ஞாயிறு, 7 மே, 2017

இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

அறிவு என்பது வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. தவளை தாவித் தாவிச் செல்வதை மனிதன் காண்கிறான். அதன்பின்னரே அது
தாவித் தாவிச் செல்லும் ஓர் உயிரி என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்த "அறிவு" வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. அதுவே தொடக்கமாகும். அடுத்து, தவளையைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு மனிதன் ஆசிரியனாகி ஒரு பிள்ளைக்குத் தெரிவிக்கிறான். பிள்ளையும் அறிவு பெறுகிறது, இது நேரடியாகக் கண்டறிந்த அறிவு அன்று, ஆசிரியன் வாய்க்கேட்டறிந்ததே ஆகும். இது நேரில் தவளையைக் கண்ட மாத்திரத்தில், பிள்ளைக்குள் முழுமை பெறுகிறது. கற்ற அறிவு உறுதிப்படுகிறது, அதுகாறும் அது கேட்டறிந்ததே ஆகும். பின் கண்டும் உறுதி பெறுகிறது.

நாம் அறிந்த பல‌, நாம் நேரிற் கண்டு அறிந்த அறிவு அல்ல, பிறரிடம் இருந்து அறிந்துகொண்டவையே ஆகும். இந்தப் பிறர், இப்போது உயிரோடிருப்பவர், முன் இருந்தவர் என இருவகை. முன் இருந்தவர் எழுதிவைத்ததும் இப்போதிருப்பவர் எழுதிவைத்து நேரில் நம்மிடம் சொல்லித்தர இயலாதிருப்பதும் ஆக இருவகை..


நீண்ட காலமாக நடப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நெறிகளும் முறைகளும் ஒன்று திரட்டப்பட்டு எழுத்து வடிவாக ஆக்கப்பட்டதே
ஆகமங்களும். இறைவனைத் தொழுதற்கும் ஆலயங்கள் அமைப்பதற்கும் இன்னும் ஏனைய இறைப்பற்றுத் தேவைகளுக்குமாக, ஏற்பட்ட செய்ம்முறைகள், எண்ணங்கள், கருத்துகள் முதலியவை இந்த எழுத்துக்களில் இடம்பெற்றனஇவற்றை உருவாக்கியவர்கள், இறைநலம் போற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவற்றை எழுதும்போது
எந்த மொழியில் எழுதிவைப்பது என்ற கேள்வி எழும், எழவேண்டும். இவற்றைக் கற்று நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் பெரும்பாலும் பூசாரிகளாக‌ இருந்தமையால், அவர்கள் இறைவழிபாட்டு நடப்புகளில் பயன்படுத்தும் சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் எழுதப்பட்டன. இப்படி உருவாக்குமுன், வேறுமொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட பல சிறு ஏடுகள் இருந்திருக்கலாம். வற்றிலிருந்தும் நடைமுறைகள் திரட்டப்பட்டிருக்கலாம். அவை திரட்டப்பட்டு சங்கத‌ மொழியில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மிருக்கலாம். இந்த‌ இறுதிவடிவத்தின்பின், அச்சிறுநூல்கள் தேவை0படாதவை. அவற்றைக் கைவிடுதல் என்பது இயல்பானதே. இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலன்றி, இத்தகைய‌
நூல்வடிவங்கள் இல்லையென்று எண்ணிக்கொள்வது அறியாமையே ஆகும். வரலாற்று அறிவுக்காக பழையனவற்றைச் சேர்த்து வைத்துப் 
பின் ஆராயும் நடைமுறை, குறிப்பாகத் தமிழனிடமும் பொதுவாக‌
இந்தியனிடமும் இருந்ததில்லை.இந்த நிலையில் திடீரென்று எதிர்   தோன்றும் ஒரு ஆகம நூல்,  இறைவனால் அருளப்பட்டது என்று சொல்வது, இயல்பானதே ஆகும்.சிந்திக்கும் மூளை இறைவனால் அருளப்பட்டது என்னில், அதிலிருந்து போந்த ஆகம விடையங்களும் அவனால் அருளப்பட்டவையென்றே முடிபுகொள்ளல், ஏற்புடைத்தே!.


அவனன்றி ஓர் அணுவும் அசைவத்தில்லை. அசைந்த அணுக்களும் எழுதிய எழுத்துக்களும் அவன் அசைவே ஆகும். ஈர்க்கப்பட்ட மனத்தின் அசைவையே ஆசை என்கிறோம்: அசை> ஆசை, இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இறைவனின் ஆசையால் மனிதனின் ஆசை எழுந்து, இவை உருப்பெற்றன.


ஒரு  பற்றன்  ஒரு நடைமுறையை  முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டின்,  அந்நடைமுடைகள் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புதல் இன்றியமையாதது ஆகும்.  ஆக்கிய அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவென்பது உண்மைநெறியும் சமயக் கடைப்பிடியும் ஆகும்.

தலைப்பு :  இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

will review to edit and detect hacker attacks.




சனி, 6 மே, 2017

பாரியை

பார் என்பது இவ்வுலகைக் குறிக்கிறது.இவ்வுலகில், கணவனென்பானுடன் இணைந்து 
வாழ்வு நடாத்துபவளே பாரியை. இங்கு இரு சொற்கள் கோவைப்பட்டு நிற்கின்றன.
ஒன்று பார். மற்றொன்று: இயை என்பது. இதன்பொருள் இயைதல், அதாவது 
 இணைதல் என்பதாம்.

மனைவி என்பவள் வீட்டுக்காரி என்று பொருளுணர்ந்து
கொள்ளப்படுவாளாயின், ஒப்பிடுங்கால் பாரியை என்று
குறிப்பிடப்படுபவள், பாரெங்கும் அவனுடன் இயைந்து
வாழ்பவள் ஆவாள். இச்சொல்லால் காட்டப்படுவது எல்லையில்லா
 உறவு ஆகும்.

இச்சொல் வேறு மொழிகட்கும் தாவி வழங்குவது இச்சொல்லின் விரிபொருளையும் திறத்தையும்

உணர்த்துகிறது

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.