மின்விரைவுத் தொடரியுமே சென்னைவர என்னவொரு
பாக்கியமே என்றுபாடு;
முன்வரவே வேண்டியதாம் மண்மகிழ நன்முறையில்
வந்ததின்று வென்றியாடு.
சென்னையொரு பெருநகரம் சீருடனே ஏற்றமெலாம்
நேர்படுதல் வேணும் வேணும்;
பின்னைவரு நல்லிளைஞர் பெருமிதமே கொள்ளுவணம்
பேறுகளைப் பொழிதல்வேணும்.
அடையாறு முனம்போனேன்; அவண்தொடரி தனிலேறி
அழகான பயணம்செய்தேன்;
இடைநாளில் நீடுறவே இயலாது பாடுறவே
இருந்ததது சிறந்ததின்றே.
நகர்ச்சென்னை வாசியலேன்; நான்சுற்றுப் பயன்விழைவேன்;
நகரங்கள் வளர்கவென்று
புகரின்றி விழைவதனால் புகல்கின்றேன்; இறையருளே
பொழிபெறுக வேண்டிநின்றேன்.
தொடரி : ரயில் வண்டி .