இன்று ரீதி என்ற சொல்லைப் பார்க்கலாம்.
ரீதி என்ற சொல் உள்ள நிலைமை என்று பொருள்படும். "குடியுரிமை பெற்றவர்தாம் சங்கத்துக்குத் தலைவர் ஆகலாமென்ற ரீதியில் பேசுவது தவறு. காரணம் நம்
சட்ட திட்டங்களில் அப்படி இல்லை" என்ற வாக்கியத்தில்
ரீதி என்பது என்ன பொருளில் பயன்பாடு கண்டிருக்கிறது
என்று கவனியுங்கள்.
இருக்கும் நிலை என்பதே ரீதி ஆகும்.
இது இருதி என்ற சொல்லின் திரிபு. இறுதி என்பது வேறு.
இருதி என்பது தன் தலையை இழந்ததுடன், ரு என்பது
ரீ என்று திரிந்துவிட்டது.
இருதி > ருதி > ரூதி > ரீதி.
இரு என்பது மலையாளத்தில் இரி என்று திரியும். ஆகவே
இரு > இரி > ரீதி எனினும் பொருத்தமே. இங்கு தி என்பது விகுதி.
இரு + ஈ + தி = இரீதி எனின், இருப்பனவாகிய தன்மைகள் ஈயும் (கொடுக்கும்) போக்கு என்று வரும். இதுவும் ஏற்புடைத்தே. இது ஒரு பல்பிறப்பி ஆகும்.
இதைமேலும் விளக்கலாம் எனினும் இதுவே போதுமானது.