மொழிகளைப் பிறர் உருவாக்கிக்கொண்டது போலவே முஸ்லீம்களும் சொந்தப்பேச்சைப் பண்படுத்திக்கொண்டதில் வியப்பில்லை. ஆங்கிலோ இந்தியர்கள் கூட அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தெரிகிறது. இதைப் பேசும் ஒரு குடும்பத்தினரையும் அறிந்து அளவளாவியதுண்டு. இப்போது அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.
முஸ்லீம் பரம்பரையினர் நண்ணிலக் கிழக்கு ( மத்தியக் கிழக்கு ) நாடுகளின் மொழிகளைக் கலந்து பேசுவதும் கிறிஸ்துவ வழியினர் போர்த்துக்கீசிய மொழியைப் பெரிதும் விரும்பிக் கலப்பதும் காணலாம்.
இது நிற்க.
தக்காணி என்பது தக்கு+ அணி என்பதன் திரிபு என்பர். தக்கு என்பது தாழ்ந்து செல்லும் நிலப்பகுதி. ( வடக்கிலிருந்து தெற்கு செல்லச்செல்ல நிலம் தாழ்ந்து போகும், ( கன்னியாகுமரிக்கு அப்பால் நிலம் கடலுள் ஆழ்கிறது ). இலங்கையை அடைய மேலெழுந்து மீண்டும் இந்துமாவாரிக்குள் ஆழ்ந்துவிடுகிறது.
கிழக்கு என்ற திசைப்பெயர் ( தென் கிழக்கு) கீழ் என்ற சொல்லினின்று வரும்.
நிலம் கீழாகி இறுதியில் கடலுள் இறக்கமாகச் செல்வதையும் அறியலாம்.
இனி தென்+ கண் + இ என்பதும் தெற்கணி > தெக்கணி என்று வருமென்பதை உணர்க. தென் என்பது தென் திசை. கண் என்பது இடம். இச்சொல் மிகப் பழைய தமிழில் உள்ளதுதான்.
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடியாள் கண்ணே உள என்ற குறளில் கண்ணே என்பது இடத்திலே என்று பொருள்படும்.
இக்கண் வருக : இங்கே வருக.
கண் விழி என்றும் பொருள்தரும்.
தெக்கணி என்பதே "டெக்கான்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு நிலநூலில் விளக்கப்படுகிறது.
தக்காணி, தெக்காணி என்பது தமிழ் முஸ்லீம்கள் கொடுத்த பெயர் என்று அறியலாம்.
இம்மொழிகளில் தமிழ் மூலங்கள் காணப்படுவது வியத்தற்குரியதன்று.
திருத்தம் பின்