புதன், 20 அக்டோபர், 2010

மழைத்துளிகள் பட்டதனால் Rain and nature


மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.

ஒரு பூவின் கெஞ்சுதல்.

ஒரு பூவின் கெஞ்சுதல்.

அழகான ஆரிய மலர்நானே
அடுத்து நீ வந்திடு பொன்வண்டே!
பழகாமல் தேன்தனைப் பருகாமல்
பறந்துநீ தாண்டியே சென்றிடாதே.

பலகாலம் உனக்கே பூத்திருந்து
பசுந்தேனை வைத்தே காத்திருந்து
சிலநிமைய மாகிலும அமைந்திடாமல்
செல்வாயோ பூீ மனம் குமைந்திடாதோ!

வாராது போயின் வனத்துக்காரன்
வந்தென்னைக் கொய்துதன் அகத்துக்காரி
தேராத கூந்தலுக் கியைத்துக்கொண்டால்
தேன்போகும் வாழ்வுமே வீண்போகாதோ?

அவள்கொண்டை மேலே சென்றுகாய்ந்தே
அழிந்திடாமல் நீதேன் அருந்திடாயோ?
தவழரிய இதழ்களில் தவழ்ந்துவாராய்!
தனிமதுவை நீதான் உவந்துதேராய்!



===============================================
ஆரிய = மென்மைமிக்க (little, delicate), ஆர்தல்: நிறைதல்,,மனநிறைவுபெறுதல், அனுபவித்தல், தங்குதல் எனப் பல
பொருள்தருவது, ஆர் + இய). ் நிமையம் = நிமிடம். குமைந்திடாதோ = நெஞ்சமழிந்திடாதோ; தவழரிய் = பிற வண்டுகள் தவழ்தற்கு அரிய அல்லது முடியாத; தனி மது = தன்னேரிலாத அல்லது ஒப்பற்ற சுவைத் தேன். தேராய் = தேர்ந்தெடுத்துக்கொள்வாய்.். .
தேராத கூந்தல் - இங்கு இப் பூவினால் விழைந்து ஏற்றுக்-
கொள்ளப்ப்டாத (தோட்டக்காரன் மனைவியின்) கூந்தல்
என்பதை வலியுறுத்தும்பொருட்டு. (not sought by the flower to be worn )

மது - இங்கு தேன் என்று பொருள். மலேசிய மொழியிலும்
இதுவே பொருள். ("Madu" in Malaysian and Indonesian languages)

முதுகிழவன்

ஔிந்துகொள்ளும் எதிர்வீட்டு முதுகிழவன்



எதிர்வீட் டிலேஓர் முதுகிழவன் --- நான்
எட்டிப்பார்த் ்திட்டால் ஔநி்துகொள்வான்;
அதிர்வேட் டினைக்கேட்ட நாகமொன்றைப் --- போன்ற
அவன்செயல் என்று புரிந்துகொள்வேன்!

காணாத போது் மகிழ்ந்திருப்பான் --- எனைக்
கண்டதும் தோட்டுள்் புகுந்துகொள்வான்்.
வீணாக ஏனங்குப்் பார்க்கவேண்டும் --- ஒரு
வேதனைக் குள்ளவனை ஆழ்த்தவேண்டும்?

கண்களைக் காண்பொருள் தன்னில்வைத்து --- தன்
கருத்தினைக் கோணாமல் நெஞ்சில்வைத்து,
பெண்நிலை ஒப்புமை எண்ணியக்கால் -- அவற்கிப்
பேதைமை தான்துயர் பண்ணிடுமோ?


குறிப்பு:- ஏதோ ஒரு மென்பொருள் கோளாறு காரணமாக,
"ஔி ந்து" என்பது ஔநிது என்று தானே மாறிக்கொள்கிறது.
மேலும் (ஔி ந்து) என்பதை இடைவெளி இல்லாமல் எழுத
இயலவில்லை. அன்பர்கள் சரியாக வாசித்துக்கொள்ள
வேண்டுகிறேன். This note pertains to forumhub post.


_________________