இப்போது
சிருஷ்டித்தல் எனப்படும் சொல் எங்ஙனம் புனைவுற்றது என்பதை ஆராயலாம்.
அகர
வருக்கச் சொற்கள் பல சகர வருக்கமுதலாகின என்பதை முன்னர் பல இடுகைகளின் மூலம் உணர்த்தியுள்ளோம்.
எடுத்துக்காட்டாக
:
அமண்
> சமண். அமணர் > சமணர்.
அடை
> சடை.
தலைமயிர்
அடர்வாகக் கட்டப்பட்டுத் தொங்குவது சடை.
அடு
> அடை;; அடு> அடர். இவற்றைப் பொருளுணர்ந்து
கொள்க.
இடையில்
ஒரு மெய்யெழுத்துப் பெற்று நீளுதலும் சொல்லாக்கத்தில் உளது.
அடு> அண்டு,
அண்டு> அண்டை. அண்டை . சண்டை.
உடலை
அடுத்து அணியப்படுவது அடு> சடு > சட்டை.
அடுத்துச்
சென்று விளையாடுவது சடுகுடு.
இப்படியே
சென்றுகொண்டிருக்கலாம். ஆனால் நாம் இதுகாறும் கூறினவற்றை வைத்து சிருஷ்டி என்ற சொல்லின்
ஆக்கத்தைப் புரிந்துகொள்வோம்.
சிருஷ்டி
என்பதன் தலைச்சொல் சிரு. இதைப் பின்னோக்கினால் இரு என்பதாகும்.
ஆக.
இரு> சிரு.
இனி
ஷ்டி என்பதை ஆய்வுசெய்யலாம்.
உள்
+ து என்பது உள்ளது என்பதன் குறுக்கம்.
கணித்தல்
என்பதில் இகரம் வந்து வினையாதல் போல,
(கண்+
இ ) உள்+ து என்பதுடன் ஓர் இ சேர்க்கப்படும்.
உள்+து+இ. இதன் பொருள் உள்ளதாக்கு என்பதாகும்.
இவற்றைப்
புணர்த்த உட்டி என்றாகும்.
ஏற்கனவே
கிடைத்த இரு என்பதுடன் உட்டி என்பதை இணைக்க.
இரு
> சிரு.
சிரு
+ உட்டி = சிருட்டி.
இரண்டு
உகரங்கள் தேவையில்லை. ஒன்று போதும். மற்றது களையப்படும்.
பொருள்: உள்ளிருக்கும்படி செய்தல். உண்டாக்குதல். பொதுவாகத்
தோற்றுவித்தல்.
இதை
மென்மையாக்கி மெருகூட்ட, ஒரு ஷ் போடவேண்டியது.
சிருட்டி
> சிருஷ்டி > சிருஷ்டித்தல்.
உளதாக்கி
உடனே மறைந்துவிடாமல் இருக்கச் செய்தலே சிருஷ்டித்தல். அல்லது சிருட்டித்தல்.
இது
உண்டானது இப்படித்தான். எம்மொழியாயினும் வாழ்க.
will edit