புதன், 27 மார்ச், 2024

கூட்டம், கோத்திரம். கொத்து சொல்லமைப்புகள்

 இந்தச் சொற்களின் பிறப்பு  பற்று இப்போது உங்களுடன் ஆய்வுசெய்வோம்.

இவற்றுள் மிக்க எளிதான வழியில் அறியத்தக்க சொல் கோத்திரம் என்பதுவே.

கோத்தல் என்ற தொழிற்பெயரின் தொடர்பு காட்டும் கோ என்பது  ஓர் ஏவல் வினை.

ஓரு வினை எச்சத்திலிருந்து முழுச்சொல்லை அமைத்துக்காட்டும் மரபு தமிழ் இலக்கணியரிடம் அருகியே உள்ளது எனினும்,  மற்ற மொழியாளரிடம் பெருவழக்கு  ஆகும்..  எடுத்துக்காட்டு: பாலிமொழி,  சங்கதம் முதலியவை.

கோத்து  என்பது வினை எச்சம்.

கோத்து + இரு+ அம் >  கோத்திரம்   ஆகிவிடும்.

இவ்வாறின்றி, தமிழ் முறைப்படி,  

கோத்தல் வினை:

கோ + திரம் >  கோத்திரம்.

திரம் என்பது திறம் என்ற முழுச்சொல்லின் இடையினப்பட்ட திரிபாகவோ, இரு+ அம்     என்பனவுடன்  துகரம் முன்னின்ற இணைப்பாகவோ கருதலாம். இப்படிக் கருதுவதால் அடிப்படை வேறுபாடு எதுவும் எழுவதில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் ரகர றகர வேறுபாடுகள் பின் முளைத்தவை என்பதே மொழிநூற் கருத்து ஆகும்,  எவ்வாறாயினும் திரம் திறம் என்பவை விகுதிகளே.

சமஸ்கிருதம் என்பது உள்ளூர்ப் பூசை மொழியே என்பதால்  கோத்திரம் என்பது தமிழென்றாலும் அன்றென்றாலும் ஒன்றே  ஆகும்.  சொல் வேறுபடுதல் இல்லை.  ஆய்வும் திசை பிறழ்வதில்லை. திரு அம்> திரம்  எனினும் அதுவே.

கொத்து என்பது பெரும்பாலும் மலர் போலும் அஃறிணைப் பொருட்களுக்கும் பயன்பெறவு உள்ள சொல்லாதலின்,  அதனைக் கோத்திரத்திற்கும் பயன்படுத்துவதில் தடை  எதுவும் இல்லை.  கொத்து என்பதும் கோத்திரம் என்றாகும்.

கொத்து + இரு + அம் >  கொத்திரம் >  கோத்திரம்.

இது வெறும் நீட்டலே.  கொ> கோ:    முதனிலை நீண்டு திரிதல்.

வா என்ற பொருள் அடிப்படையிலெழும் சொல்லில் கூட  வந்தான், வாருங்கள் என்று நெடிலும் குறிலுமாகிய நீட்டக் குறுக்கங்கள் வருகின்றன.   கோத்திரம் என்பது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடுகிறது.

கூடு என்ற வினைச்சொல்லுக்கு நிகராக  துகர இறுதியை உடையதாய் கூகாரத்தில் தொடங்கு  சொல் ஒன்று இல்லை.  ஆனால்  கூதல் என்ற சொல் கூது என்ற அடியில் தோன்றியதே  ஆகும்.   அடிச்சொல் என்ற முறையில் கூடு> கூது என்பன இணையானவை ஆதலினாலே இவை பொருளொற்றுமை உடையவை..  இதன் பொருள் சேர்தல் என்பதே. கடுங்குளிரில் குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொள்வது ஒருவகைக் கூடுதலே.  ஈருயிர்கள் மிக்க நெருக்கமாகி ஒன்றன் வெப்பத்தை மற்றொன்று  மேற்கொள்ளுதல். குளிர் என்பது கூடுவதை விளைவிக்கிறது/ இதை உருவாக்குவது கூதல் அதாவது குளிர். இவ்வகையில் கூடுதலை வெகுவாகப் புரிவிப்பது கூதலே  ஆகும். கூத்திலும் கூடுதல் உள்ளது ஆதலின்,  கூத்து என்ற சொல் கூடுதல் அல்லது சேர்தல் குறிக்கும் சொல்லே.  பனிக்குளிர் காய்ச்சற் குளிர் இரண்டும் வேறுபடுத்தி அறியப்படுவது. ஊறு எனற்பாலவற்றுள் வேறானவை.

கூட்டம் என்பது ஒன்றாதல் ஆதலின்  கோத்திரம்  கொத்து என்பவற்றுக்குச் சமமாமவை ஆகும்.

குளிர் என்ற  சொல்லும் குள்> குட்டை என்று பிறப்பிப்பதே.  குளிர் உயிரினங்களை உடலைக் குறுக்கிக்கொள்ளச் செய்வதாகும்.  இவற்றில் தமிழ்ச் சொற்கள் தங்கள் பொருள் வளத்தையும் சொல்லாக்க உயர்வையும் காட்டுவனவாம்,

கோத்திரம் என்பது Gகோத்திரம் என்ற ஒலியால் வேறுபடுத்தல்  வெறும் மேற்பூச்சுத்தான்.  கொத்து இரு அம் என்பதன் நீட்சிதான். காட்சிப் படுத்தத் தக்க வேறுபாடு ஒன்றுமில்லை. வேறுவகையில் விளம்புதல் வேண்டின் மனிதக்கொத்து என்னலாம். 

கூட்டு>  கூத்து> கோத்து > கோத்திரம் எனினுமது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 28032024  2226


செவ்வாய், 26 மார்ச், 2024

வனஜா படம்


 நம் வலைப்பூவின் பேராதரவாளர் திருமதி பாக்கியவதி வனஜா

மனமெங்கும் நிறைந்தது துர்க்க்கையம்மன் தான்.

சேவை அனைத்தும் சிறந்தது.
பார்வை எங்கும் கருணை.

குலதெய்வம்:  பகவதியம்மன்.
தந்தையின் இட்டதெய்வம்; ஸ்ரீ கிருஷ்ணன்
வணக்க தெய்வம்: அருள்மிகு துர்க்கை அம்மன்
ஐயப்ப சாமி

சகரமெய் இரண்டாமெழுத்துத் திரிதலும் பிறவும் : (ஆச், நாச், என)

சொற்படைப்பு:- சோ என்னும் சொல்.

 மொழிகள்,  எழுத்துத் திரிபுகளால் புதிய சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.  இந்தத் திரிபுகளை மொழியினுள் உள்ளிருத்திய மனித உறுப்பு வாய்,  வாயினுள் நாக்கு,  பல், உதடு, வெளிப்படும் காற்று, ஒலி எனப்பல உள்ளன. மூக்கும் உதவுகிறது.   தொண்டையும் உதவுகிறது. நெஞ்சுப் பாகமும் உதவுவதாகச் சொல்வர்.  முயற்சியும் முயற்சியின்மையுமே உருவேதும் அற்றவை.  ஒரு சொல்லைப் பிறப்பிப்பதற்கு இத்துணை உறுப்புகளா என்று வியப்பாக இருப்பதில்லை.

சோம்பல் இல்லாமல்  எப்போதும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனிதன் உலகிலே இல்லை என்னலாம்.  சோ என்ற தொடக்க எழுத்தைப் பயன்படுத்திய முதல் மனிதன் யாரென்று தெரியவில்லை.  அவனைப் பாராட்டலாம்.  சோ என்ற ஒலியை அவன் முயற்சிக் குறைவுக்குப் பயன்படுத்தினான்.  அதைக் கேட்ட பான்மையினரும்  ( பகு> பாகு > பாக்கு>  பாக்கு + இயம் > பாக்கியம் > பாக்கியம் உடையாரும்) அதை முயற்சிக்குறைவினைக் குறிப்பதாக உணர்ந்துகொண்டனர்.

பொருளுணர்தல்:  அடிச்சொல்லும் அதன் வளர்ச்சியும்

  ஒருவனே  சோ என்று பலுக்க, இன்னொருவன் ஒன்றும் உணர்ந்துகொள்ளவில்லை என்றால்,  அவ்வொலியினால் ஒன்றும் பயனில்லை ஆகிறது. உணரும்போதுதான்  சொல்லுக்குப் பொருள் உண்டாகிறது.   மொழி என்பது இத்தகு பல்லாயிரம் ஒலிகளின் கூட்டமைப்பு. அது எந்த வட்டாரத்தில் பெரிதும் ஒலிப்புறுகிறது என்பதை வைத்து,  ஒரு மொழி ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறோம். வட்டார எல்லைகளில் உள்ளவர்கள் சொற்களைப் பலுக்கும் நெறிகளை ஆய்ந்தால்  இரு நிலப்பகுதிகளில் நிலவும் ஒலியமைப்புகளின் கலவையைக் காண்கிறோம்.  வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்னும் திசைகளைக் கொண்டு  சொல் வடக்கத்திப் பாசையா,  தெற்கத்திப் பாசையா என்றெல்லாம் அடையாளம் செய்துகொள்கிறோம். இவைதவிர  இன்னும் மொழிச்சொற்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன.

இத்தகைய கலவைகளை யாரும் திணிப்பதென்பது  ஒரு மிகக் குறைந்த நிகழ்வே. மக்கள் இயல்பாகவே திணிப்பின்றிச் சொற்களை வேண்டியபடி கையாண்டு பேசக் கூடியவர்கள்.  ஒன்றை முயற்சி அதிகமின்றி முடிக்கவேண்டும் என்பதே அவர்கள் சிந்திக்காமல் மேற்கொள்வதாகும். 

சோம்பல் என்பது  சோ என்ற அடியின் தொடக்கத்தைக் கொண்டு எழுந்தது.  சோ என்பதற்குத் தொடக்கத்தில் பொரு ளிருந்திருந்தாலும்,  இப்போது அதன் பொருள் தெளிவாக இல்லை.  அதாவது சோவென்பது செவிப்பட்டவுடன் என்ன சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. வேறு பல மொழிகளில் பொருள் இருக்கலாம்,  எடுத்துக்காட்டாக,  ஆங்கிலத்தில் சோ என்றால்  அப்படி என்று பொருள்.  தமிழில் அது ஓர் அடிச்சொல், ஓர் எழுத்து என்ற அளவிலேதான் வருகிறது. சோர் என்று இன்னும் ஓர் ஒலியை இணைத்தால், பொருள் வந்துவிடுகிறது. சோர்தல் என்று பெயராக்கம் செய்து,  ஒரு முயற்சிக்குறைவினைக் குறித்தமையை உணர்ந்துகொள்கிறோம். சோம்பு என்பது ஒரு விதை குறிப்பதாகவும்,  ஓர் ஏவல்வினையாகவும் அறிந்துகொள்கிறோம். அல் என்று இன்னொரு விகுதியைச் சேர்த்து,  ஒரு முயற்சிக்குறையைக் குறிப்பதாக அறிகிறோம்.  இதையே ஒரு மலாய்க்காரனிடம் சொன்னால் அவன் என்ன என்று கேட்கிறான்.  இச்சொல் அவன் பேச்சில் இல்லை.  பேசு> பாசு> பாசை என்று,  அவன் "பாசை"யில் இல்லையாகின்றது.மொழியின்றி இயங்க முடிவதில்லை.

சோ என்ற அடிச்சொல்லின் பொருட்கள்: 

1  உடற்சோர்வைத் தருவது:  ( இரத்த நோய்.)

2  மாறுபடுவது.  இயல்பாய் இல்லாமை  (சோங்கண்)

3 நினைவைப் பாதிப்பது    (மறதி ) ( சோங்கு    )

4 மனிதரை நீங்கியவை : (  மரங்கள்  மற்ற நிலைத்திண)

5 மாறுதலான வெட்டுகள்

6 இயற்கையான வடிவில்  இல்லாமை  (சோறு)

7 நீர் இல்லாமை

8 சரிவு   அல்லது சாய்வு

9 தொழிலால் மதிப்பு இல்லாதவன்

10 மாயமந்திரங்களில் ஈடுபடுதல்

இவ்வாறு நிலையில் மாறுபாடு குறிக்கும் சொற்களை  அடிச்சொல்லிலிருந்து உண்டாக்கிக்கொள்ள இந்த  அடிச்சொல் ( சோ) பயன்படுகிறது.

சோம்பல் என்ற புதுச்சொல் உண்டாதல்

சோ என்ற ஓரெழுத்துச் சொல்லிலிருந்து  சோம்பல் என்று இன்னொரு சொல் அமைந்தது நம் நற்பேறு என்றே   கருதவேண்டும். இப்போது மொழி உள்ள நிலையில்  சோம் என்று ஒரு பகுதியையும் பல் என்றோரு பகுதியையும் கண்டு இது ஒரு கூட்டுச்சொல் என்னலாம்.  இதில் சோம் என்பது  சோரும் என்பதன் இடைக்குறையாகவும்  பல் என்பது வாயிலுள்ள பல் என்றும் விளக்கி  ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல் என்றும் கூறலாம். ஒரு சொல்லில் என்ன பொருள் காண்பது என்பது தனிக்கலையாக இருக்கிறது.  சோரும் என்பதை சோர்ம் என்று குறுக்கிக் கவிதைக்குள் ஒரு சீராக்கிக்கொள்ளலாம்.  அப்போதும் பொருளறியத் தக்கதாக இருக்கவேண்டும்.  தமிழ் பயன்படுத்துவோர் யாருமே அறியமுடியாத பொருளாயின்  கருத்தறிவிப்பாகிய மொழியின் பயன் இலதாயிற்று என்று கொள்ளப்பட்டு அது வழுவாகிவிடும்.

திரிபுகள்

பல சொற்கள் ஆக்கப்பட்ட நிலையினின்று மாறிவிடுகின்றன.  அவற்றைத் திரிபு என்கிறோம்.   திரியாத சொல் இயற்சொல். திரிந்துவிட்டது  திரிசொல்.  சொல் விகாரப்பட்டது என்றும் சொல்வர்.  மிகுந்துவிட்டால் மிகாரம்>  விகாரம் என்று இதுவும் ஒரு திரிசொல்லே ஆனது. மிஞ்சு > விஞ்சு என்ற  திரிபுவிதியின்படி இது மெய்ப்பிக்கப்படுகிறது. முன் இல்லாத எழுத்தொன்று தோன்றியிருந்தால் அது "தோன்றல்"   எனப்படும்.  இங்கு மி என்பது வி  ஆகிவிட்டதால்  இது திரிதல் எனப்படும்,  ஒன்றோ பலவோ ஆன எழுத்துக்கள் இல்லாமற் போய்விட்டால் அது "கெடுதல்"  என்பர்.  

நாற்சேர் என்ற சொல்  நால் + சேர் என்ற இருசொற்கள் அமைந்த   ஆக்கம்.  இது நாச்சேர் என்று மாறிவிடுகிறது.  ஆசு   என்பது  ஆசு+ ஆர் + இ என்று இன்னும் இரு பகவுகளுடன் இணைந்து  ஆச்சாரி என்று வருங்கால்,  ஆசாரி என்றும் வரும்;  ஆச்சாரி என்றும் வரும்,  ஆசு என்பது புணர்ச்சியில் ஆச்சு என்று வந்தால் இது இரட்டிப்பு. இங்கு, சகர ஒற்றுக்கள் இரட்டித்தன.  ஆ+ ச் + ச்+ ஆர் + இ  என்று பிரித்தால்  இரண்டு ச் என்ற மெய்யொலிகள் சொல்லில் வந்துவிட்டன. ஒன்று முன்னரே சொல்லில் இருந்தது.  இன்னொன்று பின்னர் ஏற்பட்டது.  ஆதலின் மெய்யெழுத்து இரட்டித்தது. இது சொல் எவ்வாறு நம் காதைச் சென்று சேர்கையில் ஒலித்தது என்பது பற்றிய வரணனை. வீட்டின் முற்றத்தை நாற்புறமும் வீடுகள் இணைந்திருப்பது நாச்சேர் என்று சொல்லப்படுகிறது. 

மால் சரி  அம் என்ற மூன்று பகவுகள் இணைந்து  மாற்சரியம் என்று அமைந்து பின் மாச்சரியம் என்று ஆகின்றது.  மாலுதல் என்றால் மயங்குதல். எவ்வாறு ஒன்றை எதிர்கொள்வது என்ற தெளிவு இல்லாமல் நிலையின் வீழ்ச்சியை அடைதல் என்பது பொருள். இது பொறாமை என்றும் பொருள்படும்.  சொல்லின் இரண்டாமெழுத்துத்  திரிந்தது.

தச்சன் என்ற சொல்.

தைத்தல் என்பது இணைத்தல். நூலினால் தைத்தல் என்பது பின்னாளில் உண்டான பொருள்.  தைத்தல் :  தைத்து > தச்சு > தச்சன் என்று சொல் அமைந்தது.  தை> தச்சு> தச்சன் எனினுமாம்.  சு என்பதும் ஒரு விகுதி.  இது மாசு என்பதிலும் காசு என்பதிலும் உள்ளது.  இவ்விகுதி பெயரிலும் வினையிலும் வரும்.  வினையில்:  பேசு,  கூசு என்பவற்றில் அறிக. தை என்ற வினையில் சு சேர்ந்தது எனின் தைச்சு என்பது  தச்சு என்று ஐகாரம் குறுக்குற்று , சொல் அமைந்தது எனினும் இழுக்காது. தை என்ற அடியினின்று சொல் அமைந்தது என்ற அறிவைத் தெளிவித்தலே நோக்கமாதலின் எவ்வாறு இங்கு அறியினும் அதில் ஒப்புதல் ஏற்படும்.  எனவே தை என்பது த் என்பதனோடு இணைந்த  ஐகாரம் கெட்ட திரிபு ஆகும். ( த் +   )

மாடிவீடும் மச்சு வீடும்

மச்சு வீடு என்பது மாடியுள்ள வீடு.  இங்கு ஒவ்வொரு மாடியும் ஒரு மடிப்பாகிறது. மடி> மாடி. இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  மடிச்சு வீடு கட்டியதனால் இச்சொல்லால் அமைந்து பின்னர் டிகரமாகிய கடின ஒலி கெட்டு, மச்சு  என்று ஆனது.  கடின ஒலிகள் விலகி அமைதலை,  கடைஞ்சி என்பது கஞ்சி என்றானதிலிருந்து அறியலாம்.  கடைந்தது அல்லது "கடைஞ்சது" கஞ்சி. [ க(டை)ஞ்சி ]  டை என்னும் கடின ஒலி (வல்லொலி) ஒழிந்தது. கரைஞ்சி என்பதும் இடைக்குறைந்து கஞ்சி என்றே  முடிதலால்  இச்சொல் இருபிறப்பி ஆகும்.  கடை, கரை என்பன வினைச்சொற்கள்.  சி என்பது விகுதி.

இஞ்சி என்ற சொல்:

இஞ்சி என்ற சொல்,  இன்+ சி என்பது தவறு,  அதில் இனிமை எதுவுமில்லை. இடை இடையே சிறிதாகி அதன் உடற்பகுதி அமைவதால், இடை+சி > இடைஞ்சி என்றாகி பின் கடின ஒலியாகிய டை குறைந்து அல்லது கெட்டு, இஞ்சி என்னும் சொல் அமைந்தது. சி என்பது ஒரு விகுதியும் சிறுத்தல் என்ற குறிப்பும் ஆகும். இது நன்கு அமைக்கப்பட்ட சொல். காரணம் சி என்ற சிறுத்தல் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுடன் ஒரு விகுதியுமாய் ஆனது.

மீண்டும் சந்திப்போம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சில திருத்தங்கள் செய்யப்பட்டன }

( தட்டச்சுப்பிறழ்வுகள்) 27032024        }

குறிப்பு: எழுத்துக்கள் தாமே மாறிக்கொள்கின்றன.

கவனம்.  மாற்றங்கள் போல் தோன்றினால் பின்னூட்டம்

இட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 27032024 1613

Please do not enter compose mode  esp  with your mouse.