தமிழில் இகரமும் ஈகாரமும் இழிவு காட்டும் பொருளிலும் வழங்கிவந்துள்ளன. இழிவு என்பது இளிவு என்றும் எழுதப்படுதல் உண்டு.
இழிவு என்பதன் அடிக்சொல் இள் என்பதுதான். இள் என்பது பிற்காலத்து இழ் என்று மாறிற்று. இதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால்:
பா + தாள் + அம் = பாதாளம், இதில் தாள் என்பது தாழ் என்ற சொல்லின் முந்து வடிவம் ஆகும். மேலும் தாள் என்பது கீழிருக்கும் கால்பகுதியையும் குறிப்பதை உணர்க. பா- பரந்து , தாள் = தாழ்வாக அமைந்துள்ள நிலப்பகுதியையே பாதாளம் என்று சொல்கின்றோம். கொள்நன் எனற்பாலது கொழுநன் என்று மாறினமையையும் கண்டு தெளிதல் வேண்டும். ழகர ளகர வேறுபாடின்றி வழங்குவனவாய சொற்களின் பட்டியலும் வரைந்துகொள்க.
இர ( இரத்தல் ) என்ற சொல்லும் ஈ ( இரத்தற்கு ஈதல் ) என்ற சொல்லும் தொடர்புடையன. இவை இங்கனம் மாறி ஈவோனின் செயலையும் இரப்போனின் செயலையும் முறையே குறித்தன. இதன் திரிபு செல்நெறியை இர > ஈர் > ஈ என்று அறிக. ஈர் என்பது இழுத்தல்; ஈ என்பது மனம் இரங்கித் தருமாறு ஒருவனை இழுத்தல் என்று உணரவே, இவற்றின் தொடர்பு புலப்படுவதாகிறது.
உயரத்திலிருந்து நீர்போலும் போலும் பொருள் இறங்குதல் அல்லது கீழிறங்குதல் இழிதல் ஆகும். தாயின் கருப்பையிலிருந்து அவள் ஈனும் குழந்தையும் அவணிருந்து கீழிறங்குவதே என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும். ஈ > ஈன்: கீழிறக்கம் உணர்த்தின. இதை உணரவே ஈனம் என்னும் இழிவு குறிக்கும் சொல்லும் கீழிறக்கமே. இப்போது ஈன் > ஈனு(தல்) ; ஈன் > ஈனம் ( இழிவு ) - கீழிறங்கிய தரம் குறிப்பது, என்ற பொருண்மைச் சாயல்களை உணர்ந்துகொள்க.
சிந்திக்காதவன் இதை உணர வழியில்லை. ஆதலின் தொடர்புகளை நன்`கு சிந்தித்து ஈனம் என்பது தமிழிற் போந்த சொல் என்பதை உணர்ந்துகொள்க.
இதை ஹீனம் எனல் மெருகுசேர்த்தலே அன்றிப் பிறிதில்லை.
பிழைகள் பின்விளை திரிபுகள் பின் சரிசெய்யப்படும்.