சனி, 25 டிசம்பர், 2021

சனிக்கிழமை, தனிக்கருணை

 ஒரு நேயர்,  சென்ற சனிக்கிழமை ( 25122021 )  வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.  அன்று சஷ்டி விரதம்,  அவர் ஓம் நமோ நாராயணா என்று தொடங்கி,  சனிபகவான் - முருகன் இருவரின் அருளாசியுடன்,   மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்று வாழ்த்தினார்.

அவருக்கு நம் நன்றி.

சந்தோஷம் தரும் சனிக்கிழமை, 

மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்றார்.


நாம் கூறியது:

சனிக்கிழமையா , உங்கள் ஆசியால்  ---  ஒரு

சாதனை நாளானதே!

தனிக்கருணையால் நம் முருகனின்  ---- கானம்

தமிழுக்கு வேலானதே!.


நன்றி, நன்றி  என்பதுதான்.


யாவருக்கும் மகிழ்வு பொங்குக.

A MERRY CHRISTMAS & JOYFUL 2022 FOR THESE TWO AND TWO.

 Picture shows our blog well-wishers Mr and Mrs Othneil .



Christmas is a merry celebration 

With  two little ones in their arms

Happiness is beyond calibration

Ushering in all of life's charms.


A poem by Sivamaala blog.


Our Blog joins in to wish them a merry Christmas,  a season full of joy  and 

a happy and prosperous 2022.  Both Mr and Mrs Othneil firmly believe in World Peace and

positive human interaction towards that end.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்மஸ் வாழ்த்து

 கிறித்து பெருமான் பிறந்த கிருத்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.


பறித்திட எண்ணினோரைப் பாவிகளை வென்று

கிறித்துயிர்த்த கீர்த்தி வரலாறு சொல்வர்,

அறத்தின் திறத்தோ  டகிலத்துத் தோன்றும்

கிறித்துமசு வாழ்த்தே உரை.