அரசனைக் குறிக்கும் அடிச்சொல்: அர் என்பது. பழைய இடுகைகள் காண்க. தொடர்புடைய சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இவ்வடிக்கு வேறு பொருள்களும் உண்டு. எ-டு: அர் (சிவப்பு) : அரக்கு.
ஆகுதல் என்பதை ஆவுதல் என்றும் சிலர் பேச்சு வழக்கில் உச்சரிப்பர். க- வ திரிபு.
ராவ் என்ற பட்டப்பெயர் .
ராவ் அது > ராவது > ராவத்
இது தமிழிலிருந்து போந்த அயல் திரிபு. அரசனின் ஆட்கள்/உறவினர் ஆனவர்கள் என்பது பொருள்.
அது என்பது அஃறிணை விகுதி என்ற இலக்கணம் பின் போற்றப்படவில்லை. கந்தா சொன்னிச்சு, செல்வம் கடைக்குப் போச்சு என்றெல்லாம் பயன்பாடு அலைப்புறுவது காண்க.
ராண ( மகாராணா) என்பது:
அரண்> (அரணன்) > அரணா > ராணா. ( அரசன், அரண் உடையான்).
பழங்காலத்தில் அரசர் பல பெண்களுடன் தொடர்புகொண்டிருந்தனர். இது அவர்கள் தங்கள் வேலையில் இருந்த கவனத்துக்கு முரணாய் அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்குப் பல பெண்கள் போட்டி போட்டகாரணத்தால், சில சிற்றிலக்கியங்கள் தோன்றி, அரசனின் மேய்வினை உயர்த்திப் பாடின. அரசன் போரில் வென்ற காலை அவனைப் பல பெண்டிரும் அணைக்க விரும்பியதாகப் பாடுவதுண்டு. ( கலிங்கத்துப்பரணி). அரசனுடன் தொடர்பு கொண்டோருக்குப் பல பட்டங்கள், வாய்ப்புகள் சென்று சேர்ந்தன. இப்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் முதலியவை பதவி ஏற்றம் அடைந்தனர். எல்லா அரசர்களும் இவ்வாறு நெகிழ்வுடையவர்களாய் இருந்தனர் என்பது இதன் பொருளன்று.
மற்றும்:
ராணா + ஆவுது > ராணாவுத். ( அரசனின் உறவினர்)
வைப்பாட்டி என்ற சொல்:.
ஆயிரத்துக்கு மேற்பட்ட வைப்பாட்டிகள் இருந்த மன்னர்களும் உலகில் உண்டு.
இதனால் அரசனின் சுற்றம் விரிந்து, அவன் ஒருவகையில் அரசாட்சியில் வலிமையுற்றான். ( enlargement of ground support). They (those who were so connected) could also function as eyes and ears of the monarchy. This was better than appointing unknown and inexperienced outsiders.
வைப்பு என்பது பணம் கொடுத்துவைத்தலையும் குறிக்கும். பணம் - பொன், மணி, இதர செல்வங்களையும் குறிப்பது தெளிவு.
வைப்பாட்டி என்ற சொல் இதனையும் மறைமுகமாக/ நேரடியாகக் குறிக்கும். நாடு எதிரியால் கைப்பற்றப்படும்போது, இச்செல்வங்கள் ஒருவகையில் காப்பாற்றப்பட்டன. பட்டம்கொள் மன்னன் பகைவரிடம் நாட்டை இழக்க நேர்ந்தால், அவன் இக்கூட்டங்களுக்குள் மறைந்து வாழவும் ஒருவேளை வாய்ப்பு அடையலாம்.
இவற்றைப் பண்டை ஆட்சியாளர்களின் வலிமையாக்கம் என்றும் கருதலாம். இவற்றில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.
ராசபட்சே தம் உறவினரையே உயர்பதவிகட்கெல்லாம் நேமித்து ஆண்டது கவனிக்க. இன்றை அரசியல் நெறிகள் இதை ஏற்கவில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு ( edit) : பின்.
குறிப்புகள்.
1. இது முன்னிருப்பவரை உளப்படுத்தாத தன்மைப் பன்மை விகுதி, ஏம்.
2 விசனம் < வீசு + அன் + அம், > விசனம், சொல்லமைப்புப் பொருள்: வலிமையாய் விரித்து வீசுதல்,. துயரத்தை வீசுதல். முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர். தாவு என்ற சொல், ஒருவன் இல்லறத்திலிருந்து துறவுக்குத் தாவுதலையும் குறிக்கும். தாவு+ அம் > தாவம், முதனிலைக் குறுக்கம்., >தவம். தப்பு+ அம் > தபம் > தவம், (ப - வ போலி);, இல்லறத்திலிருந்து தப்பித் துறவியாதல், ---- எனப்பலவகையாய் பொருள் கூறக்கூடிய சொல் தவம் என்பது,
இன்று தித்திக்கும் திங்கட்கிழமை. அன்பர்கள் எமக்கு தினமும் வாழ்த்துகள் அனுப்புகிறார்கள். அதில் திங்கட்கிழமை தித்திப்பதாக எழுதுவார்கள். யாமும் அவ்வாறே ஏற்றுக்கொள்வேம். மனம் மகிழ்வாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காகத்தான் முன் காலத்தில் மனம்போல் வாழ்வு என்றனர். வாழ்த்துக்கள் உங்களுக்கு.