[ஓமிக்ரோன் தொற்று ஒழிய ஐயப்ப பூசை.]
[இது பதினோரடிகள் கொண்ட இன்னிசைப் பஃறொடை வெண்பா.]
படிபூசை ஏற்றப் படிதோறும் மேவ
ஒருநாள் மறவாத் திருவாளர் பல்லோரும்
இல்லமே தூகுவித்(து) இன்போடு பாடியே
உள்ளமே மீகுளிர ஒன்றாகக் கூவினர்
ஐயப்ப ஐயப்ப ஐயன் சரணமென்று!
தோரணங்கள் மாலைகள் நீறொடு சந்தனம்
ஆரத் திருவூண் அனைத்தும் அமைய,
படத்திலே பார்க்க உடனிருப்பார் பற்றை;
இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால்,
சரணம் சரணமென் ஐயப்ப நீயே
வரணும் வணங்குமிவ் வீடு.
உரை:
படிபூசை --- படிகளுக்குச் செய்யப்படும் பூசையானது,
ஏற்றப் படிதோறும் ---- ஏறி மேற்செல்லும் ஒவ்வொரு படிக்கும்
மேவ ---இயற்றப்பட,
ஒருநாள் மறவாத் திருவாளர் பல்லோரும் ---- பூசைநாளை மறந்துவிடாத உயர்வுடைய பல பற்றர்களும்,
இல்லமே தூகுவித்(து) -- வீட்டைச் சுத்தப்படுத்தி,
இன்போடு பாடியே - இன்பத்துடன் பாட்டிசைத்து,
உள்ளமே மீகுளிர--- மனம் மிகவும் குளிரும்படியாக,
ஐயப்ப ஐயப்ப ஐயன் சரணமென்று! --- இவ்வாறு அவன் பெயர் சொல்லி,
ஒன்றாகக் கூவினர் ---- சேர்ந்து குரலெழுப்பினர்;
தோரணங்கள் மாலைகள் நீறொடு சந்தனம் ஆரத் திருவூண் அனைத்தும் அமைய --- இப்பொருள்களெல்லாம் பூசையிலும் அது நடைபெறும் அறையிலும் வைத்து,
படத்திலே பார்க்க உடனிருப்பார் பற்றை ----- அப்போத் பங்கு கொள்வோர் பற்று வெளிப்படுத்துதலைப் படத்திலே பார்க்க;
இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால் ---- பத்தி எங்கும் இக்காலத்திலே பரவும்;
சரணம் சரணமென் ஐயப்ப நீயே -- ஐயப்பனே, நீயே சரணம் என்றோம்,
வரணும் வணங்குமிவ் வீடு. - உன்னை வணங்கும் இவ்வீட்டுக்கு வரவேண்டும்.
படம் திருவாட்டி சி லீலா.
மெய்ப்பு: பின்னர்