பிம்பம் என்ற சொல் தமிழில் வழக்கில் உள்ள சொல்லே. பேச்சில் பெரும்பாலும் வருவதில்லை, சில பாடல்களிலும் கட்டுரைகளிலும் காணப்படுவதாகும்.
நிலவின் பிம்பம் என்று சொல்வதுண்டு. திரையுலகின் பிம்பங்கள் என்று அணிவழக்காக வருவதும் உள்ளது;
பிம்பம் என்பதன் உண்மையான பொருள் "நிழலுரு" என்பதாகும். நிழல் பெரும்பாலும் உண்மையுருவின் பின்வீழ்வது, நிழல் சில வேளைகளில் கருநிழலாகவும் வேறு சமயங்களில் ஒளிவீச்சாகவும் இருக்கும், இங்கு நாம் கருதுவது பின்னது ஆகும்.
இது எப்படி அமைந்துள்ளது என்பது யாம் முன்பு விளக்கியதுண்டு. அதை மறுபதிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
பின்+ பு + அ,ம் = பின்பம். இது பின்னர் பிம்பம் என்று என்று மாறியமைந்தது.
பின்விழும் உரு அல்லது பின்வீச்சுரு என்று கூறலாம்.
பிம்பம் என்பது தமிழ்த் திரிபுச் சொல்.
நிலவு ஒரு உருண்டை ஆதலால் உண்மையில் அதற்கு முன் பின் என்பன இல்லை. நாம் காண்பது நமக்கு முன்னாகத் தெரியலாம் அல்லது உணரப்படும்
முன்வீழ் ஒளியுருவுக்காக "முன்பம்" அல்லது "மும்பம்" என்றொரு பதம் அமைந்திலது; எனவே இது காரண இடுகுறிப் பெயர் ஆகும்.