சனி, 6 மே, 2017

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.


இந்தி மொழியைத் திணிக்கவில்லை ( அமைச்சர்)


இந்தி மொழியைத் திணிக்கவில்லை, அதன் பயன்படுத்தலை ஊக்குவிக்கின்றோம் என்கிறார் மத்திய உள்துறை சார்பு அமைச்சர்
கிரண் ரிஜிஜு. ஆகவே கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.


Government not imposing Hindi but promoting it: Kiren Rijiju

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.


நிருபயா உச்சநீதி மன்ற வழக்கில்
அருமையாய்த் தீர்ப்பு வழங்கினர் நன்றுநன்று.
கற்பழித்துக் கொன்ற இரண்டிரு பேருக்கும்
பிற்பகலில் தூக்கென்றார் பேதமில்லாச் சாதனையே!
கொள்ளை கொலைகற் பழிப்பினைப் போன்றவை
எள்ளளவும் ஏற்றுக் கொளவியலாக் குற்றங்கள்.
குற்றமொன்றும் செய்யாது கூனின்றிப் பேருந்தில்
பற்றியேறிச் செல்பயணி பால்பாய்ந்த பாழ்ங்கையர்
உள்குடலைப் பேர்த்தனர் ஓரிரக்கம் இல்லாமல்
பல்கடல் சூழ்நாட்டி லும்பதைக்கப் பாவிகள்!
குற்றமே கொய்த முறைமன்று முற்றும்நம் 

கைதட்டைப் பெற்றதே காண்.  

There is an inherent alignment error.
Will edit  and try later.




இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.