ஞாயிறு, 18 ஜூன், 2017

Go to heaven now? சொர்க்கத்தைத் தாக்கிச் சில அறிவாளிகள்

எங்கே சொர்க்கம் என்று எல்லோரும்
 தேடிகொண்டிருப்பதாகச் சில சிந்தனையாளர்கள்
கிண்டலடிப்பதுண்டு.  எனக்குத் தெரிந்த வரை யாரும்
இப்படித் தேடிக்கொண்டு சாமி கும்பிடுவதாகத்
தெரியவில்லை.    ஓர்  அம்மையாரைக் கேட்டால்
அவர் மகன் நன்றாகப் படித்துத் தேர்வில்
வெற்றிபெற வேண்டும் என்று சாமிக்கு விளக்குப்
 போடுவதாகச் சொல்கிறார்.  சொர்க்கத்துக்குப் போவதற்காகச்
 சாமி கும்பிடுகிறேன் என்று சொல்வதில்லை.
இன்னொரு பெண்மணி என்ன வேண்டிக்கொள்கிறார்
என்றால் தம் கணவர் தம்மிடம் அன்பாக இருக்கவேண்டு
மென்பதற்காகச் சாமி கும்பிடுவதாகச் சொல்கிறார்.
புதிதாக ரொட்டிக்கடை வைத்தவர் கடை
நட்டமில்லாமல் ஓடவேண்டும் என்று
 வேண்டிக்கொள்கிறார்.   எல்லா விண்ணப்பங்களும்
இவ்வுலகில் தங்களுக்கு நிறைவேற வேன்டியவை
பற்றியனவாகவே உள்ளன. " நான் சொர்க்கம் செல்ல
 வேண்டும் "   என்று யாரும் கும்பிட வில்லை.

"சொர்க்கம்"   எப்போது வந்து "சாமி  கும்பிடுவ"   துடன்
இணைகிறது என்றால் யாராவது வீட்டில் இறந்துவிட்டால்
 அதற்கான சடங்குகளைச் செய்யும்போது
இறந்தவர் சொர்க்கம் செல்லக் கும்பிடுங்கள் என்று
 கும்பிடும் நிலையில்தான்.
 தமக்குச் சொர்க்கத்தில்   நம்பிக்கை
இல்லாதவரும் இத்தகைய சடங்குகளின்போது
கையெடுத்துக் கும்பிடுவதுண்டு.  ஆனால்
அப்போது சொர்க்கத்தைப் பற்றிய தீவிரச்  சிந்தை
 ஏதும் தோன்றுவதில்லை. சொர் க்கம் இருக்கிறதா
 இல்லையா என்பது  வேறு வேலையில்லாத
பகுத்தறிவுவாதிக்கு ஒரு பிறச்சினையே தவிர
சாமி கும்பிடுகிறவர்களுக்கு இல்லை.
சடங்குகள் செய்யும் பூசாரிகூட இதைப்பற்றிக்
கவலைப் படுவதில்லை.

பூசாரிக்கு அது வேலை.  சடங்குகளை முடித்துவிட்டுச்
சம்பள த்தை வாங்கி க்கொண்டு போய்விடுவார்.
இறந்தவர் வீட்டில்  இறந்தவருக்கு அந்தச் சடங்குகளைச்
செய்து முடித்துவிட வேண்டும் என்ற நிலை.  யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அலட்டிக்கொண்டு இருப்பவன் பகுத்தறிவுவாதிதான். இவன் பேசுவது ஒரு நேரம்
போக்கும் வேலையாகி விடுகிறது.  இப்  பேச்சு  இவனுக்கே பெரும் கவலையைத் தருகிறது.

இருப்பவர் எவரும்  தனக்குச் சொர்க்கம் வேண்டும் என்று
 கும்பிடுவதில்லை. இறந்தவர்க்கு ஏதேனும் செய்ய
முற்படுகையில்தான் சொர்க்கம் பற்றிய கொள்கை
தலைப்படுகிறது.  இறப்புக்குப்பின் ஒரு வாழ்நிலை
 உண்டா என்கிற ஆய்வு ஆன்மீகச் சிந்தனையாளனின்
கருத்திற்கு உட்பட்டது.  அது மக்களை ஆட்படுத்தும்
அல்லது ஆளும் கருத்தன்று. அது ஒரு பின்புலக்
கருத்துத்தான். அதனால் பகுத்தறிவுவாதி அதன்பால்
தொடுக்கும்  தாக்குதல், ஒரு குமுகப் பிறச்சினையை
அல்லது புரட்சியை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.


சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்ற
 வாதம் எழுமானால் இருந்தாலும் இருக்கலாம்
 என்பதே பலரின் நிலை  ஆகும். உண்மையில்
 இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சொல்ல
முடிவதில்லை என்பதுபோலவே இல்லை
என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.
அது இறந்தபின் உள்ள நிலையாதலால்  இருப்பவரைப்
பாதிப்பதில்ல்லை.  சொர்க்கம் என்பது
ஒரு நம்பிக்கைப் பொருள்.


இப்படி வாதத்தில் நழுவு பொருளாக உள்ள சொர்க்கம்
இந்து மதத்தில் முற்றிலும் நழுவி நிற்கிறது.  இதற்குக்
காரணம், மனிதன் இறந்தபின் இந்து மதத்தில் மறுபிறவி
கொள்கிறான்.  பிறப்பறுத்தபின் தான் முற்றிலும் இறையுடன்
இணைகிறான்.  ஆகவே சொர்க்கத்தைத் தாக்கிச் சில
அறிவாளிகள் புனைந்த கருத்துக்கோவைகள்  புள்ளி இழந்த   கருத்துக்களாகிவிட்டன.

You may like:

https://sivamaalaa.blogspot.sg/2015/01/blog-post_15.html


Your preview failed to load

Please close this window and try again.

சனி, 17 ஜூன், 2017

We shall return soon.

Our browsers did not function properly yesterday and today.
Please be patient.
We shall return soon.

வெள்ளி, 16 ஜூன், 2017

பண்டை ச் சொல்லமைப்புகள்


----------------------------------------
ஆதிகாலத்தில் சொற்களை அமைத்தவர்கள் மிக்க
எளிமையாகச் சிந்தித்து மிக்க எளிமையாகவே சொற்களை
 அமைத்துக்கொண்டனர்.   சொற்கள் நீண்டுவிடாதபடி
 பார்த்துக்கொண்டனர்.   அதிக முன்னொட்டு
பின்னொட்டுக்களைக்    கொண்டுசேர்த்தல் 1  புதிய பதங்களில்
 புதுமையைப் பதிந்துகொள்ள ஓர் உத்தி 2  என்றாலும் அதுவே
 முன்மை உத்தியாகி நீட்சி மிக்குவந்தால், மொழி கடினமாகிவிடுமென்பதையும் மண்டையில்
இருத்திக்கொள்வது நலமாகும்.


இதனைக் காத்தல் என்ற சொல்லை ஆய்வதன்மூலம்
நாமறிந்து கொள்வோம். ஒரு வேடன் வேட்டையில்
கிடைத்த இறைச்சியை  குகைக்குள் கொண்டுபோய்ப்
பத்திரமாக வைக்கிறான்.  அவன் அதை அடுத்த
குகைவாழ்நனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாதவன்.
 வேட்டைக்கு ச்   சென்று அதை அடைய அடுத்த
குகைக்காரன் எந்த ஒத்துழைப்பையும் நல்காகாமையின்
அவனுடன் பகிர்ந்துகொள்ளுதலைத் தவிர்த்துவிடுகிறான்.
இதிலிருந்து பொருளைக் காத்துக்கொள்ளுதல்
என்னும் செயல்பாடு தொடங்குகிறது. காத்தலினின்று
பெறப்படுவதே தனியடைமை என்னும் தத்துவம் ஆகும். (The
concept of private ownership of property ).
அவனைக் கேட்காமல் அடுத்த குகைமாந்தன் அதை
எடுத்துகொண்டால் திருட்டு என்பது தோன்றுகிறது.
 இறைச்சியை வேட்டையாடிக் கொண்டுவந்தவனே
உழைத்தவன்.   மற்றவன் அதற்காக ஒன்றும்
செய்யவில்லை ஆதலால் உனக்கு ஏன் பங்கு
கொடுக்கவேண்டும் என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.
தன்பொருளினின்றும் பிறனை விலக்கிவைத்தலே
காத்தல் ஆகும்.


காத்துவைத்த பொருள் விருப்பத்துக் குரியது.  விரும்பாததை
எவனும் காத்துவைப்பதில்லை. இப்படிக் காக்கப்பட்ட
பொருள் என்பதை உணர்த்த கா என்ற சொல்லினின்று
காம் என்ற சொல் படைக்கப்பட்டது.  இது புலவன்
படைப்பு அன்று.  குகை மாந்தன் அமைத்த மிகப்
 பழைய சொல்.  அதனால் அதில்
 நாம் வெளிப்படையாக அறியத் தக்க முன்னொட்டு
 பின்னொட்டு என்ற இணைப்பு உறுப்புகள் ஏதும் இல்லை.
மகர ஒற்று என்ற மகர மெய்யெழுத்து மட்டுமே உள்ளது.
இது எளிமையான சொல்லமைப்பு.  வடிவம் என்பது
மறுக்கொண்ணாதது ஆகும். காத்தல் என்பதினின்று
காம் முற்றிலும் விலகாமல் ஒட்டிகொண்டிருந்த
 நிலையை   மாற்றி காம்  என்பதனோடு அம் என்ற
விகுதி சேர்த்து காமம் என்ற சொல்லை உருவாக்கினான்.
 இது புலவன் தந்த சொல்  நீட்சியாகும்.  
 கா > காம் என்பதே தொல்வடிவம்.
காமம் என்பதில் மகர ஒற்று நீங்கிய காம என்ற
வடிவம் ஒரு பெறப்பட்ட வடிவமைப்பு ஆகும்.
அது பிறமொழிகட்கு ஏற்ற ஒலியுடன் அமைகிறது.
காம் என்பதே கா என்பதிலிருந்து அமைந்த முந்து
வடிவமாகும். காக்கப்பட்டது விருப்புக்குரித்தாயிற்று
என்பதை அது காட்டப் போதுமானது. நாளேற நாளேற
அது பொருள் தேய்ந்து நின்றதனால் அதனைச் சரிசெய்யக்
காம் உறுதல் என்பது அமைந்தது.  காம் என்பது காத்தற்குரிய
எழுநிலையைக் குறிக்கின்றது. காக்கப்பட்ட பொருள்
அவ்வினையை அடைவதுதவிர வேறொன்றும்
செய்வதில்லை.  ஆகவே காம்  என்பது
சொற்பொருண்மையில் தன்வினை ஆகும். காத்தல்
என்பதே பிறவினைச் சொல் என்பதை அறியவேண்டும்.
 ஆயினும் காத்தல் எனற்பாலது பிறரை
விலக்குதலாகித் தான் வைத்திருத்தலாகிய
செய்கையையும் காமம் என்பதும் காம்
என்பதும் தன்வினையாகிய மனவுணர்வினையும்
அதாவது விருப்பத்தையும் குறிக்கின்றன.


இதே போன்ற அமைப்பைக் கொண்டதே சாமி
என்பதும்.  சாய்ந்து அல்லது  விழுந்து கும்பிடப்படுவதே
சாமி ஆகும். சாய்  > சாய்ம் >சாம் > சாமி
ஆனது. யகர ஒற்று மறைவது பெரும்பாலான சொற்களில்
உள்ளது. இவற்றைப் பலுக்காமல் மக்கள் சிக்கனம் செய்ததே
நிகழ்வு ஆகும். இதற்கும் காமம் என்பதற்கும் உள்ள வேறுபாடு
 இந்த யகர ஒற்றுத்தான். சாய்  என்ற சொல்லிலிருந்து
 வழக்கில் வந்து உலவும் திரிபுகள் சாஞ்சு  சாஞ்சான் .
போன்ற வழக்குகள்.   யகரம் வேறு எழுத்துக்களாக
 மாறுதல் தெளிவு. பொய்ம்மெய் என்பது பொம்மை
என்று மாறுதலும் யகர மெய் இழத்தலும் காண்க.

இனி வேறு சொற்களுடன் வந்து உரையாடுவோம்;

Earlier posts  or copies today  went missing;  this is a rewritten post.
Later the post coupons were subjected to frequent error message.
 An error occurred while trying to save or publish your post. Please try again

Footnotes:

1         Prefixes and Suffixes

2.    (உய்த்தி) (யகர ஒற்றுக்கள் வீழும் என்பதை
முன்பே கூறியுள்ளோம், மறவாதீர் )   - உத்தி

பண்டை ச் சொல்லமைப்புகள்