2008க்கு முன்பிருந்தே சொல் திரிபுகளை பல நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது அங்கு நான் குறித்துவைத்துள்ளவற்றை எடுத்துப் பார்ப்பதில்லை. மேலட்டைகளை மட்டும் துடைத்து மீண்டும் அடுக்கி வைப்பதுண்டு. அதுவும் வேறெதையும் தேடும்போது அதையும் செய்வேன். அதற்காக மெனக்கெட்டுச் செய்வதில்லை.
மேலே "நோட்டுப் புத்தகம்" என்ற தொடர் வருகிறது. இங்கு "நோட்டு" என்பது ஆங்கிலம் அன்றோ? என்று வினவுங்கள். அதைப் பற்றிப் பேசுவோம்.
"நோடுதல் "என்பது ஆய்தல் என்ற பொருள் உடைய சொல்.இந்தச் சொல் அப்பொருள் உடையது என்பதை எளிதில் அறியலாம். எப்படி ?
நோடு > நோட்டம் . (நோடு + அம் )
ஆடு > ஆட்டம் என்பதில்போல டகரம் இரட்டித்தது. அதாவது: டு +அ = ட்ட .
நோடு > நோட்டு > நோட்டம்.
பாடு > பாட்டு ( அதுபோல நோடு > நோட்டு )
நோடு என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு நோடு+ புத்தகம் என்று புணர்த்தி நோட்டுப் புத்தகம் என்று புணர்ச்சித் திரிபாகவும் காட்டலாம்.
நோட்டுப் புத்தகம் : என் சொல் நோட்டங்களைக் கொண்ட காகிதக் கட்டு அல்லது சுவடி.
note book என்பது ஆங்கிலம் அன்றோ என்று நீங்கள் எழுப்பும் நாவோசை என் செவிகளுக்கு எட்டுகிறது .( எண்டே செவியிலு எத்துன்னு : மலையாளம் )
ஆமாம், ஆங்கிலமும்தான் ,
நோட்டுப் புத்தகம் என்கையில் அது ஆங்கிலமாகவோ தமிழாகவோ இருக்கலாம்.
எழுதியவர் , எழுதுபொருள், கட்டுரை எழுந்த சுற்றுச்சார்பு , எழுதினவர் எண்ண ஓட்டம் முதலிய பல கொண்டு தீர்மானிக்கவேண்டியது.
note என்பது nota என்ற இலத்தினிலிருந்து வருகிறது. இதிலிருந்து உங்கள்
ஆய்வு தொடங்கலாமே .,