விம்முதல் என்பதற்கு ஒலித்தல் என்றும் பொருள் உள்ளது. மேலும் மகிழ்வுறுதல் பருத்தல் அல்லது பெரிதாதல் என்பனவும் உள.
விம்மு+ அரு+ இசை > விம்+ அர் + இசை = விமரிசை .
விம்மு என்பதில் அடிச்சொல் விம் என்பதே. அள் > அள்ளு, எண் , எண்ணு என்பவற்றில் போல் உ என்பது வினைச்சொல் இறுதி .
அர் என்பதும் ஒரு சொல்லிறுதி இதை இடக்கர் மம்மர் முதலிய சொற்களை ஆய்ந்து அறிக
அர் என்பது அரு என்பதன் அடி. இங்கு இடை நிலையாய் நின்றது/ இது ஆரென்று திரிதலும் உண்டு அரு+ உயிர் = ஆருயிர். அரு > ஆர். பின் ஆர்+ உயிர் = ஆருயிர் எனினும் ஆம்.
விம் அகிற் புகையின் மேவி (சீவக. 2667). விம் =நிறை(தல்.)
விம்: விம்மர் : விமர் என்ற சொற்கள் தனியாய்க் கிடைக்கவில்லை. தமிழ்போலுமொரு பண்டை மொழியில் வழக்கிறந்தன பல.
எனவே விமரிசை என்பது மிகுந்தொலிக்கும் இசை; பேரிசை மகிழிசை எனவே கோலாகலம் என்று பொருள் தருதல் அறிக
குறிப்பு: மரிச அல்லது மரீச என்பது பாலென்று பொருள்படும் சமஸ்கிருத மொழியில். வி என்பது பொருத்தமென்று பொருள்படுவது, ஆகவே விமரிசையாக நடைபெற்றது என்பதை பொருந்திய பாலாக இருந்தது என்று சொல்லலாம் என்றாலும் பொருந்தவில்லை . விமரிச என்ற முழுச்சொல் கிடைக்கவில்லை. நிங்கள் சங்கத நூல்களில் தேடிப்பாருங்கள்..
இயைதல் - இசைதல் இது ய . > ச திரிபு. இயைதலாவது மிகுந்த பொருத்தமுடையது ஆதல். விம் அர் இசை எனற் பாலது மிகுந்த அரிய பொருத்தம் உடையது என்றும் பொருள் கூறலாம். தமிழிற் சிறந்த பொருள் தருகிறது அறிக