வெள்ளி, 29 மார்ச், 2024

பிறந்த நாள்


 பிறந்த நாள்  இன்பஞ்சை 

படத்தில் சோனி

Sony with birthday cake





சந்திப்பு சொல்

 சந்திப்பு  என்ற சொல்லை சிற்றூர் மக்களே முதன்முதல் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள். இதன்பின் அது தமிழ் இல்லமொழியிலும் தொழுகை மொழியிலும் இடம் பிடித்தது. இதற்கு நேரான தமிழ்ச்சொல்: எதிர்கொள்தல்.

கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்

------என்பது ஒளவையின் பாடல் வரிகள்

தண்டுதல் என்ற சொல்லின் பொருளின்படி இருவர் சந்தித்தாலும், ஒருவர் மற்றவரிடம் பணம் கொடுத்தார். பணம் கைமாறாத  வேளையில் அது தண்டுதலாகாது என்று நினைத்தனர். தண்டுதல் என்பது கைதொடுதல் என்று பொருள்பட்டாலும்,  எதிர்மறையில் மட்டுமே  "தொடாமல்" என்ற பொருளில் "தண்டாமல்" என்று வரும் என்றனர். இது ஒரு வகையில் வியப்புக்குரிய விளக்கமே.

மரங்கள் செடிகள் முதலியவை அடர்ந்திருந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்கள் விளையடச் செல்கையில் வேர் குச்சி முதலிய தடைகள் தண்டாமல் செல்க என்று தாய்மார்கள் சொல்லியனுப்புவது வழக்கம்.  தண்டுதலின் எதிர்மறைதான் அவர்களின் கவனத்துக்குரியதாயிற்று. நான்போய் ஊர்த் தலையாரியைத் தண்டிக்கொண்டு வருகிறேன் என்றும் சொல்லியிருக்கக் கூடும். சந்திப்பு என்ற சொல்லுண்மையின் காரணமாக, தண்டிவருதல் என்பது நாளடையில் வழக்கிறந்தது.  


தட்டுதல் என்பது தொடுதல் கருத்துடைய  சொல்லாதலின், அதன் மெல்வடிவமாகிய தண்டுதல் என்பதும் சந்தித்தல் பொருளைத் தரவேண்டும்.  ஆனால் அது "வசூலித்தல்" என்று பொருள்படுகிறது. காலக்கழிவில் பொருண்மையில் வழுத் தோன்றிற்று என்று தெரிகிறது.

இனிச் சந்திப்பு என்ற சொல்லுக்கு வருவோம். 

ஒருவன் இன்னொருவனை எதிர்கொள்வதே சந்திப்பு. எனினும் இச்சொல்லின் பொருள்  முன் அறிந்தோனை எதிர்கொள்வதையே குறித்தது.  அறியாதவர்களைத் தெருவில் காண்பதும் சந்திப்பு எனப்பட்டாலும் இவை பெரும்பாலும் காண்பதே அன்றி ஒரு சந்திப்பு ஆகாது. தெருவில் ஒருவனைத் தாண்டிப் போவது சந்திப்பு ஆகாது.

தன் - சன்.  ( தகர சகர மாற்றீடு )

திரும்பு > திருப்பு > திப்பு.  இடைக்குறை.

சன் + திப்பு >  சந்திப்பு  ஆயிற்று.

தான் திரும்பக் காண்தல் என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

 


வியாழன், 28 மார்ச், 2024

வாச்சியம் திரிபு

"பொண்ணு மாப்பிளையை வாத்துங்க"  என்பது பண்டை நாட்களில் பாட்டிமார் வாய்மொழியில் வருவது.  வாழ்த்தியம் என்ற சொல்லே வாத்தியம் ஆனது.  இயம் என்பது இசைக்கருவிகள் வாசிக்கும் குழுவினரைக் குறிக்கும் சொல்.

வாழ்த்து >  வாத்து  இது பேச்சுத்தமிழ் வினைச்சொல்.  இஃது ஓர் இடைக்குறை.

வாழ்த்தியம் >  வாத்தியம்.  இது இடைக்குறை.

தகரம் சகரமாய்த் திரியும். இடுகைகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காண்க.

 வாத்தியம் > வாச்சியம்

இது தனி > சனி என்பதுபோலும் திரிபுதான்.  

வாசிச்ச இயம்  என்பது பேச்சுமொழித் தொடர்.

இது மருவி வாச்சியம் ஆயிற்று எனினும் ஏற்கலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்