செந்தமிழ்ச் சொல்வடிவம் உடையன ஒன்று மூன்று என்ற சொல்வடிவங்கள்.
மூன்+ து = மூன்று.
ஒன்+ து = ஒன்று.
எனவே:
ஒல் +து = ஒன்று
மூல் + து = மூன்று.
மேல் யாம் உரைத்தன ஒரு முன்னுரையே.
உங்கள் கவனத்துக்கு:
ஒன்று என்பது ஒன்னு, ஒண்ணு என்று திரியும். 0னகர ஒற்றுக்கு ணகர ஒற்று வரலாயிற்று.
மூன்று என்பது மூனு, மூணு என்று திரியும். இங்கும் 0னகர ஒற்றுக்கு ணகர ஒற்று வரலாயிற்று.
0னகர ணகரப் பரிமாற்றுகள் பற்றி விவரிக்கையில் இத்தகு திரிபுகளையும் முன்னிருத்திக் கொள்க.
அடிக்குறிப்புகள்
*விவரித்தல் என்பது விரி-வரித்தல் என்பதன் மரூஉ.
2 வாய்> வாயித்தல் > வாசித்தல். ய>ச
மூன்+ து = மூன்று.
ஒன்+ து = ஒன்று.
ஒன் என்ற ஒன்றைக் குறிக்கும் சொல்வடிவம் மூலவடிவம் அன்று. அதனின் மூத்த வடிவமும் முதல் வடிவமும் " ஒல்" என்பதே. ஒடு, ஒட்டு, ஒற்று, ஒற்றை. ஓடு என்று ஒல்-ஒன் என்பவற்றில் உறவும் பிறப்பும் உடையன பலவாம். அகல உடம்பின் வெளிக்கோடுகள் உள்நெருங்கி ஒன்றுபடு நெறியிற் சென்றிருக்க நடமாடும் மனிதனே ஒல்லியான மனிதன். இப்படி யாம்
விரி-வரிப்பது (>> விவரிப்பது)* முயன்று வாசிக்கப்2 புரிந்துகொள்ளக்கூடியதே.
இன்னும் ( ஒல் >ஒர்>) ஒரு என்பதும் உள்ளது.