இந்நாள் மோசமென்னும் வழக்குச் சொல்லினை அறிந்து இன்புறுவோம். ஒன்றை மோசமெனின் அது ஏற்றுக்கொள்ளத் தக்க நிலையினின்றும் மிகத் தாழ்ந்துவிட்டதென்று பொருள். இச்சொல் மதிமோசம், பொருள்மோசம், மோசம் போனான், மோசடி என்ற பல நிலைகளில்
வரும்.
உணவுப் பொருளில் ஈ மொய்ப்பதுதான் மோசம். இப்படி மொய்க்கப்பட்டது விரைவில் கெட்டுவிடுவதையும் அதை உண்டவன் நோய்வாய்ப்படுவதையும் கண்டனர். எனவே மொய்க்கப்பட்டது ஏற்புடைத்தன்று என்று முடிவுகட்டினர்.
இக்கருத்தினின்று
மோசமென்பது சொல்லாகத் தோன்றியது.
மொய்+ அம் = மோயம். இது முதனிலை திரிந்து நீண்ட
தொழிற்பெயர்.
தொழிற்பெயர் என்றால்
வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.
யகரம் சகரமாக
மாறுமாதலின் இது பின் திரிந்தது:
(மோயம்) > மோசம். ய>ச திரிபு. தரம் தாழ்ந்தது என்பது பொருள்.
மோயமெனற்பாலது
வழக்கொழிந்தது.
மோயன் என்பது சிப்பந்தியைக் குறிக்கும்.( தாழ்நிலையன் .) இவர்கள் கூட்டமாய் நின்று வேலையில் ஈடுபடுவதால் இப்பெயர் பெற்றனர் .. படித்தரக் காரர் என்றும் பொருளாகும். மோயனென்பது ஒரு குடும்பப்
பட்டப்பெயர் என்றும் அறியப்படுகிறது.
மூசுதல் - கெட்டது என்றும் மொய்த்தல் என்றும் இருபொருளுடைய சொல்.
இனி, மூசு+ அம் = மோசம் எனினும் அதுவாம். மொய்த்தது என்றும் கெட்டது
என்றும்
இருபொருளுமுடையதாகும்.
மூசு > மூஞ்சு > மூஞ்சல்: இதுவும் கெட்டதெனப் பொருள் படும்,
முனிவரும் மோனமும்
என்னும் இடுகையில் கூறப்பட்ட திரிபுகளை
நினைவு கூர்க. உகரம் ஓகாரமாகவும் வருக்கங்கள் ஏற்பவும் திரிதலுடையன.
மறப்பின் சொடுக்கிக்
காண்க:
மொய் என்ற சொல்லும்
மோ என்பதனுடன் தொடர்புள்ளதாகும். ஈக்கள்
மொய்த்து
மோப்பமிட்டு உண்கின்றன. இது கீழ்த்தர நடவடிக்கை என்று அறிக.
http://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html
=========================================================================
அடிக்குறிப்பு.
இந்நாள் என்பது முன்னர் இன்னாள் என்று மேலே கொடுக்கப்பட்டிருந்தது. இது
தவறு, இந்த எழுத்துரு மென்பொருள் நகர எழுத்தை வருவிக்க இயலவில்லை.
இப்போது சரிசெய்யப்பட்டிருப்பதால் திருத்தப்பட்டுள்ளது. இதுபோலும் தவறுகள்
தோன்றினால் பின்னூட்டம் இடுங்கள். கண்டுபிடித்துத் திருத்திவிடுகிறோம்.
இ+ நாள்= இந்நாள். இன்னாள் அன்று.
சில வேளைகளில் மென்பொருள் ஒத்துழையாமை வருத்தமளிக்கிறது.
கைப்பேசிகளிலும் தொந்தரவு ஏற்படுகிறது. என்செய்வது. பொறுமை
கடைப்பிடித்தால் கணினி நன்மை நல்கும் பின்பு.