திங்கள், 26 மார்ச், 2018

அணுவும் ஸ்தம்பித்தலும்



தம்பித்தல் > ஸ்தம்பித்தல் என்ற சொல்லை ஆய்ந்து காண்போம்

மற்ற கருவிகள், உறுப்புகள் அல்லது பாகங்களுடன் இணைந்து செயல் பட்டுக்கொண்டிருந்த ஒரு பொருள் செயல்பாடாமல் நின்றுவிட்டால் அதைத் தம்பித்து விட்டதென்று கூறுவோம்.  இது “ஸ்தம்பித்து” விட்டதென்பது ஒரு மாற்று வழக்கு.

தம் என்பது தமிழில் பன்மைப் பதிற்பெயர்.  தாம்> தம்.

ஒன்று என்று நாம் சொல்லும் எந்தப் பொருளும் ஒரே ஒரு பொருளாய் இயங்குவதில்லை.  எடுத்துக்காட்டாக:  ஒரு மனிதன் என்பவன் பல உறுப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படும் ஒரு பிறவி. அவன் இறந்துவிடும் போது அவனுள் ஏதோ ஓர் உறுப்பு செயல்படாமல் நின்றுவிட்டது.  அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் இயங்கவில்லை என்பதே பொருள்.  அவை “தாம்” ஆகிவிட்டன.  அவை தானாகியோ தாமாகியோ இயங்குதலை விட்டன.

இந்த நிலையை,  தானித்தல்  அல்லது தன்னித்தல்  என்று அமைக்காமல் தம்பித்தல் என இச்சொல்லில் அமைத்தது ஒரு பேரறிவு ஆகும்.

இதற்குக் காரணம் அணுவைத்தவிர பிற அனைத்தும் இணைந்தே செயல்படுபவை.  அவை தம்பித்து விடுகின்றன அல்லது “தாமித்து “ அல்லது தாமாகி விடுகின்றன.

அணுத்திரட்சிகள் இணைந்ததே பொருள்.  அத் திரட்சிகள் இயங்காமை “ தம்பித்தல்” ஆகும்.

தமிழின்மூலம் ஆய்ந்தாலே இந்த அறிவியல் உண்மை புலப்படும்,  வேறு தன்னிறைவுச் சொல்லாய்வுகளில் இது விளக்கப்படுதல் இயலாது.

தம்பித்தல் என்பது ஸ்தம்பித்தல் என்றானது ஒரு திரிபு அல்லது மெருகூட்டல் ஆகும்.

தமிழில் அணு என்ற ஒரு சொல் பண்டைக்காலம் தொட்டு வழங்கி வருகிறது. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்பதில் அணு என்ற சொல் மிளிர்கின்றது.  அண் என்பதிலிருந்த அணு என்ற சொல்லைப் படைத்துக் கொண்டனர் தமிழர். ஓர் அணு மற்றோர் அணுவை அணுகியே திரண்டு பொருள்களை உருவாக்குகிறது என்பதை அறிந்த தமிழர்  அணுகுதல் என்ற சொல்லினடியாகிய அண் என்பதிலிருந்து இதற்குப்  பெயரிட்டது இன்னொரு பேரறிவு ஆகும்.

தமிழை அறிக.
 நிறைவைப் பெறுக.







ஞாயிறு, 25 மார்ச், 2018

இகரம் இணைந்து வினையாக்கம்

ஒன்று என்பது ஒரு பெயர்ச்சொல்.  அதை எண்ணுப்பெயர் என்பர்.
அதாவது ஒரு எண்ணுக்குப் பெயராக வருவது.  அதை ஒரு வினை
யாக மாற்றுவதென்றால் எப்படி அதைச் செய்வது?

ஓன்றாக்கு; ஒன்றாகு;
ஒன்றுபடு; ஒன்றுபடுத்து;
 என்று சொல்லலாம்.

ஒன்றித்தல் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒன்று என்பதில் ஒரு இகரத்தைச் சேர்த்தால்  அது வினை
யாகிவிடும்.

இதேபோல் இரண்டு என்பதை வினைச்சொல் ஆக்க,  இரண்டு+
இ =  இரட்டித்தல்  என்று அமைக்க.

மூன்றுக்கு இப்படி அமையவில்லை.  மூ என்பது வயதாகுதல்
என்றும் பொருள்படுவதால், மூன்றித்தல், மூவித்தல் என்று
அமையவில்லை. இது மொழிமரபு.

ஒரு என்ற சொல்லிலிருந்து  ஒரீஇ என்ற சொல் அமைந்தது. இதில்
ஒன்றித்தல் என்பதில் போல இகரமே வந்து வினையமைந்தது.
மேலும் ஒரீஇ என்பது அளபெடை வடிவமெடுக்கின்றது. இகரம்
வந்து வினையாகாத சொற்களும் உள.  எடுத்துக்காட்டு:
குரீஇ  என்பது.  இதன்பொருள் குருவி.

தாளிகைகளில் வரவேண்டிய செய்தியை வெளிவராமல்
தடுத்துவிட்டால் இதனை "இருட்டடிப்பு செய்துவிட்டனர்"
என்று சொல்வார்கள்.  நாமிதற்கு ஒரு புதிய சொல்லைப்
படைத்து மகிழலாமே.

இருட்டு > இருட்டித்தல் என்று ஒரு புதிய சொல்.  இப்படி
ஒரு சொல் இல்லை என்று நினைக்கிறோம்.  இருந்தால்
பிழை பொறுத்தருள்வீர்.

இருட்டித்தலுக்கு ஒரு புதுமெருகும் ஏற்றலாம்,   அதாவது:
இருஷ்டித்தல் என்று கவினுறுத்தலாம். எனக்கு இனிமையாகவே
உள்ளது.  நீங்கள் விரும்பாமற் போகலாம். ஒவ்வொரு நாவிற்கும்
சுவையூற்று வேறுபடுமன்றோ?

நாமிங்கு கூறமுனைவது என்னவென்றால்,  இருட்டு என்பதில்
ஓர் இகரம் சேர்த்து வினையாக்கம் நிகழ்த்தலாம் என்பது.

இன்னோர் எடுத்துக்காட்டு:  மறு>  மறுதலை > மறுதலித்தல்.
இங்கு ஐகாரம் ஒழிந்து இகரம் இணைந்தது. வினை அமைந்தது.

மகிழ்வீர்.


புதன், 21 மார்ச், 2018

vaarthai - how formed

 வார்த்தை என்ற சொல்லைச் சிந்திப்போம்.


வாய் என்பதோர் உறுப்பு.  மனித உடலின் முன்மையான

உறுப்பாகும்.


உண்ணவும் வாய்; பேசவும் வாய்.  புன்னகைக்கும் வாய்.

சி¡¢க்கவும் வாய். இன்னும் அழுவதில் கூட வாய்க்கும்

பங்குள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.


வாயிலிருந்துதான் சொற்கள் வெளிப்படுகின்றன.

ஒலிகள் வாயில் உருவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து

சொற்களாகி நாம் செவிகளை எட்டுகின்றன.


வாய் ஒரு தையல்காரன். ஒலிகளைத் தைத்து வார்த்தைகள்

ஆக்கி வெளிக்கொணருகின்றன.


வாயைத் தையல்காரனுடன் ஒப்பிட்டுக் கற்பனை செய்யாமல்

இயல்பாகச் சிந்திப்போம்.


வாய்+தை =  வாய்த்தை ஆகிறது. நாளடைவில் இது

தி¡¢ந்து வார்த்தை ஆகிறது.  யகரமும் ரகரவும் ஒன்றுக்கொன்று

நிற்கும் வண்ணத்தைப் பிற சொற்களில் கண்டு மகிழ்க.

ரகரமே இல்லாத கோவை என்ற சொல்லை கோர்வை

என்று சிலர் சொல்வது எப்படி?  தி¡¢புகள் அத்தகையன.

பின்னர் வி¡¢ப்போம்


வாய்த்தை வார்த்தையாயிற்று.


தையல்காரன் கதைக்கும் பொருந்துகிறது.


சந்திப்போம்.

AN intruder hacked this post and he simply changed
the post ( below) to TSC II font. We have reverted this
by reconverting it. We no longer use TSCII.
But there are still some changes that could not be
reverted. You can still make out those affected
words, so we have left them alone. Hope this post
is now intelligible.


 =========================
Å¡÷ò¨¾ ±ýÈ ¦º¡ø¨Äî º¢ó¾¢ô§À¡õ.

Å¡ö ±ýÀ§¾¡÷ ¯ÚôÒ.  ÁÉ¢¾ ¯¼Ä¢ý Óý¨Á¡É
¯ÚôÀ¡Ìõ.

¯ñ½×õ Å¡ö; §Àº×õ Å¡ö.  Òýɨ¸ìÌõ Å¡ö.
º¢¡¢ì¸×õ Å¡ö. þýÛõ «Øž¢ø ܼ Å¡öìÌõ
ÀíÌûÇÐ ±ýÚ¾¡ý ¦º¡øħÅñÎõ.

š¢ĢÕóо¡ý ¦º¡ü¸û ¦ÅÇ¢ôÀθ¢ýÈÉ.
´Ä¢¸û š¢ø ¯ÕÅ¡¸¢ ´ýÚ¼ý ´ýÚ þ¨½óÐ
¦º¡ü¸Ç¡¸¢ ¿¡õ ¦ºÅ¢¸¨Ç ±ðθ¢ýÈÉ.

Å¡ö ´Õ ¨¾Âø¸¡Ãý. ´Ä¢¸¨Çò ¨¾òÐ Å¡÷ò¨¾¸û
¬ì¸¢ ¦ÅǢ즸¡½Õ¸¢ýÈÉ.

Å¡¨Âò ¨¾Âø¸¡ÃÛ¼ý ´ôÀ¢ðÎì ¸üÀ¨É ¦ºö¡Áø
þÂøÀ¡¸î º¢ó¾¢ô§À¡õ.

Å¡ö+¨¾ =  Å¡öò¨¾ ¬¸¢ÈÐ. ¿¡Ç¨¼Å¢ø þÐ
¾¢¡¢óÐ Å¡÷ò¨¾ ¬¸¢ÈÐ.  ¸ÃÓõ øÃ×õ ´ýÚ즸¡ýÚ
¿¢üÌõ Åñ½ò¨¾ô À¢È ¦º¡ü¸Ç¢ø ¸ñÎ Á¸¢ú¸.
øçÁ þøÄ¡¾ §¸¡¨Å ±ýÈ ¦º¡ø¨Ä §¸¡÷¨Å
±ýÚ º¢Ä÷ ¦º¡øÅÐ ±ôÀÊ?  ¾¢¡¢Ò¸û «ò¾¨¸ÂÉ.
À¢ýÉ÷ Å¢¡¢ô§À¡õ

Å¡öò¨¾ Å¡÷ò¨¾Â¡Â¢üÚ.

¨¾Âø¸¡Ãý ¸¨¾ìÌõ ¦À¡Õóи¢ÈÐ.

ºó¾¢ô§À¡õ.