புதன், 1 ஏப்ரல், 2015

vellaza



வெள்ளாளர் என்ற சொல்  -ளர்  என்று முடிகிறதே யன்றி,  -ழர்  என்று முடியுமாறு இப்போது எங்கேயும் எழுதப்படுவதில்லை.

சோழர் என்பது உண்மையில் சோளர்  என்பதிலிருந்து  வந்ததென்று ஆய்வாளர் சிலர் கூறியதுண்டு.  அதிகமான சோளம் விளைந்த நாட்டுக்கு உரியோர்  என்று பொருள்தரும் சோளர்  என்பதே சோழர் என்று மருவிற்று  என்றனர்.   ள  >  ழ  ஆகும் என்றனர்.

12-ம் நூற்றாண்டுக்  சோழர்  கல்வெட்டு ஒன்று "வெள்ளாளர் " என்பதை  வெள்ளாழர்  என்கிறது. இவ்வடிவம் நூல்களில் இல்லையென்று தெரிகிறது.

எவ்வாறாயினும்  ள  > ழ  திரிபினை  மனத்தில் இருத்துங்கள்.

பேச்சு வழக்கில்  ழ என்பது ள  ஆவது யாண்டும் கேட்கப்படுவது ஆகும்.

செவ்வாய், 31 மார்ச், 2015

Our old viceroys -- ஏற்றாண்டார்

ஏற்றாண்டார்  என்பது  பழந்தமிழ்  அரசு அலுவலரின் பட்டப்பெயர்.  இது மிக்க அழகாகத்  தனித்தமிழில் அமைந்த ஒரு கூட்டுச் சொல் ஆகும்.

இதன் பொருளை ஆய்ந்தால் இது  ஆங்கிலத்தில் viceroy என்பதற்கொத்த உள்ளீட்டினைத் தருகிறது.   அரசரே  நேரடியாக ஆட்சி செலுத்துதலுக்கு  ஏதோ காரணத்தால் ஒத்து வராத ஒரு வட்டத்தை  ஏற்றுக்கொண்டு  அதனைத் திறம்பட  ஆட்சி புரிந்தவர் என்ற பொருள் இச்சொல்லில் நன்கு தொனிக்கிறது.

பிற மொழிக் கலப்புச் சொல்லாக இல்லாமல் இப்பட்டப்பெயர் அமைந்தது அரசின் தமிழ் ஈடுபாட்டையும் பட்டம் பெற்றவரின் தமிழ்ப் பற்றையும் விளக்குவதாகக் கொள்ளுதல் வேண்டும். 

ஏற்று என்ற சொல் இதில் திறமாகக்  கையாளப் பட்டுள்ளது.

"vice roy"   என்பதில் உள்ள  "வைஸ்" என்பதற்கு இன்னொரு சொல் தேடிக்கொண்டிருக்கும் புலவர்க்கு "ஏற்று"  என்பதும் சிந்திக்க வைக்கும் தமிழ்ச் சொல் ஆகும்.  ஒரு பேரரசனுக்காகப்  பொறுப்பை மேற்கொள்கிறார் -
இதுவே உண்மை நிலை அல்லவா ?

Whenever a word occurs in the past tense like "ANdar"  it denotes an accomplishment,  though the holder of the underlying official position might have contrinued.in his political power and ruling of the place. In modern parlance,  it could have been variously expressed as "ERRatchiyar". 

The city before LKY


Friday, March 20, 2015

லீ குவான் யூவிற்கு முந்திய சிங்கப்பூர்

நகரத்தில் உள்ள  கல் கட்டிடங்களில்  தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது  வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர்  தரப்பட்டது.  இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/    மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன  ஆயிற்று என்று தெரியவில்லை.  கிணறுகள் மறைந்து குழய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,

தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம்.  இது என்ன சொல் என்று தெரியவில்லை.  பொதுக் குழாயடிகளும் இருந்தன.  லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில்  தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,

கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மை முறை பலவிடங்களில் இருந்தது.  இதனை இழுப்புக் கக்கூஸ் என்பர்.  ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது (  எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் பெரும்பாலும் எடுப்பு முறைதான்.

கழிவு வாயுவில் எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன   காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.

லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு  நகர அவையும் அவைத்தலைவரும் இருந்தனர்.  நகர உள்ளாட்சி முறை இருந்தது.

But there were not many flats in Singapore as you see today.

சிங்கப்பூர்  நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள்.  அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று  குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ்  வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும்.  இவ்வெளிப் பகுதிகள்  மாவட்ட அவைகளினால் ஆளப்பட்டன.  நகரப் பகுதிகளை  நகர அவை பார்த்துக்கொண்டது.  நகர  அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors  எனப்பட்டனர்.  உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.