தாயன்றி யார்?
பிறர்தயை இல்லாநற் பெற்றியில் வாழ
குறைமயல் இல்லாத குட்டி -- நிறைவளர்ச்சி
நேரிற் பெறவேண்டும், நேடவிது கற்பிக்கப்
பாரிதனில் தாயன்றி யார்?
பெற்றி = தன்மை; குறை மயல் =அறிவுமயக்கமாகிய குறை.; அல்லது குறையும் மயக்கமும். நேரில் பெறவேண்டும் = பல இன்னல்களையடைந்து அறிந்துகொள்ளாமல், நேரடியாய்த் தாயிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். நேட = சிந்தித்தால் .
நிறைவளர்ச்சி = உடல் வளர்ச்சி மட்டுமின்றிப் பிற வளர்ச்சியையும் குறிக்கிறது.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 22 அக்டோபர், 2010
வியாழன், 21 அக்டோபர், 2010
உயர்நற் கருத்துகள்
உயர்நற் கருத்துகள்
உயிரிகள் நூலுடையார் உண்மையாய்க் கண்ட
உயர்நற் கருத்துகள் உள்வைத்து -- அயர்வின்றி
நன்கு செலச்சொல்லும் நல்லார் சுதாமருக்கு
என்கொடுப்பீரோ பரிசு.
அருஞ்சொற்பொருள்.
உயிரிகள் = பிராணிகள். நூலுடையார்= நூல்வல்லுநர். உண்மையாய்க் கண்ட = ஆய்ந்து உண்மை என்று நிறுவிய. செலச்சொல்லும் = மனத்திற் பதியுமாறு சொல்கின்ற. என் = என்ன.
உயிரிகள் நூலுடையார் உண்மையாய்க் கண்ட
உயர்நற் கருத்துகள் உள்வைத்து -- அயர்வின்றி
நன்கு செலச்சொல்லும் நல்லார் சுதாமருக்கு
என்கொடுப்பீரோ பரிசு.
அருஞ்சொற்பொருள்.
உயிரிகள் = பிராணிகள். நூலுடையார்= நூல்வல்லுநர். உண்மையாய்க் கண்ட = ஆய்ந்து உண்மை என்று நிறுவிய. செலச்சொல்லும் = மனத்திற் பதியுமாறு சொல்கின்ற. என் = என்ன.
புதன், 20 அக்டோபர், 2010
maampazaththu vandu
Post subject: mAmpazaththu vaNdu
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.
=================
difficulty with reading fonts
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.
=================
difficulty with reading fonts
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)