நெல்லைக்குள் அமெரிக்கா நீங்கி
நிறுவுதொழில்
எல்லைக்குள் நில்லாமல் இடம்விட்டு
உருவினதே!
செல்லவும் ஆயினரோ சீர்சான்ற
ஆந்திரத்துள்!
கொல்லவும் செய்ததெது வல்லூழல்
ஏந்தியகை.
தமிழ் நாட்டில் அதிக இலஞ்சம் கேட்டதனால்
ஓர் அமெரிக்க நிறுவனம், ஆந்திரா சென்று நிறுவியுள்ளதாகச்
சொல்லப்படுகிறது. வாழ்த்துக்கள் ஆந்திராவுக்கு.
நெல்லை = திருநெல்வேலி மாவட்டம்.
அமெரிக்கா நீங்கி : அமெரிக்கவிலிருந்து (முதலீட்டுடன்) வந்து;
இடம்விட்டு உருவினதே : அங்கிருந்து கழற்றிக்கொண்டு போய்விட்டதே.
கொல்லவும் : தொழில்வளர்ச்சியைக் கொல்லவும்.
வல்லூழல் = பெரிய ஊழல்.
ஏந்திய கை = இலஞ்சம் வேண்டிய அலுவலர்.
இதுபற்றி அமெரிக்காவில் ஒரு விசாரணை நடைபெறுகிறதாம்.