சனி, 15 ஏப்ரல், 2017

பே+ து + அம் = பேதம்

பெயர்தல் என்றால் பொருள் பலவாகும்.    ஆடல், எடுபடல், திரும்பல்,பேர்தல், பிறழ்தல், வேறுபடல், சிதைவுறல், விடுதல், மீளுதல், மாறுதல், அசையிடுதல் எனப் பல்பொருள் ஒருசொல் ஆகிறது
இது.

பெயர்த்தல் எனில் வேறுபடுத்தல், போக்குதல்,  நிலைமாறச் செய்தல், பிரித்தல்,  கொடுத்தல், செலுத்துதல், சிதைத்தல், புரட்டுதல், கிளப்புதல்
என்றும் பொருள்.

பேரன் என்பது உண்மையில் "பெயரன்" என்பதினின்றும்  போந்தது  .  பெயர் என்ற பகுதி பேர் என்று நின்று அன் விகுதி பெற்றது. பேத்தி என்பதோ,  பே+தி = பேத்தி என்றானது.  எனவே,      பெயர் > பேர் > பே
என்று திரிவதைத் தெள்ளிதில் தெரியலாம்.

பேதம் என்பது வேறொன்றாவதைக் குறிப்பது.  மாறுபடற் கருத்தாகும்.

பே+ து + அம் = பேதம்.  து ‍விகுதி . அம் என்பதும்  விகுதி.
விகுதிமேல் விகுதி என்றோ, இடைநின்ற விகுதியை இடைநிலை என்றும்  இறுதி விகுதியை விகுதி என்றும் கூறினும் இழுக்கொன்றும்
இலது.

ஆகவே பேதம் நல்ல தமிழே.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகம்

மூத்தம்மா காலத்தில் இல்லாத முன்னேற்றங்கள்!
தாத்தாவின் காலத்தில் இல்லாத தடுமாற்றங்கள்!
முன்னென்றே ஒன்றுதான் இருந்துவிட்டால்
பின்னென்றே ஒன்றும் இருந்துவிடுமே!
இருந்தாலும் இவ்வுலகம்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.....
உலகம் சுற்றித்
தொடங்கின இடத்துக்கே
அடங்கிவந்து அமைந்ததுபோல‌
காரியங்கள் சில‌
தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகின்றன.
சில தொடங்குவதே இல்லை...
சாதனைகள்
கொசு  கடிப்பதும்  சளி பிடிப்பதும் ......

உலகம் 












மூத்தம்மா * தாத்தாவின் * காலத்தில்

மூத்தம்மா காலத்தில் இல்லாத முன்னேற்றங்கள்!
தாத்தாவின் காலத்தில் இல்லாத தடுமாற்றங்கள்!
முன்னென்றே ஒன்றுதான் இருந்துவிட்டால்
பின்னென்றே ஒன்றும் இருந்துவிடுமே!
இருந்தாலும் இவ்வுலகம்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.....
உலகம் சுற்றித்
தொடங்கின இடத்துக்கே
அடங்கிவந்து அமைந்ததுபோல‌
காரியங்கள் சில‌
தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகின்றன.
சில தொடங்குவதே இல்லை...
சாதனைகள் -----
கொசு  கடிப்பதும்  சளி பிடிப்பதும்.....!
வெற்றி கொள்ள இயலாத வில்லங்கங்கள் !