சனி, 29 ஜனவரி, 2022

விசித்திரம் என்பது

 இன்று விசித்திரம் என்ற சொல்லை ஆய்வோமாக.

இதனைக் காணுமுன் சில தொடக்கநிலைகள் உள்ளன. அவற்றுள், விசி என்ற சொல்லுள்ளது.  விசித்தல் என்பது ஒரு வினைச்சொல்லுமாகும்.

அடிச்சொற்களும்  அடிப்படைக் கருத்துகளும்.

விர்>  விரி.  ( விரிவு).

விர் > விய்  ( விரிவு)  [ எ-டு: வியன்,  வியப்பு,  வியத்தல்,  வியாபாரம், வியாழன் ]

விர் > விய் > (வியி) >  விசி.  ( ய ச போலி).   விரிவு.  விசித்தல்.

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி  ( புறநானூறு  61)  [பயன்பாட்டுக்கு எ-டு.]

விசித்து + இரு + அம் =  விசித்திரம்.   ( மிக்க விரிவாக இருத்தலால், வியந்து நோக்குமாறு பிறரை ஈர்ப்பது).

ஒன்று மிக்க விரிவாக இருக்கவேண்டும்,  அல்லது மிக்கச் சிறிதாக இருக்கவேண்டும்,  அல்லது முன்னர்க் கண்டிராத உருவிலோ, நிறத்திலோ இருக்கவேண்டும், அப்போது அது விசித்திரம், இவற்றுள் இச்சொல் அமைந்தது விரிவில். பின்னர் பிற பொருள்களைத் தழுவிற்று.  அவையெல்லாம் பெறுபொருள்களாம்.

கண்ணுக்குத் தெரிவதொன்று,  சட்டென்று காணாமற் போய்விட்டாலும் அதுவும் ஒரு விசித்திரமாய் ஆகிவிடக்கூடும்.  இவ்வாறு  கையாளப் பெறுகையில், இச்சொல் திரிசொல் ஆய்விடும். 

இதை இதற்குமுன் தமிழ் வாத்தியார்கள் வி+ சித்திரம் என்று பிரித்து,  விசேசமான வேலைப்பாடு என்பர்.

இத்தகைய விளக்கம் கூறுவதானால், 

வி  என்ற முன்னொட்டு, விழு என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை.

சித்திரம் என்பது செத்திரம் என்பதன் திரிபு என்றார் தேவநேயனார்.

செத்தல் - ஒத்திருத்தல். எப்பொருளைக் காட்டவிழைந்தனரோ அப்பொருளை ஒத்து இருத்தலே சித்திரம் என்பது இவ்விளக்கத்தில் கருத்தாகும்.

இனி இன்னொரு வகையில்:

ஒன்றன் பெரிதாய் இல்லாமல், சிறிதாகவே முன் காலங்களில் வரைவுகள் இருந்தன. ஆகவே சிறிதாய்க் காட்டியதே சித்திரம்  என்பதாகவும் விளக்கலாம்.

சிறுமை + திறம் >  சிறுத்திறம் >  சித்திரம் 

இவ்வாறு விளக்கினால் இது இடைக்குறைச் சொல் ஆகும்.

திரிபு:  ற என்பது ரகரம் ஆனது.  இவ்வாறு பல சொற்களில் வந்துள்ளது. பழைய இடுகைகள் காண்க. 

இது சிறுத்து + இரு + அம் > சிறுத்திரம் > சித்திரம் என்பது இன்னொரு விளக்கம்.

பெரிதாய் வரைய, வரைசீலை பெரிதாக வேண்டியிருத்தல், பெரிதாய் வரையத் தடையாய் இருந்திருக்கலாம். இது இடநெருக்கடியின்பாற் படும்.

இவ்வாறு விரித்துரைக்கொண்டு செல்லல் தவிர்த்து, இத்துடன் முடிப்போம்.

விசேஷம் என்பது விழுமியதாய் எடுத்துக்கொள்ளப்படுவது. விழு+ எடு+ அம்> விழேடம் > விஷேஷம்.   எடு> ஏடு: முதனிலைத் திரிபுத் தொழிற்பெயர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.





பத்திரம் - கிளை அதன் பகுதிளைப் பற்றி இருப்பது.

 பத்திரம் என்ற சொல்லை பிற எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஆய்ந்துள்ளனர். இச்சொல் சங்க த்  தமிழிலக்கியத்தில் வந்துள்ளது என்று எடுத்துக்காட்டி யுள்ளனர்.

இதன்மூலம் பத்திரம் என்பது பழம்பயன்பாடு உடைய சொல் தெரிகிறது.

பத்திரம் என்பது பேச்சுவழக்கிலும் இன்றுமுள்ள சொல் ஆகும்.

பத்திரம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் இலை அல்லது ஓலை என்பதுதான்.  என்னென்ன வகைப் பத்திரங்கள் உள்ளன என்பதை இங்கு நாம் இப்போது கூறவில்லை. 

இலை அல்லது ஓலை என்ற பொருளிலிருந்து இன்று அது ஆவணத்தைக் குறிக்க வழங்குகிறது.  பத்திரம் என்பதன் மற்றொரு வடிவமான பத்திரிகை, (பத்திரிக்கை)  என்பதும் தொடக்கத்தில் இலை என்றே பொருள்பட்டாலும், இப்போது தாளிகை என்ற பொருளில் பயன்படுகிறது.  நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று பல வெளிவருகின்றன. பத்திரிகை என்பது இவற்றுள் எதையும் அன்றாடப் பயன்பாட்டில் குறிக்கலாம். 

இலையானது கிளையைப் பற்றி இருக்கிறது.   பற்றி இருக்கை >  பத்தி இருக்கை>  பத்திரிக்கை > பத்திரிகை என்றே சொல்லே இது. சமத்கிருதம் என்ற மரத்தடிச் சாமியார் புனைவு மொழியும் இதையே பயன்படுத்துகிறது. இது காரண இடுகுறிப்பெயர்.

பற்றி இரு அம் >  பத்தி இரு அம் > பத்திரம் ஆகும்.

காலில் மஞ்சள் பற்றுப் போடுவதை பத்துப் போடுவது என்பதில்லை.  இவ்வாறு திரிந்த சொறகள்.  அவற்றை பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.

கிருதமென்பது மரத்தடிப் பூசாரிகள் மொழியாக இருந்தமையின், அவர்களும் அதைப் பயன்பாடு செய்தனர்..

முற்றுதல் >  (முத்து-தல்)>  முத்து>  (இடைக்குறைந்து) > முது >  முது இர்>  முதிர்.

இத்தகைய திரிபுகள் பல.  பலப்பல. சில திரிபுகளில் நுண்மைவேறுபாடு வழக்கில் எழுவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


 



முட்டையும் முட்டாளும்.

 முட்டையும் முட்டாளும்.  ஒரே அடிச்சொல்  முட்டு என்பது.

பூச்சியம்.  இன்மையிலிருந்து தோன்றுதலுண்மை.

பூ> பூத்து + இயம் > பூச்சியம்.

பாணம் என்பது பண்ணில் விளைந்து வெற்றிகொள்வதாவது.