செவ்வாய், 13 டிசம்பர், 2016

முன்படித்த முதுபழசை......

முன்படித்த முதுபழசைச் சொல்லிச் சொல்லி
மூளைக்கோ அயர்வளிக்கும் ஆளே வாத்தி;
மண்துகளே படர்ந்திடினும் மாச கற்றி
மாண்புதனை வெளிக்கொணர்வான் ஆய்வு நல்லோன்!
பின்கண்டு பிடித்ததையும் பேணிக் கொண்டு
பிழைகளைந்து நிலையுணர்ந்து பேசு வோனே
முன்தவறு மறைப்பவனே மாற்றுக் காரன்
முனைப்பினையம் அழிப்ப்வனாம் புத்தாள் ஆவான்.

சனி, 10 டிசம்பர், 2016

தனிக்கட்டை வாழ்வினரும்

தனிக்கட்டை  வாழ்வினரும் கொலைப்பட்டே வீழ்வது
தாரணியிற்  புதிதாமோ  யாருமறி  நிகழ்வது!
பனிக்கட்டி வீழ்ந்ததில் பயணித்தார் மேலுலகம்
பணிசெய்து யர்ந்தோரும் பரவினார் பரனுலகம்
இனிக்கெட்டுப் போவதுவோ  இங்கொன்றும் இல்லையடி
இலதேதான் உளதாகும் உளதேதான் இலதாகும்
உனைக்கட்டிப் பிடித்தானும் உய்வதுவும் அவண்தானே
எனைத்திட்டி மகிழ்ந்தானும் எங்குவேறு சொல்வாய்நீ

ஈடற்ற  இணைபிரியா  இன்பத்துத்  தோழியெங்கே
ஈண்டிருந்து செல்கையிலே எங்குசென் றவள்காண்பேன்?
ஆடற்ற கொட்டகைக்குள் அவள்தனியே நான்வெளியே
ஆறுதலைத் தேடுவளோ அழுதுபுலம் பிடுவாளோ
கேடற்ற இடமில்லை கேடென்றும் யாதுமில்லை
கெடுதலொடு படுதலுமே கெடுமாந்தன் உடுதலையில்
வாடென்று வற்றினனோ வாழ்விதுவே வெற்றடையே
வாய்மையுணர் வெய்துவளோ   வாழ்வினிதே யாவினுமே

There was an unexpected blackout at the time of posting.  Some errors have now been
rectified at 6,54 pm.  Shall review autocorrect changes later.
  

வெள்ளி, 9 டிசம்பர், 2016

" கௌதம" - விளக்கம்

இப்போது கௌதம என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

இதற்கு,  முன் பலர் விளக்கம் அளித்துள்ளனர், இச்சொல் புத்தர் காலத்திலும் அதற்கும் முன்பும் துணைக்கண்டத்தில் வழக்கிலிருந்தது  என்பது நீங்கள் அறிந்ததே.

 எனவே இதற்கான பழமை விளக்கம்:  கொ> கௌ:  கூரிய ஒளி;  தம = இருள் என்பதாம். ஒரு கூட்டுச் சொல்லுக்கு பெரும்பாலும் இப்படிப் பொருள்சொல்வது தமிழில் இல்லை. தமிழில் "இருளில் ஒளி" என்று சொல்லலாம் ,. இருள் ஒளி என்றோ ஒளி இருள் என்றோ சொன்னால் தெளிவில்லை.

தமிழில் கூரிய ஒளி என்பதற்குக் கூர்மை "கூ"விலேயே தொடங்குகிறது.  இந்தக் கூ என்னும் சொல், பிற மொழிகளில் கோ, கௌ என்று திரியக்கூடும்.

ஒளிக்கு  அடுத்துள்ள சொல்   "தம"  ,   " இருள்"    என்று   இதற்குப் பொருள் உரைப்பதினும் தமிழ் வினைச்சொல்லாகிய தமக்குதல் என்பதன் "தம" எனக்  கொண்டு ,  " நிரப்புதல்" என்று பொருள்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். கூரிய தம் ஒளியை ‍,  அறிவை, -    நிறைத்தல், நிரப்புதல்   (அதாவது எங்கும் பரப்புதல் )   என்று  கொள்ளலாம்.
கௌதம என்பதற்குப் பொருள்கூறிய புத்திமான்கள் தமிழைக் கவனிக்காமல் கூறிவிட்டுப் போய்விட்டார்கள். "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" அல்லவா?

கௌதம என்பதற்கு முற்றிலும்  தமிழில் பொருள் சொல்ல வேண்டுமானல்,

கோ = ‍ அரசன்; தமன் = ‍ நம்மவன் என்று பொருள் சொல்லலாம்.  ஆக  கோதமன் ஆகும். அரசன் நம்மவன் என்று பெருமைப்படச் சொல்வதானால் அவன் அறிவாளியாக இருந்தால்தான் சொல்வோம்.  அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவரைத் தானே   "நம்ம வீட்டுப் பிள்ளை " என்கிறார்கள்.   முட்டாளை யாரும் உயர்த்துவதில்லை.  ஆகவே கோ எனின் அறிவாளி என்பது  ,   பெறப்படும் பொருள்   derived meaning   ஆகிறது.


கௌதம என்பது முன் குடும்பப் பெயராய் இருந்தது என்று வரலாற்று
நிபுணர்கள் கருதுவர்.  கோ+ தமர்,  எனவே. "நாம் நம் அரசரின் பிள்ளைகள்" என்ற இயல்பான குறிப்பிடுகையில் இருந்தே இது
தோன்றியிருக்கவேண்டும்.  மிகப் பெரிய கூரிய சீரிய ஒளி என்பதெல்லாம் புலவர் நடைக்கு ஒத்தது.  பிறகு பிறகு உணரப்படுவது. குடும்பப் பெயராய்த் தோன்றுவதற்கு "  நாம் நம் அரசரின் குடி" என்று சொல்லிக்கொள்வதே  பொருத்தம் ஆகும்.  குடியினர்க்கு வேற்று அரசின் ஒளி வந்து சேர்ந்து அதை அவர்கள்  உணர்வது ஓர் அரிய நிகழ்வாகும்.  அது குடிப்பெயராகவும் வாராது.

இதிலிருந்து  கௌதம்  கௌதமன் ,  கௌதமர் ,  கௌதமி , கோதமன்  என்ற பல்வேறு வடிவங்களும் எத்தன்மை உடையவை என்பது சற்று தெளிவாகி இருக்கும்.

edit feature not available.  cursor misbehaved.  Will edit later