பண்டைக் காலத்தில் உடலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு
பற்றிச் சில நம் முன்னோர் அறிந்திருந்தனர். என்றாலும் இற்றை அறிவியலாளர்
அறிந்துள்ள அனைத்தையும் அவர்களும் அறிந்திருந்தனர் என்று சொல்வதற்கில்லை. எடுத்துக்காட்டாக வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்து பற்றி அவர்கள் அறிந்திருந்த்து
குறைவே ஆகும். அதற்கான பெயர்களும் அவர்களிடம் இருந்த்தாகத் தெரியவில்லை,
உயிர்ச்சத்து என்பது தற்கால மொழிபெயர்ப்பு. ஆனால்
நல்ல நாட்டு வைத்திய முறையை அறிந்திருந்தனர்,
அறிவியல் கட்டுரைகளை வெளியிடக் கலைக்கதிர் என்றோரு
இதழ் ஐம்பது அறுபதுகளில் வெளியிடப் பட்டு வந்த்து. பல புதிய மொழிபெயர்ப்புச் சொற்கள்
ஆங்கு வெளிவந்தன. அவையெல்லாம்
இப்போது கிடைக்கவில்லை; எங்காவது யாராவது வைத்திருப்பார்கள் என்று நம்புவோம். எம் கைகட்கு எட்டவில்லை. கணினி பயன்பாட்டில் வராத அக்காலத்தில் அரசு அவற்றைக் கைப்பற்றி எங்காவது வைத்துள்ளதா
என்பது தெரியவில்லை; பல்லாயிரம் இதழ்கள் மற்றும் அச்சிட்ட எழுத்துப்படிகள்
இலங்கைப் போரிலும் அதன்முன்னும் அழிந்தன.
இப்போது “சத்து” என்ற சொல்லைக் கவனிப்போம்.
சத்துணவு என்ற சொல்லாட்சியும் இருக்கின்றது.
சத்து என்பது எங்க்னம் அமைந்த்து?
தத்து என்ற சொல்லாக்கம் தன், து என்ற இரு சிறு சொற்களை உடையது.
இதற்கு “தான் உடையது” அல்லது தன்னில் உடையது என்பது பொருளாகும்.
தத்துதல் என்னும் சொல், தத்தித் தத்தித் தவழும் கிளி என்ற
வாக்கியத்தில் வருவது வேறு “தத்து” ஆகும், ஆகவே அதை இங்கு இட்டுக் குழப்புதல்
ஆகாது.
தகர வருக்கத்துச் சொற்கள் சில சகர வருக்கமாகத் திரியும். எடுத்துக்காட்டு: தசை > சதை. இச்சொல்லில்
அத்துடன் எழுத்து முறைமாற்றுமுண்டு. த்த்து என்ற “தான் உடையது: என்ற பொருள்படும் சொல்லில் முதலெழுத்து மட்டும் மாறி அது சத்து என்று அமைந்த்து. சத்து என்றால் தான் உடையது.
தன்னில் இருப்பது என்று பொருள். இதில் முதலெழுத்து மாறிற்றே அன்றிப்
பிற மாறவில்லை.
அதாவது ஒரு பொருளில் உள்ளிலிருந்து கிடைப்பது என்ன
என்பதைச் சத்து என்ற சொல் தெரிவிக்கிறது. ( "கி(டைப்பு" )
கடினமில்லாத்து. மென்மை உடையது என்று பொருள்படும்
சது (சதுப்பு) என்ற சொல்லினோடும் தொடர்புடையதாய்
இருப்பதால் சத்து என்பது ஓர் இருபிறப்பி ஆகும்.
இது பிறமொழிகளிலும் சென்று சேவை புரிந்து நமக்குப் பெருமை சேர்க்கும் சொல் ஆகும்.
இதனை அறிந்து மகிழுங்கள்.