நிவாரணம் என்ற பதத்தில் நல்ல பொருள் பதிந்துள்ளது. நீயும் நிவாரணமும் ஆய்வோம் .
தொடர்புடைய வெளிப்பொருள் உள்சென்று பதிவதனாலேயே அது பதம் ஆகிறது. இயற்கையில் எந்த ஒலிக்கும் பொருள் இல்லை. எல்லாம் ஒலிகளே. ஓர் ஒலி புறப்பட்டவுடன் அதற்கு முன்னரே கொடுக்கப்பட்ட அல்லது ஏற்பட்டுள்ள ஒரு பொருளில் நாம் அதனைப் புரிந்துகொள்கிறோம். ஆகவே பொருள் பதிவு பெற்ற பின்னரே அது பதமாகிறது. பதி + அம் = பதம். கட்டட வேலை நடக்கும் ஓரிடத்தில் ஒலிகள் பல எழுகின்றன.
இரும்பும் இரும்பும் மோதும் டம்டம் ஒலி கேட்கிறது. அதில் ஏதும்
நாம் உணரத்தக்க பொருள் இல்லை, டமாரம் அல்லது தமாரம் என்று
சொல்லை உண்டாக்கி அதற்குப் பொருளை ஊட்டியவுடன் அந்த ஊட்டத்தில் அது பதமாகிறது, சொல் பொருளை அருந்துகிறது. சொல்லுக்குப் பொருள் அருத்தப்படுகிறது. (Feeding meaning into a word or term ) - .அருத்தமாகிறது. அர் என்பது ஒலி என்றும் பொருள் படும், ஆகையால் அர்த்தம் என்ற சொல் ஓர் இருபிறப்பி ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் பொருந்திய சொல்,
நிவாரணம் ஆவது துன்பம் அல்லது இடர் நீங்குவது. நீங்கு என்பதிலும் நிவ் > நீவு > நீவுதல் என்பதிலும் நீ உள்ளது. நீவுதல் இரண்டாகப் பிரிப்பதுபோலும் எழுகைத் தடவல். நீட்டுதல் என்பதிலும் நீ இருக்கிறது.தொடங்கிய இடத்திலேயே முடங்கிவிட்டால் அது நீட்டல் அன்று. அப்பால் அகன்று விரித்தலே நீட்டமாகும். என்னிலிருந்து நீங்கி வேறான ஒருத்தி "நீ". ஆகவே ஒரு தாய் தன் பிள்ளையை "நீ" என்பது எத்துணைப் பொருத்தம்.நான் என் தோழியை நீ என்கையில், அவள் என்னில் இருந்து பிறந்து நீங்கியவள் அல்லள் எனினும் இடத்தால் விலகி நிற்பவள் , அதனால் முன்னிலையாக "நீ" பொருந்துதல் ஒப்புமை கருதியாகும்.
நீ என்பது சீன மொழியிலும் உள்ளது.இதை நான் சில ஆண்டுகட்கு முன்பே எழுதியிருந்தேன்,
இதை உணர்ந்தபின் நிவாரணம் என்ற சொற்குப் பொருள் சொல்வது
எளிதன்றோ? அது கொம்பிலாக் குதிரை,