ஆங்கிலச் சொல்லைப்போலவே ஒலித்து அதேபோலும் பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல உள்ளன. தண்ணீர்த்தாங்கி என்ற சொல்லில் உள்ள "தாங்கி" என்ற சொல், ஆங்கிலச் சொல்லான "tank" என்பதைப்போலவே ஒலித்து, அதே பொருளைத் தருகிறது. பாராளுமன்றம் என்னும் சொல்லும் "பார்லிமென்ட்" என்ற ஆங்கிலம்போலவே ஒலித்து அதே பொருளைத் தருகிறது என்றாலும் இவை இருவேறு வகைகளில் அமைந்த சொற்கள்.
தாங்கி என்ற சொல் வட இந்திய மொழிகளிலிருந்து போர்த்துக்கீசிய மொழிக்கு வந்து அப்புறம் ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகட்குப் பரவினது என்று சிலரும், இல்லை, அது போர்த்துக்கீசியருடைய மொழியிலிருந்தே இந்தியாவுக்குக் கிடைத்ததென்று வேறுசிலரும் கூறினர். ஆனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருமுன் இந்தச் சொல் அவர்கள் மொழியில் அவர்கள் நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தாங்குதல் என்ற சொல் வினைச்சொல்லாகத் தமிழில் இருக்கிறது. நீரைத் தாங்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நீர்த்தாங்கி. சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது சுமைதாங்கி.
"சம்சார சாகரத்தின்
துயர் தாங்கொணாத போது
பொறுமையோடு கணவன்--- அதைத்
தாங்கி வாழவேண்டும்"
என்றொரு கவி ஓர் ஐம்பதாண்டுகட்கு முன்பு எழுதினார். இதைக்கொண்டு, கணவனைத் "துயர்தாங்கி" என்றுகூடக் குறிப்பிடலாம்.
எதையும் தாங்குவது தாங்கி - தமிழில். நீர்த்தாங்கி என்பது தமிழ்க் கூட்டுச்சொல். இச்சொல்லின் கடைப்பாகம்தான் அங்கெல்லாம் போய் வாதத்தை விளைத்துக்கொண்டிருக்கிறது போலும். தாங்குதல் என்ற வினைச்சொல் மற்ற மொழிகளில் காணக்கிடைத்திலது. [?]
தாக்கு அப்புறம் நில்லு, நில்லு அப்புறம் தாக்கு என்று பொருள்படும் படைக்கலை சார் சீனமொழிச் சொற்றொடரில்-- ( தாங்க் தா, தா தாங்க் ) என்பதில் தாங்க் ( தாங்கிக்கொள் அல்லது நில்லு) என்று தமிழுக்கு ஒப்புமையான சொல் உள்ளது. தாக்கு என்ற சொல்லுக்கு நிகராக "தா" என்ற அடி என்னும் பொருளில்) சீனச்சொல்லும் உள்ளது. சீனக் கிளைமொழியில் "தா சீ " என்ற தொடரும் உள்ளது. சீ, செய் என்பன "செத்துபோ" என்பதாம். சா (தமிழ்) - சீ/ செய் ( செத்துப்போ) ( சீனம்).
இப்போது "பிறவட்டு" என்ற சொல்லுக்கு வருவோம். இது ஒரு பேச்சுமொழிச் சொல். பிறவட்டு என்றால் பிற வட்டாரம், இந்த வட்டாரம் அன்று என்பது பொருள். வட்டு என்பது வட்டாரம், வட்டம் என்பதன் சுருக்கமென்னலாம் எனினும் உண்மையில் வட்டு என்பதே வட்டம், வட்டாரம் என்பவற்றுக்கெல்லாம் அடிச்சொல். வட்டு+ ஆரம் = வட்டாரம் ( சூழ்வட்டம்). இப்போது ஒரு வாக்கியம்:
" உங்களுக்குக் கொரனா வேண்டுமென்றால், வௌவாலைப் பிறவட்டிலிருந்துதான் தருவிக்கவேண்டும்"
நல்ல அழகான வாக்கியமன்றோ?
ஆனால் அவன் "பிரைவேட் பள்ளியில் படிக்கிறான்" என்பதை அவன் பிறவட்டில் படிக்கிறான் என்று (ஆங்கிலமறியாதவர்) பேசி இரண்டையும் குழப்புவதிலிருந்து, இத்தகைய போன்மைச்சொற்களால் குழப்பமும் விளையலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்