திங்கள், 18 நவம்பர், 2024

தீபாவளியும் நாமும்








 தீபாவளி

பல்லாண்டுகள் நம்  நாட்டில் -----

தீபம் ஏற்றி,

பாகுபாடின்றி

ருவோர்க்க  ளித்தோம்


 உணவு. பலகாரம் பானங்கள்


தொடரும் நம் தீபாவளி விருந்துகள்.


சனி, 16 நவம்பர், 2024

பட்டினத்தார் கூறிய மூன்று பிரிவுகள்.

 பட்டினத்தடிகள் -  இவரைப் பட்டினத்தார், பட்டினத்துச் சாமியார் என்று மக்கள் பலவகையாகக் கூறுவர். இவர் கோவணத்துடன் ஊர் ஊராய் அலைந்திருந்தாலும்  மிகப் பெரிய ஞானி  ஆவார். இறைவன் என்றுமுள்ள பேராத்மா. ஒவ்வொரு மனிதனும் உடல் என்னும் சிறைக்குள் அடைபட்டு அவனது ஆத்மா இருளில் கிடக்கும் (பிறவி.) கொஞ்சமாவது முன் சென்மங்களில் ஓரளவு ஆத்மீகப் பயிற்சி பெற்றவனாய் இருந்தால் இப்போதும் சிலவற்றை உணர்ந்துகொள்ளும் திறன் அவனுக்கு இருக்கும்.  மொட்டையனாய் ஆத்ம ஞானம் பெறாதவனாய் இருந்தால் அவன் காசிக்குப் போனாலும்  இமயத்துக்குப் போனாலும் இடங்களைப் பார்க்கலாமே தவிர,  ஆதமீக வழியில் எதையும் உணர்ந்துகொள்ள முடியாது.  கடவுளெதுவும் இல்லை என்று உளறிக்கொண்டிருப்பான்.

நிட்டை என்ற சொல், தொழுகை மொழியில் நிஷ்டை என்று வரும்.  இதில் வரும் ஷ் என்ற ஒலி நிட்டை என்ற சொல்லை மென்மைப் படுத்துகிறது.    நீடுதல்>நிட்டை என்பது முடிவு இல்லாததுபோல் ஆழ்சிந்தனை நீண்டுகொண்டிருப்பது.  நீர் நிட்டை செய்பவரானால்  அது கலைந்து எழுந்தபோது  முடிவுறுகிறது.  அதை மீண்டும் உமக்கு வாய்ப்பான நேரத்தில் தொடரலாம்.

நீடுதல்  வினைச்சொல்.

நீடு+ ஐ >  நிட்டை.  இங்கு முதனிலை ( முதலெழுத்து)   குறுகி, ஐ விகுதி வந்து நிட்டை என்ற தொழிற்பெயர் ( வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்) உண்டாகின்றது.  இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: சவம் என்பது.  சா+ அம் >  சவம். இங்கும் சா என்ற நெடில் சகரம் ஆகிய குறிலாக மாறிவிடுகிறது.  ஆக,  சொல் வினையிலிருந்து அமைந்து பெயராகும் வழிகளில் இதுவுமொன்றாகும். இது இப்போது ஒரு பொருளின் பெயராகிவிட்டது.  இறந்த உடல் என்பது ஒரு பொருள்.  இப்போது இச்சொல் ஒரு பொருட்பெயராகிவிட்டது.    இது தொழிற்பெயரிலிருந்து வந்த பொருட்பெயர்.  வினையிலிருந்தே அமைந்திருந்தாலும் இப்போது பொருளுக்குப் பெயராகிவிட்டது.  சரியான சிந்தனை இல்லாதவனுக்கு இது தொழிற்பெயரா அல்லது பொருட்பெயரா,  இதைப் பொருட்பெயர் என்று அழைப்பது அல்லது குறிப்பது தவறா சரியா என்றெல்லாம் ஐயங்கள் உண்டாகலாம். அந்தச் சொல் என்ன வேலையைச் செய்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதற்குப் பெயர் கொடுக்கிறோம். முன்னர் தொழிலுக்குப் பெயராய் இருந்து இப்போது பொருளுக்குப் பெயராய் ஆனபின் அதன் வேலை மாறிவிட்டதன்றோ? அப்படிச் சொல்லாமல் தொழிற்பெயராகவே இருக்கிறது என்றோ வேறுமாதிரியாகவோ உங்கள் வாத்தியார் சொல்லிக்கொடுத்தாலும்,  அவர் சொன்னபடியே பரீட்சையில் எழுதி மதிப்பெண்களை வாங்கிக்கொண்டு,  நீர் உம்மைப் பொறுத்தவரையில் சொல்லின் வேலை மாறிவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். மாற்றிச்  சிந்திக்கத் தெரியாத மடையர்களும் உலகில் பலர் உள்ளனர்.  The word now performs a different function.  To get the marks follow what your teacher says but you understand that the function has become altered.  That is enough.

It may be your teacher just wants to teach you on the word formation only. Not on the functions the word performs subsequently. To which language the word belongs would not depend to how the function of the word has changed. Grammar and Philology   are different subjects.

நிஷ்டை என்பதுதான் சொல். அதை நிட்டை என்றால் அது எழுத்தை மாற்றி எழுதுவதே தவிர, அதனால் வடசொல் தமிழாகிவிடாது என்று ஒரு வாதம் செய்யலாம். வாதமிடும் வழிகளும் ஏராளம்.  நாம் சொல்லும் சொல்லறிவு எளிதில் வருவதில்லை.  நோய் வருவதற்குக்கூட பீடிக்கும் காலம் இருக்கிறதே. Incubation period. எல்லாவற்றுக்கும் காலம் வேண்டும்.

நிட்டை கலைந்து எழுந்தவுடன் அல்லது அதிலிருக்கும்போதே மற்ற ஆவிகள் வந்து உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும். தாக்கவும் கூடும். அல்லது மனத்தை மாற்ற எத்தனிக்கக் கூடும்.  என்ன செய்வது என்பதை உங்கள் குருவிடம் கேட்டறிக.

பட்டினத்தாரின் கொள்கைப்படி மூன்றுவகைப் பிணங்கள் உள்ளன.  முன் செத்த பிணம்,  இப்போது செத்த பிணம்,  இனிமேல் சாகப்போகும் பிணம் என்பவை அவை. பிணத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு, உயிருடன் இருக்கும்போது அவனுள் ஆத்துமா அல்லது அகத்துமா ( உள்ளில் உள்ள பெரியது ) இருக்கின்றது, இதுவே வேறுபாடு என்கின்றார் அவர்.

பிணம் என்ற சொல் பிண் என்ற அடிச்சொல்லினின்று வருகிறது. பிணைத்தல் என்ற வினைச்சொல்லும் இதனின்றே  அமைகின்றது. இதன் முன்வடிவம் பிள் என்பது.  பிள்> பிர்> பிரி.  பிள்> பிள்ளை:  தாயின் உடலினின்று பிரிந்து தனிவளர்ச்சி பெறுவது. ஒப்பீடு:  உள்> உண்.  ஒன்றாய் இருப்பதே பிரியும்.  பின் பிரிந்தவையே ஒன்றாகும். ஆதலால் பிரிதல், பிணைதல் என்பவை தொடர்புடைய கருத்துகள்.  இவ்வுலகினின்று பிரிதலும் இன்னோர் உலகில் சென்று பிணைந்துகொள்ளுதலும் என்ற வாக்கியத்தின்மூலம் மனிதன் இவற்றின் தொடர்பினை அறிகின்றான். உமக்கு இன்னோர் உலகம் இல்லை என்றாலும் பலர் அவ்வாறு உண்டு என நினைப்பதனால் மொழியில் இச்சொல் இவ்வாறு அமைகிறது.  சொல்லாய்வில் பொதுவாய் நிலவும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் எழும்.

பிணம் என்பதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன.  சவம்,  சடலம், சபம்,  சட்டகம், குணபம், கழியுடல், அழம் என்பவை அவற்றுட் சில.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மெய்ப்பு: 17112024 0739

Please do not enter the compose or edit mode as you may effect unintended changes to the text.





வியாழன், 14 நவம்பர், 2024

சிரத்தை - எப்படித் தமிழ்ச்சொல்?

 சிரத்தை என்பது நன் கு புனைவுற்ற தமிழ்ச்சொல் ஆகும். இது  சிற்றூராரின் சொற்றொகுதியிலும் உள்ள சொல்லே. இதை " இவன் சிரத்தையுடன் செய்திருந்தால் இப்படி ச்  சோடை போயிருக்காது  "  என்ற வாக்கியத்திலிருந்து இப்பொருளை உய்த்துணராலாம்.

இதை சிறத்தை என்று ஆய்வாக்காக எழுதிக்கொள்வோம்.

சிறத்தை என்பதில் உள்ள பகவுகளாவன:

திறம் (திற) /  சிற / அகத்து /  ஐ விகுதி.

எந்த வேலையைக் கையாள்வதாயினும் அதைச் சிறப்புடன் அல்லது திறத்துடன் மேற்கொள்ளவேண்டும்.

தகரத்துக்குச் சகரம் போலி அல்லது மாற்றீடு ஆகும்.

திற அகத்து ஐ > சிற அகத்து ஐ > 

திரிபில். அகத்து என்பது அத்து என்று மாற்றம் ஆகிறது.

திற அத்து ஐ > சிற அத்து ஐ >  சிரத்தை.

திறத்தை அல்லது  சிறப்பை உள்வைத்து ஒன்றை முடித்தல்.

பல சொற்களில் றகரத்துக்கு  ரகரம் வந்துவிடும்,  அது எப்போது என்றால் இந்தப் பகவுச்சொல் இன்னொரு சொல்லாக்கத்தில்  வரும்போது.

எடுத்துக்காட்டு:  சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுவது சரி + திறம் > சரித்திரம்.  றகரம் ரகரம் ஆயிற்று.

சிரத்தை என்பதன் தோற்றம் அறிந்தோம்.

இனி இன்னொரு அமைப்பு:

அக்கு என்றால் அங்கு சென்று சேர்தல். அ = அங்கு;  கு = சேர்தல்.

திற அக்கு ஐ >  சிற அத்து ஐ >  சிரத்தை எனினும் அதுவே.

இவை போதுமானவை.  பின்னொரு நாள் இன்னும் கூட்டுவோம்.

இரண்டு எழுத்துக்களை மாற்றிவிட்டால், யாரும் தட்டுக்கெட்டுப் போவான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்