற்ற தொழிற்பெயர்களை மட்டும் காட்டிவிட்டு இலக்கணத்தை முடக்கிக்கொள்ளுதல் அறியாமை ஆகும்.
எடுத்துக்காட்டு: பாண்டித்தியம்.
பண் > பாண் > பாண்+ து + இத்து + இயம் ( இ+ அம்) > பாண்டித்தியம்.
அத்துச் சாரியை உணர்ந்தோர். இத்துச் சாரியையை உணராமை, குறுக்கமான அறிவாம்.
அது > அத்து [ சாரியை]
இது > இத்து - இது இன்னொரு சாரியை.
சமஸ்கிருதம் என்பது உள்ளூர் பூசாரிகள் கையாண்ட மொழி. இந்தோ ஐரோப்பிய மொழியாக அதை வெள்ளையர்கள் ஆக்கிக்கொண்டதற்குக் காரணம், அவர்கட்கு ஒரு நெட்டிடைமை உடைய வரலாறு தேவைப்பட்டமையே எனல் உணர்க.
எதிர்நிலற்றல் என்பது சரியான வடிவமே. நீட்டம் வேண்டும்போது மேற்கொள்க. இப்போது அளபெடைகள் ஆளப்பெறுதல் இல்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்