ஞாயிறு, 28 மே, 2017

நேற்றுளார் இன்றோ இல்லை,

நேற்றுளார்  இன்றோ இல்லை,
நினைவினில் மட்டும் உள்ளார்!
கூற்றிலே பேரைக் கேட்டோம்
கூடிட வாய்ப்பே இல்லை!
ஆற்றிலே ஓடும் வெள்ளம்
அதுதனில் மூழ்கி மாய்ந்தார்!
ஈற்றிலே சென்று வீழ்தல்
இயல்பினுக் கென்ன செய்வோம்!

விளக்கம்:

கூற்றிலே ‍~  பிறர் கூறுதலிலிருந்து;
கூடிட ~ மீண்டும் கூடிப் பேச;
ஈற்றிலே ~  இறுதியிலே;
இயல்பினுக்கு ~  இயல்பு ஆகும்; அதற்கு....



Please note that our  internet postings are actively being blocked.
Please wait until current blocking activities cease.

சனி, 27 மே, 2017

poruL பொருள்: இச்சொல் எப்படி உருவானது?

சில வேளைகளில் பல பொருட்கள் வந்து  முன்
தோன்றுவதால், எதை எழுதுவது என்று தயக்கம்
 ஏற்படுகிறது. என்ன செய்யலாம்?  பொருள் என்ற
சொல்லையே விளக்குவோம். இதை யாரும் விளக்கி
நான் படிக்க‌ வில்லை. அவர்தம் விளக்கம் இருப்பின்,
 எமக்குத் தேவையுமில்லை. நீங்கள் அறிந்திருப்பின்
 பின்னூட்டம் இட்டு மேலும் ஒளிரச்செய்யலாமே.   பிறர்  அறிய !

பொருள்:

இதன்  மூல‌ அடிச்சொல் :  பொள் என்பது.

பொள் > பொள்ளுதல்  (=  பொல்லுதல் )
Present meaning: பொந்து, பொத்தல், கிழிதல், துளைத்தல்.

பொள் >  பொளிதல் : இடித்தல், செதுக்குதல்,
துளையிடுதல், உளியாற் கொத்துதல்.


பொள் > பொது  ,(இது பல பொருளும் கலந்திருக்கும்
நிலை. இச்சொல்லுக்கு மனிதர்களையும் பொருள்களாகவே
கொள்வோம்  மனிதனைக் குறிக்கையில் மக்கள், மகன், மகள்
என்பவவற்றை ஏற்ப‌ இணைப்பதே  வழியாகும்)

பொள் > பொது > பொதி :   பொதிதல்.
 ( பொருளை அல்லது பொருள்களை உள்ளிடுதல்.

ஆதிமனிதன் மண்ணிற் துளையிட்டு, கைக்குக்
கிடைத்த பொருளை அந்தத் துளைக்குள் பொருத்தி
 மூடிவைத்தான். பொருத்தி உள்ளே வைத்தான். அது
 பொரு உள்  ஆனது, "பொருள்" ஆயிற்று.  இப்படி
உண்டான சொல்லே பொருள் என்பது.  இதனால்தான்
தமிழ் மிகமிகப் பழங்காலத்து  மொழி என்கிறோம்.
 வீடு, வாசல் வங்கி கிங்கி எல்லாம் காணப்படாத
காலத்து மொழி..

பொரு+ உள் =  பொருள்.

பொருத்தி உள்ளிட்டு பின் மீட்கப்படுவது பொருள்.
 இதுதான் அதன் மூல விளக்கம்

உள் பொதிந்து கட்டினால் அது மூட்டை.  துணியில்
வைத்து மற்றவற்றைக் கட்டும்போது தலைப்புகள்மூ
ட்டப்பெறுவதலால் மூட்டை ஆகிறது.)

(மூட்டைப்பூச்சியில் வரும் "மூட்டை" என்பது
 வேறு. )

பொள் > பொரு.

பொரு> பொருந்து.  (பொரு+ து ).(  வினைச்சொல் ஆக்கம்.)

பொரு+ உள் =  பொருள்.

இனி நேரம் கிட்டுகையில் தொடர்வோம்.  இதில் உள்ள
 விளக்கம் மிகவும் குறுக்கம்.  பின் பெருக்கிக் காட்ட
 எண்னம்.

BEEF EATING POPULATIONS

இது  மாட்டிறைச்சி உண்ணல், இந்தியாவின் நிலைமை பற்றிய  இந்து
தாளிகையின் ஓர் ஆய்வு ஆகும்.  படித்து இன்புறுவீர். தமிழ் நாடு மாநிலத்தில் இவ்வுணவுக்குத் தடை இல்லை என்று தெரிகிறது.

http://www.thehindu.com/news/national/‘More-Indians-eating-beef-buffalo-meat’/article16085248.ece