கனிவான முகம்தந்த அழகென்ன அழகுகாண்
ஆய்வறி வலவர்களும் --- இந்த
அகிலத்தில் வேறெங்கும் காணாத அழகுமெய்
ஓய்வுறு நெடுநினைப்பில் --- அம்மையை
ஒருபோதும் நீங்குதல் இல்லாத இருப்பினில்
சேயென ஒடுங்கிடிலோ --- நெஞ்சம்
சிந்திக்க உருத்தரும் அன்னையின் ஒளிமுகம் .
அருஞ்சொற்கள்:
காய்கறி - உண்ணும் சைவப் பொருள்கள்.
கனிவான - அன்பு மிளிரும் (முகம்)
ஆய்வறி - யோகமுறையில் இருந்து தேடுவது. இருப்பு என்பதும் அது.
இதை ஆழ்வறி என்று மாற்றிவிடுவோம். பின்னர்.
அகிலம் - உலகம்
வலவர் - வல்லமை உடையோர்.
மெய் - உண்மை
இருப்பு - யோக முறையில் அமர்தல்
நீங்குதல் இல்லாத -- எழுந்து போய்விடாமல்
சேயென - பிள்ளையாய்
ஒடுங்கிடில் - ஓரிடம் சேர்ந்து நிட்டை செய்ய
உருத் தரும் --- காட்சி கொடுக்கும்.
படம்: கருஜி.