புதன், 8 அக்டோபர், 2008

தமிழர்கள் எண்ணிக்கை எடுத்தல்.

கொழும்பில் தமிழர்கள் எண்ணிக்கை கொண்டால்
அழும்புசெய் வோரை அடக்கிடலாம் --- விழும்புலிகள்

சேர்ந்தியங்கும் செய்கைபச் சேசொன்னான் இவ்விதம்!்
ஊர்ந்துவரும் இன்னல் உருக்குலையும்--- தேர்ந்தமொழி

இந்தவொரு கட்டளை என்றுகை தட்டினர்!
தந்தேய மக்கட்கோ இந்தவிடர்? --- சொந்தமற?

இந்த இடர்களை ஏற்படுத்தல் கூடாதென்(று)
எந்தப் பெருநாட்டின் தோழரும் --- முந்திவந்து

சொல்லவே இல்லையோ! சோர்வுறுத்தும் சோகமே!

அல்லதைச் செய்யும் அகத்தியமும் -- இல்லையன்றோ
நல்லதைச் செய்தந்த நாட்டை நடத்தினால்?

மெல்லவே மேவும்நாள் எந்நாளோ!---நல்லறிவும?்
செல்லக் கிளி நீயே சொல். ்
(13 lines).


குறிப்புகள்:

அகத்தியம் = அவசியம்.

இது இந்தச் செய்தியைப் பற்றிய பாடல்: Census of Tamils in Colombo.

வியாழன், 2 அக்டோபர், 2008

A bird in agony: நண்பரை இழந்த துன்பம்...

நல்ல கனிமரமே - அதில்
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,

அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.

சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.


என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

உலவத் துணை


இனிய தென்றல் வீசி எனைத்
தாலாட்டுதே...
என் தனிமை இன்பத்திற்கு அது
ஒரு மெருகூட்டுதே.

காணும் அழகு அனைத்தையும்
நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்

சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும்
மனமே நிலைத்து நின்றேன்.

அன்னை இயற்கையின் அழகினில் களித்திட
இன்னொரு துணையும் வேண்டுவதோ?
என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!

துணையும் வேண்டுமெனில்
துணை நீ மெல்லிய பூங்காற்றே....
உலவிடுவேன் உன்னுடனே.
நிலவிடும் தனிமை மாறாமலே.

_________________
B.I. Sivamaalaa (Ms)
Back to top
View user's profile