உலவத் துணை
இனிய தென்றல் வீசி எனைத் தாலாட்டுதே... என் தனிமை இன்பத்திற்கு அது ஒரு மெருகூட்டுதே.
காணும் அழகு அனைத்தையும் நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்
சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும் மனமே நிலைத்து நின்றேன்.
அன்னை இயற்கையின் அழகினில் களித்திட இன்னொரு துணையும் வேண்டுவதோ? என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!
துணையும் வேண்டுமெனில் துணை நீ மெல்லிய பூங்காற்றே.... உலவிடுவேன் உன்னுடனே. நிலவிடும் தனிமை மாறாமலே. _________________ B.I. Sivamaalaa (Ms) |
|