செவ்வாய், 30 ஏப்ரல், 2024

மேதின வாழ்த்துக்கள்

 வீட்டிலும் நாட்டிலும் வேலைகள்  செய்து 

விரிவாரி ஞாலம்   தெரிவேற்றம்  செய்தார்தம்

பாட்டை  உணர்ந்தோர்  பயன்கருதி ஏத்திய

நாட்டினர் கொண்டாடும்  மேதினமே இன்று,

வருகநன் மக்காள்  பெருகுபுகழ் அன்னார்

சருகென்றும் எண்ணா  துருகி வணங்குவம்.

அன்னவரால் இந்நகரம் தூய்மை அடைந்தது.

அன்னவரால் ஞாலம்  அலங்கோல  மேதவிர்ந்து

இன்னரும்  நல்லிடமாய் இங்கு  ஒளிர்ந்த(து.)

உழைப்போரை எப்போதும் ஓங்குயர்ந் தோராய்

இமைப்போதும் மாறாமல் ஏற்றியே போற்றுவீர்.

நம்மிறைவன் நல்லவர் என்றன்னார் போற்றுகிறான்,

தம்மை உணர்ந்தவரே தாரணி  தானுணர்ந்தார்.

வேலைகள் செய்வோர்க்    கியாதே இயன்றது

மூலையில் வைத்தொளிக்கா மூதறிவால் ஈந்திடுவீர்.

வேலனும் வேலைசெய் வள்ளி வரித்திட்டான்,

ஞாலம் பயனுற  நல்லதை இன்றுசெய்வீர்

கூலமோ  சேலையா தேனும் கொடுத்திடுவீர்.

நாளும் நலம்பெறுவோம் நாம். 


உழைப்பார்க்  உரித்தாம்நல் வாழ்த்து, பணியால்

பிழைப்பார்க்காம் ஏற்றம் இனி.



பரந்தாமன்

 பரந்தாமன் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

இது எவ்வாறு என்பதை இப்போது காண்போம்.

இன்னொரு மொழியில் இச்சொல் எப்படி அமைந்தது, என்ன பொருள் அதனின்று போதருகிறது என்ற இரண்டையும் கண்டபின் அதனின் மிக்கத் திறனுடைய பொருளை அதிலிருந்து கண்டு ஆன்ம நிறைவை அடைய வேண்டுமென்ற ஆவல் உமக்கு ஏற்படுமானல், அதன் எண்ணத்திலிருந்து நீங்குமுன்,  நீர் அதைத் தமிழால் பொருள் கண்டு பின் விலக வேண்டும். பற்பல ஆன்மிக நிலைகளில் தமிழ் உமக்குச் சிறந்த பொருளையும் ஆன்மிக நிறைநிலையையும் தரவல்லதாகும் என்பதை நீர் போகப்போக உணர்ந்துகொள்வீர்.

இவ்வாறு சொல்லிச்சென்றவர் அருளாளர்  அரவிந்த மகரிஷி  ஆவார்.  அவர் மாமுனிவர்.

பரந்தாமன் என்ற சொல்லில் பரம் + தாம் + அன்  என்ற சொற்கள் உள்ளன.

இதில் கண்ணன் தாமே பரம் என்கின்றான். பரம் என்றால் எங்கும் பரந்து நிறைந்துள்ள இறை.  -பேரான்மா ஆகிய நிறைவு.

ஆகவே தாமே பரம் ஆனவனே கண்ண பரமாத்துமன்  ஆவன்.

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் 

கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ராட்சசி ( அமைப்பு)

தமிழில் இது அரக்கி என்று வரும்.

ககரம்  சகரமாகத் திரியும்.

அரக்கி > ( அரச்சி )> ரச்ச (சி)>  ராட்சசி.

அரக்க அகி > அரக்ககி>  ராச்சசி > ராட்சசி. (இன்னொரு வழியில்)

அக(ம்)> அகி: அகமுடையாள்.

ஒருத்தி அரக்கி எனப்படுதல் அவள் அகம் காரணமாக.

ககரம் சகரமாதல்:  சேரலம்> கேரளம்; கழிகடை> கழிசடை.  பட்சி>< பக்கி.  இன்னும் பல.

குருவிக்கு பக்கங்கள் தெளிவாக உள்ளன. சிறகுகள் இரண்டு பக்கமும்.  அதனால் பக்கம்>பக்கி>பட்சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்