வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இனிமைசேர் தென்றலாய் வீசினும் வீசும்,
பனிவரை நீங்கிப் பயில்குளிராய் நீடும்;
முனிவுடன் பாய்ந்துவன்  மோதல்வான் ஊர்தி
தனித்துன்பில் வீழ்த்தினும் ஆம்.

உதைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதில்  குளிரால் நடுங்குதலும் ஒன்றாகும்.

 1. to kick; 2. to spurn, reject, as advice; 3. to discharge, as an arrow; 4. to beat, strike; 1. to tremble with fear, shiver with cold, used impers; 2. to be inconsistent

உதை+கை > உதகை > ~~+ மண்டலம் = உதகமண்டலம்.
ஊட்டி.
இந்த இடப்பெயர் கை விகுதி பெற்றதும் பொருத்தமே.  "கை " உதறும் 
குளிர் உள்ள இடமேன்பதும் குறிப்பு.  மேலும் உதறுதல் என்ற சொல்லையும் கவனியுங்கள்.


Change back to Hinduism.

இந்து சமயத்திலிருந்து
மாறிய நிகழ்வுகள் பல!
இந்து சமயத்திற்குள்
மாறிவந்த நடப்புகள்  புதுமை.


எந்தச் சாதிக்குள் நுழைவது என்பது.
உம்தம் கேள்வியாமோ?
கலப்பு மணம் வாயிலாக,
மணக்கும் இந்துவின் சாதிக்குள்
இணக்கும் அடைவு பெறலாம்.
இல்லையென்றால் தொல்லையில்லை.
மாற்றுவோரே காட்டுவார் வழி!


http://articles.economictimes.indiatimes.com/2015-02-02/news/58711375_1_hindu-mahasabha-chandra-prakash-kaushik-love-jihad

வியாழன், 5 பிப்ரவரி, 2015

Tamil and Russian

வெகு தொலைவில் நிலவும் மொழிகளிலும்  தமிழ்ச் சொற்கள் உள்ளன , ஆனாலும் இதை ஒப்புக்கொண்டால் தமிழர்கட்கு மொழியுணர்வு மிகுந்து அதனால் அவ்வந்  நாடுகளில்  ஒற்றுமை இன்மையும் கேடுகள் பிறவும் விளையலாம் என்று அஞ்சுவோருமுண்டு.  அதனால் எளிதில் ஒப்புவதில்லை. தமிழுணர்வு மிகுந்தால் அதனால் நன்மையா தீமையா என்ற ஆய்வில் யாம் ஈடுபடவில்லை .

உருசிய மொழியிலும் சில தமிழ்ச் சொற்கள் உள்ளன, ஒன்றிரண்டை இப்போது காண்போம்.

வல்கு  .....................  வழக்கு      வழக்கம்  இயல்பானது; simple
வஜ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,   வல            வலிமை
கல ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, கள               கருப்பு, cf  களங்கம் கள்ளர் காளி 
ஸர ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சாறு  
இர .............................. ஈர                நீர் -  (குடிப்பது)
கோவோரித்..............கூவுரைத்(தல்)     கூவி உரை           

இவை  மேலும் ஆய்தற் குரியவை.