இராமனைப் பாடி இரும்புகழ் பெறினும்
கோமகள் விரும்பிய குறுமதிப் பதியால்
நாமகள் அருளும் நாடுகா வலனின்
ஏமமும் இழந்தவன் உழந்தவன் கம்பன்.
கிழங்கு விற்பளாய் வழங்கினும் நல்லருள்
வழங்கினள் அல்லள் அழுந்தூர்க் கம்பற்கு
அழுந்துயர் அவனைப் பற்றிடக் குடியும்
அழிந்திட ஒழிந்தது நலந்திகழ் முடிவோ?
.
பொருள்
பதி அம்பிகாபதி
நாடுகாவலன் - அரசன்
ஏமம் - பாதுகாப்பு.
அழுந்தூர் - திருவழுந்தூர்/
கிழங்கு விற்பள் - கலைமகள் .எடுத்த உரு .
கோமகள் விரும்பிய குறுமதிப் பதியால்
நாமகள் அருளும் நாடுகா வலனின்
ஏமமும் இழந்தவன் உழந்தவன் கம்பன்.
கிழங்கு விற்பளாய் வழங்கினும் நல்லருள்
வழங்கினள் அல்லள் அழுந்தூர்க் கம்பற்கு
அழுந்துயர் அவனைப் பற்றிடக் குடியும்
அழிந்திட ஒழிந்தது நலந்திகழ் முடிவோ?
.
பொருள்
பதி அம்பிகாபதி
நாடுகாவலன் - அரசன்
ஏமம் - பாதுகாப்பு.
அழுந்தூர் - திருவழுந்தூர்/
கிழங்கு விற்பள் - கலைமகள் .எடுத்த உரு .