திங்கள், 12 ஜூன், 2017

கல்லெறி கலகரை

கல்லெறி  கலகரைக் கட்டிப் போடுதல்
காலம் காணாத குற்றமோ?
கல்லடி பட்டவர் பற்பலர் வீழ்வதைச்
சொல்லிப் புகழ்வதும் திட்டமோ?
சொல்லெறி வாளர்கள் நல்லதைக் கண்டிடச்
சொல்படைத் தலைவரைத் திட்டுமோ?
வல்லடி செய்தவர் தம்மை அடக்குதல்
மன்பதை நேயமாய்ப் பட்டதே.

ஞாயிறு, 11 ஜூன், 2017

"கர்ப்பிணி"

கருப்பிணி ‍~  கர்ப்பிணி.

நல்ல தமிழில் பேச ‍ எழுத வேண்டுமானால், கருப்பிணி என்றுதான்
சொல்லவேண்டும்.

பிணித்தல் என்பதன்  பொருள் பலவாகும்.  இங்கு  (கருப்பிணி ) அது "கட்டுதல்" என்ற பொருளில் வருகிறது.  கருவானது, உள்ளிருந்தும்
வெளியிலிருந்தும் கலந்து பெண்ணைக் "கட்டும்"  ஒன்றாகும் .  ஆகவே
பெண் கருவால் பிணிக்கப்படுகிறாள் (பற்றிக்கொள்ளப்படுகிறாள் ) என்பது
மிக்கப்  பொருத்தமே.

பிணி என்பதற்கு நோய் என்றும் பொருள் ஆனால் இங்கு அப்பொருள்
இல்லை.

மூலச்சொல்: பிண் என்பது. அதைப்     பின்னொருகால் கவனிப்போம்.

கருவினால் பிணிக்கப்பட்டவள் கருப்பிணி ஆகிறால். இது திரிந்து
"கர்ப்பிணி" ஆகிறது. இது பேச்சு வழக்குத் திரிபு. இதைப் பிறமொழிகள் மேற்கொண்டன.

பிணி என்பது முதனிலைத் தொழிற்பெயர்,  ஆகுபெயராய் பிணிக்கப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது. வேறுவழிகளில் விளக்குதலும் கூடும். எங்ஙனமாயினும் இறுதி வேறுபடாது. 

வெள்ளி, 9 ஜூன், 2017

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம் என்ற சொல்லை ஐந்தாண்டுகட்குமுன் இவண் பதித்திருந்தேன்.  அதற்கான விளக்கத்தில் பாதிக்குமேல் அழித்துவிட்டனர்.

போகட்டும்,  இப்போது அதனைச் சுருக்கமாகப் பதிவுறுத்துவோம்.

இதன் பழ வடிவம்: சமை தருப்பம் என்பது,

சமைந்த தருணம், அமைந்த வேளை என்றும் பொருள் கூறலாம்.

தருணம் என்பதும் தருப்பம் என்பதும் ஒன்றுதான், இவை  தருதல் என்பதை அடிப்படையாகக் கொண்டவை .

சூழ்நிலையோ இறைவனோ தந்த நேரம் அல்லது வேளையே தருணம்.

அதுவே தருப்பமும்  ஆகும்.

தரு+உண்+அம் = தருணம். உண் துணைவினை.
ஓர் உகரம் கெட்டது,

தரு+பு+அம் = தருப்பம்.

ஓர் "கிப்டட்"டைம்    gifted time என்க.

தருப்பம் என்பது வழக்கிறந்தது.

சமை+ தருப்பம் = சம்தருப்பம் = சந்தர்ப்பம் என்றானது.

இச்சொல்லை அணுகி நோக்க, அதன் பழம்பிறப்பு தெளிவாகிறது.

நல்ல அழகினை மறைத்தல் கைகூடுவதோ?

If not clear,please  register your comments for more explanation.