வடகரை என்ற ஊரில் ஒரு நிலக்கிழார்
\(ஜமீந்தார்) இருந்தார். இவர்
\(ஜமீந்தார்) இருந்தார். இவர்
பெயர் இராமச்சந்திர நாயுடு என்பது.
தனித்தமிழ்ப் புலவரான பரிதிமால் கலைஞர்
தனித்தமிழ்ப் புலவரான பரிதிமால் கலைஞர்
என்னும் சூர்யநாராயண சாஸ்திரியார், குளந்தை வடிவேலன்
பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றும் பொருட்டு இந் நிலக்கிழாரைக் காணப் பெரியகுளம் என்னும் ஊருக்குச் சென்றார். பரிதிமால் கலைஞர் தம் வேலை முடிந்ததும் உடனே திரும்ப எண்ணினாலும், நிலக்கிழார் அன்பின் காரணமாகவும் தமிழ்ச்சுவை மேலும் பருக விழைந்ததனாலும் விடைகொடுக்கவில்லை. சிலகாலம் தம்முடன் தங்கி இருக்கும்படி வற்புறுத்த, வேறுவழியின்றிப் பரிதிமால் கலைஞரும் அங்கேயே சிறிது நாட்கள் தங்கிவிட்டார்.
போன பரிதிமாலர் காலம் தாழ்த்தியதைக்
கண்ட அவர்தம் மாணாக்கர்
கண்ட அவர்தம் மாணாக்கர்
சலசலோசனர் ஒரு பாவின் மூலம்
தம் ஆசிரியருக்கு விரைவில்
தம் ஆசிரியருக்கு விரைவில்
திரும்பவேண்டியதன் தேவையை
உணர்த்தினார்.
அப்பாடல் வருமாறு:
அப்பாடல் வருமாறு:
செல்வமலி
குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச்
செல்வலெனச்
சென்றாய்; தேசிகவான்
=== கல்வி வயின்
போந்தவன்
தாழ்ப்பப் புலம்புகொண்டு
இல்கணுறை
ஏந்திழையை
நேர்குவல்யான், எண்.
இதன் பொருள்
வருமாறு:
செல்வமலி
: செல்வச்செழிப்பு
மிக்க;
குளந்தைச்
சேயின் : குளந்தை வடிவேலனின்;
தமிழ் விரிப்ப :
பிள்ளைத்தமிழ் நூலை
அரங்கேற்ற;
செல்வல்
என : போகின்றேன்
என்று சொல்லி;
சென்றாய்
: போனீர்கள்;
தேசிக வான் கல்வி
வயின் போந்தவன் : இத்தகைய உயர்ந்த
கல்விச்சேவை மேற்கொண்டு
சென்ற நீங்கள்;
தாழ்ப்ப
:வருவதற்கு
காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதால்;
புலம்பு கொண்டு:துன்பம்
மிகுந்து;
இல்கண்
உறை : வீட்டில்
இருக்கின்ற;
ஏந்திழையை
: (உங்கள் ) மனைவியை
நேர்குவல்
யான் : யான் குறிப்பிட
விரும்புகிறேன்;
எண் :
நினைத்துப் பாருங்கள்
என்றபடி.
குளந்தை : இது பெரியகுளம் என்ற ஊரைக் குறிக்கிறது..
தேசிகம் - ஒளி, பொன், அழகு.
"பல்லினைத் தேசிகம்" (சீவக.சிந்தா. 1480)
ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது; ஆசிரியர் குடும்பம் பற்றிய அக்கறையும் மாணாக்கருக்கு இருந்தது. பரிதிமாற் கலைஞர் சென்றது தம் ஆசிரியரின் ( (மதுரைச் சபாபதி முதலியார் ) நூலை அரங்கேற்றுவதற்கு என்பதையும் நாம் மறக்கலாகாது. பரிதிமாலருக்கு தமிழ்க் கவலை.
குளந்தை : இது பெரியகுளம் என்ற ஊரைக் குறிக்கிறது..
தேசிகம் - ஒளி, பொன், அழகு.
"பல்லினைத் தேசிகம்" (சீவக.சிந்தா. 1480)
ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது; ஆசிரியர் குடும்பம் பற்றிய அக்கறையும் மாணாக்கருக்கு இருந்தது. பரிதிமாற் கலைஞர் சென்றது தம் ஆசிரியரின் ( (மதுரைச் சபாபதி முதலியார் ) நூலை அரங்கேற்றுவதற்கு என்பதையும் நாம் மறக்கலாகாது. பரிதிமாலருக்கு தமிழ்க் கவலை.
பரிதிமால் கலைஞரும் நூல் அரங்கேற்றமும் \\
This post has some formatting errors which cannot be rectified.
We shall try some time later.
This post has some formatting errors which cannot be rectified.
We shall try some time later.