இருநா டுகளிடை ஈரிணைப்புப் பாலம்;
ஒருபா லவர்தாண்டிச் செல்ல === இருபாலும்
தொற்றுவரும் அச்சத்தால் முற்றுதடை உள்ளதே
எற்றென்று மக்கள் இரங்குவர் === வெற்றிடை
இந்நகரத் தாரை இடுக்கி முடக்கம்போல்
பன்னாள் துயரம் படச்செய்து === இந்நாளில்
வாட்டுதல் மாறி வருநாள் வளமாமோ
நீட்டுவதோ துன்பம் நினை!
அரும்பொருள்
ஈரிணைப்பு - இரு இணைப்புகள்;
ஒருபாலவர் தாண்டி - ஒருபக்கம் உள்ளவர்
இன்னொரு பக்கம் போக;
இரு பாலும் - இரண்டு பக்கமும்;
தொற்று - மகுடமுகித் தொற்று corona virus infection
எற்றென்று - ஐயோ இது என்னவென்று;
வெற்றிடை - இருபாலார்க்கும் இடையே ஒரு
தொடர்பில்லா நிலை;
முற்றுதடை - முழுத்தடை ( வினைத்தொகை )
இடுக்கி - “பிளாயர்" போலும் இருபக்கமும்
நெருக்கும் ஒரு கருவி;
முடக்கம் - மிண்ட இயலாத நிலை;
பேச்சுவழக்கில்: "முண்டுவது" என்பர்.
ability to move oneself or one's limbs and body.( colloq. meaning).
வருநாள் - எதிர்காலம்;
வளமாமோ - நலம் பெறுமோ
நீட்டுவதோ - நெடிதாக்குவதோ.
நினை - எண்ணிப்பாருங்கள்.
News item in point: Click to read:
http://theindependent.sg/dont-block-us-from-passing-through-requests-citizen-in-response-to-johor-baru-spore-border-controls/
(
All formattings in this post are lost.
Cannot restore )
சிறிது மாற்றம் (தட்டச்சுப் பிறழ்வுத் திருத்தம் )
செய்யப்பட்டுள்ளது. 1.26 பிற்பகல் 05082020