வியாழன், 30 ஜனவரி, 2025

தோத்திரம் என்னும் வணக்கச்சொல்.

 தோத்திரம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்,

பத்தியில் தோய்ந்தபடி சொல்லும் வணக்கமே தோத்திரம் ஆகும்

தோய்> தோய்த்திரம் > (  ய் மெய்யெழுத்துக் குன்றி )  > தோத்திரம். 

இதுபோல் யகர ஒற்றுக் குறைந்த இன்னொரு சொல் வாய்த்தியார் > வாத்தியார் என்பது,

இன்னொரு சொல்.  உய் > உய்த்தல் > உய்த்தி > உத்தி என்ற சொல்லையும் எடுத்துக்க்காட்டலாம்.

இன்னும் பல உதாகரணங்கள் பழைய இடுகைகளில் காணலாம்.

தொழுதல் வினையில்,  தொழுத்திறம் என்பது தோய்த்திரம் > தோத்திரம் ஆனதாகவும் கூறலாம்.

இச்சொல் பல்பிறப்பி ஆகும். இதுவும் தமிழ்ச்சொல்லே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தாராளம் சொற்பொருளோடு பிறப்பு

 தாராளம் என்னும் சொல்லின் பிறப்பும் பொருளும்  காண்போம் ,

இந்தச் சொல்லின் மூன்று பகவுகள் உள்ளன. தார், அடுத்து ஆள் அம் என்ற விகுதி,   ஆள் என்பதை இடைநிலையாகக் கொள்ளினும்   இழுக்காது,

.ஆளம் என்ற புணர்ப்பினை ஒரு விகுதியாகவும் கொள்ளலாம், ஏராளம், மலையாளம், கொலையாளி எனப் பல சொற்கள் உளவால், இதையும் சரி என்றே கொள்ளலாம்.   பொருளறிவதற்கு எது மிக்க வசதிதருவதாய் உள்ளது எனற்பாலதைப் பொறுத்தே இதை அமைவு செய்யவேண்டும்.  ஆளம்> ஆளி ( மனிதரைக் குறிப்பது)

மணவாளம் என்ற சொல் அமையவில்லை.  தன்மை குறிக்கும் இதற்குத் தேவை ஏற்படாமையினால் இல்லை என்று அறிகிறோம்,  மணவாட்டி என்ற சொல்வடிவம் உள்ளது,

ஆளம் என்ற சொல்லில் ஒரு குழப்பமும் இல்லை.  ஆனால் தார் என்ற சொல்லுக்கும் தாறு என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டு என்று அறிஞர்கள் எண்ணினர். இதைப்போல மாறும் அல்லது திரிபுறும் இன்னொரு சொல் மார் என்பதே. . மாறு என்னும் பதத்திற்கும் மார் - மர்( அடி ) - மரு - மருவு என்னும் சொல்வடிவங்களுக்கும் பிறப்பியல் தொடர்பு உள்ளது. இத்தன்மையை முன்னிருந்த ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.

மேற்கூறிய கருத்து யாதெனில் யாம் இங்கு புதியது ஒன்றும் கூறவில்லை என்பதுதான். படிகொள்வோர் செயல் மறுத்தற்கு இங்கு நூல்கள் எவற்றையும் குறிக்கவில்லை.

தார் என்பது ஓர் ஆயுதம்.  மாட்டுக்குத் தார்போடுதல், தாறுப் போடுதல் என்று இருவழியிலும் இது வரும். முடிவில் இரும்பு முள் உள்ள ஆயுதம் போர்க்கருவி யாகவும் பயன்பட்டது,  ஆதலின் தார் ஆள் என்பது இத்தகைய கருவி உடையோனைக் குறித்தது என்பது ஒருபொருள்.  படைமறவர்கள் எங்கும் அதிகமாகவே கொடுப்பதும் எடுப்பதும் உடையவர்கள். ஆதலில் எல்லை வைத்துக்கொள்ளாத தன்மையைத் தாராளம் என்பது குறித்தது.

இச்சொல்லை ( தாராளம்)  தரும்தன்மை உடைய ஆள் என்றும் கொள்ளுதல் இன்னொன்று ஆகும். தருதல் குறிக்கும் தரு என்ற அடியும் தார் என்று திரியும். தருவான் என்பது தாருமே என்று முன்னிலை வடிவம் கொள்ளும்.   ஆதலால்,  தார்+ ஆளம் என்பது கொடைசெய்வோனைப் போல என்றும் பொருள்தருதல் காண்க.

தார் > தா என்பது இலத்தீனில் do  என்று திரியும். donation என்ற ஆங்கிலச்சொல்லில் இந்த டோ இருக்கிறது.

தா என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் முச்சங்க மரபு உடைய மொழி.

இதன்மூலம் தாராளம் என்ற சொல்லின் பொருளை உணர்ந்தீர்.

தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்து நூல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்..








.  



சனி, 25 ஜனவரி, 2025

மிராசுதார் என்பது

ராசன் என்ற சொல் ராசு என்றும் உகர இறுதியாகத் திரியும். ராஜன் இராஜன் என்பவெலாம் நீங்கள் அறிந்தனவே.  அரசன் என்ற சொல் முன்னர் எம்மால் இங்கு விளக்கம் பெற்றுள்ளது.  அல்லாமலும் ஏனைத் தமிழாசிரியர்களும் அரசன் என்ற சொல்லே முன்னரே ஆய்ந்தறிந்துள்ளனர். ரெக்ஸ் என்ற சொல்லும் பெண்பாலாகிய ரெஜீனா என்பதும் தமிழ்ச்சொல்லினின்று திரிந்தனவே.  தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் ஆதலினால் இச்சொல் உலக முழுவதும் பரவியுள்ளது,

ராசு என்பது மிராசு என்பதில் பின் ஒட்டியுள்ளபடியால் இச்சொல் லே  மிராசு என்பதில் ஒட்டியுள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்..  மீ என்பது மீது, மேல் என்பவற்றோடு தொடர்பு உடையதாகும்.

 மிராசு என்றால் அவனுக்கு மேல் ஓர் காவலன் இருந்தான் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்,   இதுவே உண்மையும் ஆகும்,   இவனே அரசன் என்று கூறலாம் என்றாலும் அதற்கு விளக்கம் தேவைப்படும், மிராசு என்பதற்கு அரசன் என்ற பொருள் இல்லை.  இது ஒரு பிற்காலத்துச் சொல்.

அரசர் முதலியோருடன் அதிகாரத்தால் மிடைந்தவர்களே மிராசு என்போர்.  மிடைதல் என்ற சொல்லின் மி என்ற எழுத்தும்  அரசு என்பதும் சேர்ந்து இச்சொல்லைப் பிறப்பித்தது என்றும் கூறுதற்குரியது இச்சொல்.

மிராசு என்பது தமிழ் மூலங்கள் உடைய சொல்.

அறிக மகிழ்க.