ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

ரவுடி என்ற சொல். rowdy

ரவுடி என்ற சொல்லை இப்போது சிந்திப்போம்.  ஆங்கிலமொழி ஆய்வாளர்களின் கருத்துப்படி  இதன்பொருள் காட்டுப்பக்கத்திலிருந்து வருகின்ற கரடுமுரடாக நடந்துகொள்கின்ற மனிதன் என்`கின்றனர். இந்தச் சொல் தமிழர்களிடையேயும் வழங்குகிறது.

சிலவேளைகளில் ஒரே ஒலியை உடைய இருவேறு சொற்கள் ஏறத்தாழ ஒப்பு வைக்குமளவுக்கு ஒற்றுமை யுள்ளவையாய் இருப்பது முண்டு.  ஆனால் தமிழர்கள் அல்லது ஏனை இந்தியர்கள் ரவுடி என்று சொல்லும்போது "காட்டான்" என்ற பொருளில் சொல்வதில்லை.  இந்திய நகரங்களில் உள்ள ரவுடிகளெல்லாம் பெரும்பாலும் நகரத்தில் இயங்குவோரே ஆவர்.  சிற்றூர்களில் இத்தகைய ரவுடிகள் குறைவு என்று சொல்லப்படுகிறது.

ர வுடி என்ற ஆங்க்கிலச் சொல்லும்  ரவ் என்பதுடன் தொடர்புடையதாய்த் தெரிகிறது.  ரவ் (row)  என்பதாவது ஒத்துப்போகாத இருவர் ஒலியெழுப்புவது என்பதும்  கவனத்திற்குரியது ஆகும்.

நகரங்களில் ரவுடிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடுவார்கள்.

இவர்கள் இரவு நட்சத்திரங்கள்  ( night stars  ) என்போர்.  இரவில் வெளியில் சென்று ஒத்துப்போகமுடியாத நிகழ்வுகளில்  (rows) கலந்துகொண்டு ஒலியெழுப்பிக்கொண்டிருப்பார்கள்ள்

இரவு + உடு + இ.=

இ என்பது விகுதி.  இங்கு மனிதனைக் குறிக்கிறது.  உடு என்பது நட்சத்திரம் என்று பொருள்தரும்.

இருக்கும் வீட்டிலிருந்து இரவில் உடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதால் இரவில் உடுத்துக்கொண்டு செயல்படும் இவர்களை இரவுடி என்றும் சொல்வதற்கு இடமுண்டு. இரவூடு அலைவதால் இரவூடி> இரவுடி> ரவுடி என்றும் இருக்கக்கூடும்.

ஆங்கிலம் தமிழ் கலப்பினால் 800 க்கு மேற்பட்ட சொற்களில் இவ்வாறு ஐயப்பாடு நிலவுவதாக மொழி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங்கில ரவுடி  (rowdy)  "  மென்மையாக நடந்துகொள்ளாத காட்டான் "  என்று பொருள்படுவது;  தமிழில் வழங்குவது    இதனினும் சற்று வன்மையைத் தெரிவிப்பது.

முடிவு செய்வதும் கடினமே ஆகும்.

சனி, 8 செப்டம்பர், 2018

ஏழுமலை பக்தர் உள்ளம் வாழுமலை


ஏழுமலையில் சிங்கப்பூர் பக்தர்கள்.
-------------------------------------------------

சிங்கப்பூர்ப்  பத்தர்கள் பூசை செய்தார்
சிறப்பாக மலையானைப் போற்றி நின்றார்:
"எங்கப்பன் எங்கையன் என்றும் எம்பால்
இடையின்றிப் படைவெல்லும் வன்மை சேர்ப்பான்
தங்கப்பொன் அணிகலன்`கள் தந்து நிற்பான்
தடைநீக்கிக் குடைக்கீழூர் தண்டி கூட்டி
உங்கட்கும் ஒண்செல்வம் கொட்டும் நாளை
ஓடோடி வரச்செய்வான்"  நாடிச் செல்வீர்!!


மலையான் - ஏழுமலை யப்பன்
தண்டி - தகுதி
 எங்கப்பன் எங்கையன் -  பேச்சு வழக்குத் துதிகள்.
தங்கம் - கலப்பில்லாத சீனத் தங்கம்
தங்கம் என்பது எதுகை நோக்கித் "தங்க(ப்)"
என்று நிறுத்தப்பட்டது. இது தொகுத்தல்.
அன்றி "தங்கப் பொன்" -  தங்குவதற்குப் பொன்
என்று பொருளுரைப்பினும் நற்பொருளே. தங்குவதாவது:
செல்வாகாமல் இருப்பில் வைத்தல்.
பொன் - பிரிட்டீஷ் தரத்துப் பொன்.
தண்டி - பெரிது என்று உலகவழக்கில் உள்ளது. " அம்மாந்தண்டி
மூக்கு" என்றால் பெரிய மூக்கு என்பது.  வசூல் செய்வோனும்
தண்டியே.  இங்கு அப்பொருளில் இல்லை.
"குடைக் கீழ் ஊரும் தண்டி (தகுதி)".

 Devotee Mohan is with  the  company  director. (engineer by qualification).

எத்திசையும் புகழ்மணக்கும் பத்துமலை முருகன்


கோலாலம்பூரை அடுத்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் செல்லும் படிகள் இங்கு படத்தில் தெரிகின்றன.  ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.  படம்:  வரப்பெற்றது ஆகும், நன்றி.